rudrateswarar

rudrateswarar

Friday, December 5, 2025

கார்த்திகை சோமவார தீக்ஷா வைபவம்

                                                                             சிவமயம்

                                                                    திருச்சிற்றம்பலம்

கார்த்திகை சோமவார தீக்ஷை வைபவம்


ஓம் ஹாம் சிவாயபரமகுரவே நம:

ஓம் ஹாம் ஈசான சிவாச்சார்ய பரமகுரவே நம:

ஓம் ஹாம் தத்புருஷதேசிக பாதேப்யே நம:


 ஶ்ரீகிரிகுஜாம்பிகா ஸமேத ஶ்ரீநாகேஸ்வர சுவாமியின் திருவருளாலும் குருவருளாலும் பக்குவமுள்ள ஆன்மாக்களுக்கு சிவாகமங்களில் விதிக்கப்பட்ட வண்ணம் சமய விஷேட நிர்வாண தீக்ஷை செய்து வைக்கபட உள்ளது.

ஏன் சிவாகம முறை ?

தீக்ஷாக்கிரியைகள் ஆகமங்களில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. அவை உயிர்கள் உய்யும் பொருட்டு சிவபெருமானால் அருளிச்செய்யப்பெற்றவை.

தீக்ஷை எனப்படுவது?

எதனால் மலம் மாயை முதலிய பாசங்கள் நாசமுண்டாகின்றதோ எதனால் சீடனிடத்து ஞானமுண்டாகின்றதோ அது தீக்ஷை எனப்படும்.

உயிரைப்பற்றிய ஆணவ மலத்தைக் கெடுத்து  சிவஞானத்தைக் கொடுப்பது தீக்ஷை எனப்படும். தமிழில் தீக்கை. 


உடலுக்குப் பலசடங்குகள் செய்யப் படுகின்றன  அது போல உயிராகிய ஆன்மாவிற்கு செய்யக்கூடிய சடங்கே தீக்ஷை. வாகனம் ஓட்ட, எப்படி ஓட்டுனர் உரிமம் தேவையோ, நிலம் வாங்க பத்திரப்பதிவு அவசியமோ, தொழில் துவங்க தொழில் உரிமம் தேவையோ, அது போல சிவபரம் பொருளோடு  சிவசம்பந்தம் எனும் ஆரம்பப்படி நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள இம்மை மறுமை நலன்கள் பெற  சிவபெருமான் திருவருள் பெற உரிமம் எனும் தீக்ஷை தேவை . தீக்ஷையின்றி செய்யப்படும் கிரியைகள் பயன் தரா.        

7 வயது முதல் எந்த வயதிலும் ஆண் பெண் இரு பாலரும் தீக்ஷை பெற்றுக் கொள்ளலாம். தீக்ஷை பெற்றவர்கள் மட்டுமே விதிப்படி திருநீற்றை நீரில் குழைத்து திரிபுண்டரமாக பூச முடியும் . சமய தீக்ஷை பெறும்போது குருவானவர்  உபதேசம் செய்து திருநீற்றை எப்படி சுத்தி செய்து அபிமந்திரிப்பது என்ன மந்திரம் சொல்லி எங்கே எந்த அளவில் தரிக்க வேண்டும் என்று  அருளுவார்.

விஷேட தீக்ஷை பெறும்போது குருவானவர் உபதேசத்துடன் சிவபூஜை செய்யும் அதிகாரம் அளித்து சிவபூஜை செய்யும் முறையையும் கற்றுத் தருவார். 

நிர்வாண தீக்ஷை பெறும்போது குருவானவர்  அத்துவ சோதனை செய்து உபதேசித்து நித்ய சிவாக்னி செய்யும் அதிகாரம் அளித்து அதற்கு பயிற்சியும் அளிப்பார்   

 குருவின் மூலம் உபதேச வாயிலாக கேட்டபின்னே பஞ்சாக்ஷரம் ஜெபிக்க அது பலன் கொடுக்கும். மாதா பிதா குரு தெய்வம் என்பது தான் சைவம் காட்டும் நெறி . எனவே குருவின் மூலம் தீக்ஷை பெற்று மந்திர உபதேசம் பெற்று அவர் காட்டும் வழியில் கிரியைகளைக் கற்க வேண்டும். குருவே சிவமெனக்கூறினன் நந்தி என்பது திருமூலர் வாக்கு.

 

ஏன் தீக்ஷை  பெற வேண்டும் ?

1.    சிவபெருமானை சிவாகமங்களில் விதித்தபடி வழிபாடு செய்வதற்குரிய அதிகாரம் பெற்று ஐந்தெழுத்து ஓதி முப்புரிமாணமாக திருநீறு அணிந்து சிவபூசை செய்யலாம்.

