rudrateswarar

rudrateswarar

Tuesday, June 28, 2016

முக்கண்பரமரின் முறுவல்




                        ஓம்நமசிவாய                  
        
முக்கண்பரமரின் முறுவல்

திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணத்தில் எம்பெருமானின் அருள் வெளிப்பாடு நிகழும்போதும் நேரில் வெளிப்படும்போதும் புன்முறுவல் பூத்து உள்ளார் முறுவல் என்பது குறுநகை அல்லது புன்னகை எனப்படும் அந்த முறுவல் நிகழ்ந்த இடங்கள் எவையெவை என்று தொகுத்து உள்ளோம்.

                      திருச்சிற்றம்பலம்


1. திருநாளைப்போவார் கனவில்

திருநாளைப்போவார் புராணம் பாடல் -27

இன்னல்தரும் இழிபிறவி
   இதுதடையென் றே துயில்வார்
அந்நிலைமை அம்பலத்துள்
   ஆடுவார் அறிந்தருளி
மன்னுதிருத் தொண்டரவர்
   வருத்தமெலாந் தீர்ப்பதற்கு
முன்னணைந்து கனவின்கண்
   முறுவலொடும் அருள்செய்வார்

2.திருக்கயிலையில் எம்பெருமானிடம் ஆகம உபதேசம் கேட்ட உமையம்மை அன்ணலாரை அர்ச்சனை புரிய ஆதரித்த போது

திருக்குறிப்புத்தொண்டர் புராணம் பாடல் -52

நங்கை உள்நிறை காதலை நோக்கி
   நாய கன்திரு வுள்ளத்து  மகிழ்ந்தே
அங்கண் எய்திய முறுவலும் தோன்ற
   அடுத்த தென்கொல்நின் பால் ன வினவ
இங்கு நாதநீ மொழிந்தஆ கமத்தின்
   இயல்பி னால்உனை அர்ச்சனை புரியப்
பொங்கு கின்றதென் சையென் றிறைஞ்சிப்
   போக மார்த்தபூண் முலையினாள் போற்ற

3.திருஒற்றியூரில் சங்கிலிநாச்சியாரை பிரியேன் என்று சபதம் செய்ய பெருமான் அருளை சுந்தரர் வேண்டி நிற்கும்போது

ஏயர்கோன் கலிக்காமர் புராணம் பாடல் -246


என்செய்தால் இதுமுடியும்
    ஆதுசெய்வன் யானிதற்கு
மின்செய்த புரிசடையீர்
    அருள்பெறுதல் வேண்டுமென
முன்செய்த முறுவலுடன்
    முதல்வரவர் முகநோக்கி
உன்செய்கை தனக்கினியென்
    வேண்டுவதென் றுரைத்தருள

4.பரவைநாச்சியார் பால் முதல்முறை தூது சென்ற இறைவர்,அவர் மறுக்கவே மீண்டு சுந்தரர்பால் அணைந்தபோது

ஏயர்கோன் கலிக்காமர் புராணம் பாடல் -351

சென்றுதம் பிரானைத் தாழ்ந்து
    திருமுகம் முறுவல் செய்ய
ஒன்றிய விளையாட் டோரார்
    உறுதிசெய் தணைந்தார் ன்றே
அன்றுநீ ராண்டு கொண்ட
    அதனுக்குத் தகவே செய்தீர்
இன்றிவள் வெகுளி யெல்லாந்
    தீர்த்தெழுந் தருளி என்றார்3510

5.திருச்செங்காட்டங்குடியில் வயிரவர் கோலத்தில் இறைவர் சிறுத்தொண்டர் திருமனைக்கு எழுந்தருளும் போது

சிறுத்தொண்டநயனார் புராணம் பாடல் -35

அருள்பொழியும் திருமுகத்தில்
    அணிமுறுவல் நிலவெறிப்ப
மருள்மொழிமும் மலம்சிதைக்கும்
    வடிச்சூலம் வெயில்எறிப்பப்
பொருள்பொழியும் பெருகன்பு
    தழைத்தோங்கிப் புவியேத்தத்
தெருள்பொழிவண் தமிழ்நாட்டுச்
    செங்காட்டங் குடிசேர்ந்தார்

