rudrateswarar

rudrateswarar

Saturday, June 4, 2016

திருவாசகத் தேன்

                                                    ஓம் நமசிவாய

 திருவாசகத் தேன் 


                                                          
                      திருச்சிற்றம்பலம்


தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி  
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை  
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்  
திருவாசகம் என்னும் தேன்.



திருவாசகம் நூலும் தேன். தேன் தன்னில் வைத்த பொருட்களைக் கெடாமல் காக்கும் தன்மை கொண்டது. திருவாதவூர் வண்டு திருப்பெருந்துறை சென்று குருமணியாக  வந்த இறைவனின் பாதமலரிலிருந்து எடுத்த தேன் திருவாசகம். அதுவும் நம்மை (ஆன்மாவை) தன்னுள்ளிருத்தி பக்குவப் படுத்தி கெடாமல் கரை சேர்க்கும். இந்த வாதவூர் வண்டும் தேன் பருகச் சென்று தேனே ஆகிவிட்டது.

அதை நம் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் திருக்களிற்றுப்படியார் நூலில் (சித்தாந்த சாத்திர நூல்) 
பின் வருமாறு பாடுகிறார்



பாய்பரியோன் தந்த பரமானந் தப்பயனைத்

தூய வாய்மலராற் சொற் செய்து-மாயக்

கருவாதை யாம்அறியா வாறுசெய்தான் கண்டாய்

திருவாத வூர் ஆளுந்தேன்



நூலும் தேன்! நூலாசிரியரும் தேன்!. திருவாசகத் தேன்! தந்தவரைத் தேன் என்று சிறப்பிக்கிறார். தித்திக்கும் தேனல்லவா?. அதுவும் திருவாசக நூலில் 51 இடங்களில் தேன் என்று சொல்கிறார். அதுவும் சிவபுராணம் தொடங்கி அச்சோப்பதிகம் வரை 51 பனுவல் தேன்!. என்ன ஆச்சரியம் பாருங்கள்!!.



திருவாசகத்தில் தன்னை நாயேன் என்று 63 இடங்களில் மணிவாசகர் கூறியதை நாயினும்  கடையேன் என்ற தலைப்பில் ஏற்கெனவே தொகுத்து உள்ள அடியேனுக்கு இந்த தேனையும் பருக பேராசை, நீங்களும் பருகுங்களேன்.(http://sivanadimai.blogspot.in/2013/04/blog-post.html)



01. தேன் ஊறி நின்று                சிவபுராணம் -அடி 47

02. தேனார் அமுதே                  சிவபுராணம் -அடி 63

03. தேனமர் சோலை                 கீர்த்திதிருஅகவல் -அடி 73

04. சுவைதருகோல்தேன்             திருஅண்டப்பகுதி -அடி 157

05. இன்தேன் பாய்த்தி                திருஅண்டப்பகுதி -அடி 173

06. கருணை வான்தேன்              திருஅண்டப்பகுதி -அடி 180

07. தேன்ஏயும் மலர்க்கொன்றை              திருச்சதகம் -12

08. தேனொடு பால்கட்டி                             திருச்சதகம் -36

09. தேனைஆன்நெய்யை                          திருச்சதகம் -38

10. தேன் நிலாவிய திருஅருள்               திருச்சதகம் -40

11. தேனே அமுதே                                      திருச்சதகம் -55

12. தேனைப் பாலை                                    திருச்சதகம் -58

13. தேனே அமுதே                                      திருச்சதகம் -85

14. தேனே அமுதே                                      திருச்சதகம் -90

15. அகம்நெக அள்ளூறுதேன்               திருச்சதகம் -98

16. தேனையும் பாலையும்                     நீத்தல் விண்ணப்பம் -21

17. கொழுந்தேன்                                        நீத்தல் விண்ணப்பம் -36

18. பால் ஊறுதேன்                                    திருவெம்பாவை -5

19. தேன் வந்தமுதின்                              திருஅம்மானை -4

20. கருணைத்தேன் காட்டி                      திருஅம்மானை -6

21. தேன் பாய                                               திருஅம்மானை -13

22. தேனையும் பாலையும்                    திருஅம்மானை -14

23. தேனாய் அமுதமுமாய்                    திருஅம்மானை -16

24. தேனார் மலர்க்கொன்றை                திருஅம்மானை -16

25. நந்தாத் தேனைப்                                திருப்பொற்சுண்ணம் -15

26. தேனக மாமலர்                திருப்பொற்சுண்ணம் -17

27 தேனார் கமலமே                                திருக்கோத்தும்பி  -2

28. தேன்உண்ணாதே                               திருக்கோத்தும்பி  -3

29. ஆனந்தத்தேன் சொரியும்               திருக்கோத்தும்பி  -3

30. தேனுந்து சேவடிக்கே                      திருக்கோத்தும்பி  -15

31 தேன்புக்க தண்பணை                   திருச்சாழல் -14

32.  ஆனந்தத் தேனிருந்த                       திருப்பூவல்லி -2

33. தேனாடு கொன்றை                        திருப்பூவல்லி -5

34. தேனுடனாம்                                       திருப்பூவல்லி -11

35.  தேன் தங்கித் தித்தித்து                திருப்பொன்னூசல்  -2

36. தேன்பழச் சோலை                         குயிற்பத்து  -4

37.   தேன்புரையுஞ்                                 திருத்தசாங்கம் -6

38. கோற்றேன் மொழி                         திருத்தசாங்கம் -7

39.  களிதரு தேனே                               திருப்பள்ளியெழுச்சி -9

40 சிந்தைஎழுந்ததோர் தேனே     கோயில் திருப்பதிகம் -8

41. தழங்கருந்தேன்                             அடைக்கலப்பத்து -10

42. தேனைப் பாலை                            புணர்ச்சிப்பத்து  -4

43. மருந்தே பெருந்தேன்                   புணர்ச்சிப்பத்து  -9

44. தேனார் சடைமுடியான்             உயிருண்ணிப்பத்து  -2

45. கோற்றேன் எனக்கென்                உயிருண்ணிப்பத்து  -8

46. தேன்பாய்மலர்                                 உயிருண்ணிப்பத்து  -10

47. தேனினைச் சொரிந்து                  பிடித்தப்பத்து -9

48. தேனாய் இன்னமுதமுமாய்     திருஏசறவு  -10

49. கருணைத் தேன்பருகி                குலாப்பத்து -5

50. தேன் உந்து செந்தீ                       திருவெண்பா -1

51. உகுபெருந்தேன்                             பண்டாய நான்மறை -2

                       திருச்சிற்றம்பலம்

                     போற்றி ஓம்நமசிவாய 

சிவனடிமைவேலுசாமி
 
 

4 comments:

  1. வணக்கம்
    தொல்லையிலும் பிறவி
    இதனை இயற்றியவர் யார்
    இது முதலில் எவ் நூலில் வெளிவந்தது
    இதனைப்பாடி திருவாசகம் பாடுதல் எப்போது ஆரம்பமானது
    Vakeesan.sv@gmail.com

    ReplyDelete
  2. தொல்லையிலும் பிறவி பாடியவர் யார்

    ReplyDelete