2. தீக்ஷையின் மூலம் ஞானம் பெறலாம். ஞானத்தின் வாயிலாக வீடுபேறு எனும் முக்தி பெறலாம்.

 3. சமய தீக்ஷை பெற்றாலே அந்த உயிர்களை எமன் அணுக மாட்டான். அவ்வுயிரை வாங்க ஸ்ரீகண்ட பரமேஸ்வரன் தான் அதிகாரம் பெற்றவர். எமன் அவ்வுயிரை வாங்க அதிகாரம் பெற்றவனில்லை. எமன் அவ்வுயிரை வாங்காத காரணத்தினால் நரக துன்பம் இல்லை. நம் வாரிசுகள் பிதுர்க்கடன் ஆற்றாவிட்டாலும் கூட நமக்கு ஆவியுலக இன்னல்கள் இல்லை. 

4. விசேட தீக்ஷை பெற்றால் அவ்வுயிரை ஸ்ரீஅனந்த தேவர் வாங்குவார்.

5. நிர்வாண தீக்ஷை பெற்றால் ஸ்ரீசதாசிவ மூர்த்தி வாங்குவார்.

6. இறைவன் தீக்ஷா கிரியையின் மூலம் மட்டுமே அருள்புரிகிறார்.

7. திருநீறு ருத்ராக்ஷம் தரித்து தீக்ஷை பெற்றவர்களிடம் பில்லி சூன்யம் ஏவல் கண்திருஷ்டி இவை நெருங்காது.

8. மந்திரப்பிராணயாமம் செய்யும் போது இருதய நோய் வராது. மாரடைப்பு நெருங்காது .

9. சிவோகம்பாவனை மூலம் மனம் அடங்கும், நிம்மதி கிட்டும் ஐம்பொறிகளும் நமக்கு குற்றேவல் புரியும் அப்பர் பெருமான் அதை பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி என்றருளியதன் மூலம் அறியலாம். பாவனையானது உயிரைத் தூய்மைப்படுத்தும்.

10. சகளீகரணம் ( கரசுத்தி , அங்கசுத்தி ) எனும் நியாசத்தின் மூலம் சிவமந்திரங்கள் நமது கரணங்களில் பதிக்கப்படுவதால் வியாதிகள் நீங்கும். அது தான் இன்றைய ரெய்கி.

11. முத்திரைகள் பிடிப்பதால் பிசியோதெரபி செய்யும் பலன் கிடைப்பதால் நரம்பு சம்பந்தமான வியாதிகள் நெருங்காது.

12. தீக்ஷை பெற்று ஆன்மார்த்தபூஜை செய்தால் நமது ( பிராரத்தம் ) வினைகள் நீங்கும் . சிவபெருமான் நம் ஆன்மாவில் அண்ணித்திருப்பதால் ஆகாமியம் ஏறாது.

13. வறுத்த நெல் எப்படி முளைக்காதோ அது போல தீக்ஷை பெற்ற உயிர் பிறவிக்கு வராது.

14. தீக்ஷை பெற்றவர்கள் இருபிறப்பாளர் ஆகின்றார், தீக்ஷாநாமம் குருநாதரால் புதிதாக சூட்டப்படும்.


நாள்: ஸ்வஸ்திஸ்ரீ விஸ்வாவசு வருஷம் கார்த்திகை மாதம் 22 ஆம் தேதி  08-12-2025 திங்கள்கிழமை   ( காலை 6.30 மணி )

தீக்ஷாத்தானம்:

ஸ்ரீ கிரிகுஜாம்பிகா ஸமேத ஸ்ரீ நாகேஸ்வரர் ஆலயம்

(கொங்கு திருநாகேஸ்வரம்) முதலிபாளையம் 

நீலம்பூர், கோயம்புத்தூர் – 641062


நம்மை உய்விக்க வந்த ஞானகுருநாதர் :

சிவஸ்ரீ. ஸத்யோஜாத தேசிகர் அவர்கள்


ஆலய தொடர்பு அலைபேசி எண்:

 -9361185152

  ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயம்

https://goo.gl/maps/tLaSkc54VPu1qTkk7


குறிப்பு:

தீக்ஷை பெறும் அன்பர்கள் புதிய மாற்று வஸ்த்ரம் கொண்டு வரவும்.

சமய தீக்ஷை பெறுவோர் பஞ்சபாத்திர செட் கொண்டு வரவும்.

விஷேட தீக்ஷை பெறும் அன்பர்கள் பூணூல் புதிதாக கொண்டு வரவும்.

நிர்வாண தீக்ஷை பெற விரும்புபவர்கள் மட்டும்  ஸ்ரீகுருநாதர் அவர்களை தொடர்பு கொள்ளவும்.

கண்டிப்பாக காலை 6.30 மணிக்கு வெறும் வயிற்றுடன் ஆலயத்தை வந்தடையவும்.


                                                            திருச்சிற்றம்பலம்.