6.திருக்கயிலையில் சேரர் பெருமாளை நோக்கி அருளுகையில்

வெள்ளானைச்சருக்கம் பாடல் -45

மங்கை பாகர்தம் திருமுன்பு
    சேய்த்தாக வந்தித்து மகிழ்வெய்திப்
பொங்கும் அன்பினில் சேரலர்
    போற்றிடப் புதுமதி அலைகின்ற
கங்கை வார்கடைக் கயிலைநாயகர்
    திரு முறுவலின் கதிர்காட்டி
இங்கு நாம்அழை யாமை நீ
    எய்தியது ன் ன அருள்செய்தார்

  
              திருச்சிற்றம்பலம்

           போற்றி ஓம்நமசிவாய

சிவனடிமைவேலுசாமி 

Wednesday, June 22, 2016

இராவணனின் தேர்ப்பாகன் கூறிய அறம்



                       ஓம் நமசிவாய

இராவணனின் தேர்ப்பாகன் கூறிய அறம்


விரைந்து செல்லத்தக்க சிறந்த தேராயினும் நாம் வணங்கும் கயிலைநாதனாகிய  பரமேசுவரன் வீற்றிருக்கும் கயிலாய மலைக்கு மேல் நம் தேர் செல்வது அறம் அன்று என்று தேரைச் செலுத்திய பாகன் அறம் கூறினான். அவ்வறம் மொழிந்த பாகனை முனிந்து நோக்கித் தேரை விடு விடு என்று சொன்னான். தேர் செல்லாது போகவே கயிலைமலையை பெயர்த்து எடுக்கலுற்றான் இராவணன். அவனது முடியையும் தோளையும் நெடு நெடுவென இற்று வீழ விரல் வைத்த பெருமானின் பாதத்தை என் மனம் நினைவுற்றது என்று கடுகிய தேர்செலாது என்ற பாடலிலும் மூர்த்தி தன் மலைமீது என்ற பாடலிலும் அப்பர் சுவாமிகள் குறிப்பிடும் அறிய புராண செய்தி நமக்கு கிடைக்கிறது. இந்த வரலாற்றுக் குறிப்பு இவ்விரு பாடல்கள் தவிர வேறு எங்கும் காணப்படவில்லை.
             
            திருச்சிற்றம்பலம்

கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது
      கருதேல் உன் வீரம் ஒழிநீ
முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன்
      மொழிவானை நன்று முனியா
விடுவிடு என்று சென்று விரைவுஉற்று அரக்கன்
      வரை உற்று எடுக்க முடிதோள்
நெடுநெடு இற்றுவீழ விரல்உற்ற பாதம்
      நினைவு உற்றது என்தன் மனனே   தி.4 .14பா.11

இலங்கைக் கோமான் பாகனைப் பார்த்துத் திருக்கயிலையை நோக்கித் தேரோட்டு என்று ஏவினான் . அவன் கடுந்தேராயினும் கயிலாயம் மீது விடும் தேர் அன்று, விட்டாலும் செல்லாது  உன் வீரம் வீரபத்திரனிடத்தில் வேண்டாம்  வீரத்தை விட்டொழி என்னை முடுகுவது அறம் அன்று என்று மொழிந்தான் . அவனை மிகச் சினந்து விடுவிடு என்று முடுகினான் அவனும் முடுக்கினான் தேரை . சென்றான் இராவணன் விரைவுற்றான் வரையை எடுக்க முயன்றான் . முடியும் தோளும் நெடுநெடு என இற்று விழுந்தன .அவ்வாறு நிகழ ஊன்றி பெருவிரலைக் கொண்ட திருவடிகளை  என் உள்ளம் எண்ணலுற்றது . விரலின் ஆற்றல் தோன்றக் கூறினார் .

மூர்த்திதன் மலையின் மீது
      போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலால் பாய்ந்து
       உடன் மலையைப் பற்றி,
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும்
       அடர்த்து நல் அரிவை அஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார்
       திருப் பயற்றூரனாரே       தி.4 .32பா.10

திருப்பயற்றூரனார் சிவபெருமானுடைய கயிலைமலையைக் கடந்து புட்பகவிமானம் போகாதாக என்று அச்செய்தியைச் சொல்லிய தேரோட்டியை வெகுண்டு நோக்கி  மனத்தான் நோக்கிப் பூமியில் தேரினின்றும் குதித்து விரைந்து கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டு இராவணன் அதனைப் பெயர்த்து ஆரவாரம் செய்தபோது மலை நடுங்குதல் கண்டு பார்வதி அஞ்சும் அளவில் அவன் தலைகள் பத்தையும் விரலால் நசுக்கிப் பின் பாடிய தேத்தெத்தா என்ற இசையைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்பவரானார்   தேத்தெத்தா - இசை குறித்த அநுகரணம்
                        

             திருச்சிற்றம்பலம்
                      
         போற்றி ஓம் நமசிவாய

சிவனடிமைவேலுசாமி 

திக்கெலாம் தேசமெல்லாம் புகழும் தலங்கள்



                          ஓம்நமசிவாய
திக்கெலாம் தேசமெல்லாம் புகழும் தலங்கள்

திக்கெலாம் புகழும் திருநெல்வேலியும் திருவாரூரும் திருவீழிமிழலையும் திருக்காளத்தியும் தேசமெலாம் அறிந்து புகழும் திருநெய்த்தானமும் திருக்கச்சி ஏகம்பமும் தேயமெலாம் நின்று இறைஞ்சும் திருப்பாதிரிப்புலியூரும் என்று நம் திருமுறை அருளாளர்களால் தெறிவு செய்யப்பட்டுள்ளன என்பது அப்பெரியோர்களின் திருவாக்கால் அறிகிறோம்

நாமும் இந்த தலங்களைப்புகழ்ந்தும் இறைஞ்சியும் ஈசன் அருள் நாடி உய்வு தேடுவோமாக.
  
              திருச்சிற்றம்பலம்


அக்கு உலாம் அரையினர் திரை உலாம் முடியினர் அடிகள் அன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர் கொள் செம்மை
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலைத்

 திக்கெலாம் புகழ் உறும் திருநெல்வேலி உறை செல்வர் தாமே             தி.3ப.92-பா.7

கொன்று அடைந்து ஆடிக் குமைத்திடும் கூற்றம் ஒன்னார் மதில்மேல்
சென்று அடைந்து ஆடி பொருததும் தேசமெல்லாம் அறியும்
குன்று அடைந்து ஆடும் குளிர்ப்பொழில் காவிரியின் கரைமேல்
சென்றடைந்தார் வினை தீர்க்கும்நெய்த்தானத்து இருந்தவனே                தி.4ப.89பா.3

மாயம் எல்லாம் முற்ற விட்டு இருள் நீங்க மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தான் அவன்தன் திருவடிக்கே
தேயமெல்லாம் நின்று இறைஞ்சும் திருப் பாதிரிப்புலியூர்
மேய நல்லான் மலர்ப்பாதம் என்சிந்தையுள் நின்றனவே                          தி.4ப.94பா.4

அக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும்
          ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண்
கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை
          குளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னித்
தொக்குலாம் சடையினன்காண் தொண்டர் செல்லும்
         தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்தும்
திக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவா ரூரில்
         திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே             தி.6ப.30பா.2

காசணி மின்கள் உலக்கை யெல்லாம்
          காம்பணி மின்கள் கறையுரலை
நேச முடைய அடிய வர்கள்
          நின்று நிலாவுக என்று வாழ்த்தித்
தேசமெல் லாம்புகழ்ந் தாடுங் கச்சித்
          திருவேகம்பன்செம்பொற் கோயில் பாடிப்
பாச வினையைப் பறித்து நின்று
          பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே        தி.8திருவா.ப.9பா.4

 

அக்கனா அனைய செல்வமே சிந்தித்து
         ஐவரோ டழுந்தியான் அவமே
புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட
         புனிதனை வனிதைபா கனைஎண்
திக்கெலாம் குலவும் புகழ்த்திரு வீழி
மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
         புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்
பொடியணிந் தடிமைபூண் டேனே          தி.9ப.5பா.6

தக்கன் வெங்கதிரோன் சலந்தரன் பிரமன்
         சந்திரன் இந்திரன் எச்சன்
மிக்கநெஞ் சரக்கன் புரம் கரி கருடன்
          மறலி வேள் இவர்மிகை செகுத்தோன்
திக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி
         மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப்
         பொடியணிந் தடிமைபூண் டேனே         தி.9ப.5பா.10

  
பண்டிதுவே அன்றா கில் கேளீர்கொல் பல்சருகு 
கொண்டிலிங்கத் தும்பின்னூற் கூடிழைப்பக் - கண்டு 
நலம் திக் கெலாம்ஏத்தும் காளத்தி நாதர் 
சிலந்திக்குச் செய்த சிறப்பு.         தி.11ப.9பா.32

           திருச்சிற்றம்பலம்

        போற்றி ஓம் நமசிவாய

சிவனடிமைவேலுசாமி 

Tuesday, June 21, 2016

ஒன்றரைக் கண்ணன்

                                                         ஓம்நமசிவாய 

ஒன்றரைக் கண்ணன்

சிவபெருமானுக்கு மூன்று கண்கள் வலது கண் சூரியன் இடதுகண் சந்திரன்  நடுக்கண் நெற்றிக்கண் அது அக்கினி நெருப்புக்கண் .

இம்மூன்றில் வலப்பாகம் உள்ள வலக்கண் சிவனுக்குரியது இடக்கண் இடப்பாகம் உள்ள சக்திக்குரியது .நடுவில் உள்ள நெற்றிக்கண் இருவருக்கும் உரியது அதாவது ஆளுக்குப் பாதி இதையே அப்பர் பெருமானார் நகைச்சுவையாக கூறியுள்ளார் .நகைச்சுவை எனினும் தத்துவம் பொதிந்த பாடல் 
முருகப்பெருமான் சிவபெருமானின்  நெற்றிக்கண்ணினில் தோன்றியவர் சிவபெருமானுக்கு ஆறுமுகம் உண்டு ஐந்து முகம் நாம் அறிந்தது அதோமுகமாகிய கீழ்நோக்கிய முகம் ஞானிகட்கு மட்டுமே தெரியும் .எனவே ஆறுமுகங்களிலும் உள்ள ஆறு நெற்றிக்கண்களினின்று ஆறு தீப்பொறிகளாகத் தோன்றியவரே முருகப்பெருமான் .இந்த கருத்துள்ள பாடலில் தான் இறைவனை ஒன்றரைக்கண்ணன் என்று பாடியுள்ளார் 

                        திருச்சிற்றம்பலம்

இன்று அரைக்கண் உடையார் எங்கும் 
          இல்லை இமயம் என்னும்
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள்

           பாவைக்குக் கூறு இட்ட நாள்
அன்று அரைக் கண்ணும் கொடுத்து 

            உமையாளையும் பாகம் வைத்த
ஒன்றரைக் கண்ணன் கண்டீர் 

          ஒற்றியூர் உறை உத்தமனே
                                                          தி .4 ப .86.பா 7


                          திருச்சிற்றம்பலம்

                       போற்றி ஓம்நமசிவாய 

சிவனடிமைவேலுசாமி  
 

திருவமர் திருவளர்

                                                            ஓம்நமசிவாய

திருவமர் திருவளர் 




திருஅமர் தாமரையும் திருவளர் தாமரையும் பொருள் ஒன்றே .சீர்வளர் செங்கழுநீரும் சீர்வளர்காவியும் சொல் மாற்றமின்றி பொருள் மாற்றமில்லை . அப்பர்சுவாமிகள் திருவிருத்தப் பாடலுக்கும் மணிவாசகப்பெருந்தகையின் கோவைப் பாடலுக்கும் சொல் மாற்றமின்றி பொருள் மாற்றமில்லை .திருக்கோவையில் தலைவிக்கு சொல்லப்படுகிறது . அப்பர்  உமையம்மையை பாடியுள்ளார் .இவ்விரு பாடல்களிலும் மிகுந்த  ஒற்றுமையைக்   காணலாம் . இதுவே திருமுறைகள் இறைவனின் திருவாக்கு என்பதற்கு ஒரு சான்று .

            திருச்சிற்றம்பலம் 



திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொணெய்தல்
குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட மலிமறை யோர்கணல்லூர்
உருவமர் பாகத் துமையவள் பாகனை யுள்குதுமே
                                                                                                            தி. 4-ப. 97-பா. 10



திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண்டோங்கு தெய்வ
மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந்
துருவளர் காமன்றன் வென்றிக்கொடிபோன் றொளிர்கின்றதே
                                           தி.8 திருக்கோவையார்  பா.1


               திருச்சிற்றம்பலம்

            போற்றி ஓம்நமசிவாய 

சிவனடிமைவேலுசாமி