rudrateswarar

rudrateswarar

Thursday, November 30, 2017

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 11

                                                           ஓம்நமசிவாய 


தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 11

              திருச்சிற்றம்பலம்

பார்த்திப பூசாவிதி எனும் திருவாவடுதுறை நூலை திருமுறைவழியில் சிவபூசை என ஒளியரசு அவர்கள் தமிழ்ப்படுத்திய அவலம் கண்டோம்

ஓம் சிவசூர்யாசனாய நமஓம் சிவசூரியன் நிலை போற்றி
ஓம் சிவசூர்யமூர்த்தயே நம ஓம் சிவசூரியன் உரு போற்றி
ஓம் சிவசூர்யாய நம ஓம் சிவசூரியன் திருவடிகள் போற்றி
ஆசனம் என்பதற்கு நிலை எப்படி பொருத்தமாக இருக்கும் இருக்கை என்று சொன்னால் கூட பொருந்தும் மூர்த்தயே என்பது உருவாம் .இப்படி மொழிபெயர்த்த தில் உஷா தேவிக்கு தமிழ் படுத்த முடியவில்லை அதனால் உஷாதேவி அப்படியே ஷா வுடன் இருக்கிறார் பிரத்யுஷாவுக்கு சாயா தேவி என்று மொழிபெயர்ப்பு தொடர்ந்து சிவசூர்யனைப் போற்றுவதற்கும் இந்த பாடலுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்களே சிந்தியுங்கள்

இன்று எனக்கு அருளி இருள்கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின்தன்மை நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிது மற்று இன்மை
சென்றுசென்று அணுவாய்த் தேய்ந்துதேய்ந்து ஒன்றாம் திருப்பெருந்துறை உறை சிவனே!
ஒன்றும் நீஅல்லை அன்றி ஒன்றுஇல்லை; யார் உன்னை அறியகிற்பாரே
திருவாசக கோயில் திருப்பதிகப்பாடல்
இப்படி சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் கிரியைக்குப்பொருந்தாத பாடலை எப்படி பூஜைக்குப் பயன்படுத்துவது .

யோக பீடம் வித்யா பீடத்தை யோகபீடம் ஞானபீடம் என்று போட்டுள்ளார் . அதற்கு அவருக்கு விளக்கம் தெரிந்தால் போட்டிருக்கமாட்டார் .ஏனெனில் அந்த இடம் வேதாகமங்கள் மற்றும் திருமுறை களை பூசிக்குமிடம் சிவசிவ .
அடுத்து மேற்கு துவாரபாலரில் சரசுவதி (கலைமகள்) யும் மகாலட்சுமி(திருமகள்) யும் மட்டும் எடுத்துக் கொண்டார். அதே நிலை,உரு , திருவடி போற்றி தான் எல்லாப் பரிவாரங்களுக்கும்.

திருமகள் பாடலாம் இது
கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பிஎன் னுள்ளே நயந்துவைத் தேனே

இப்பாடலுக்கும் திருமகளுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா ?
கலைமகள் பாடலாம் இது
ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த்தோத்திரங்கள் சொல்லுமே

பார்ப்பதி என்றதுமே அது பார்வதியேயான அவள் கலைமகளாகவும் இருக்கிறாள் என்று பொருள் ஆக இது உமை துதி தானே

அடுத்து மனோன்மணியை மறைப்பம்மை என்று சொல்லிவிட்டார் . மனோன்மணியான அம்பாள் எப்படி மறைப்பம்மை ஆவார் .சப்த குருமார்களை ஏழு ஆசிரியன்மார் என்று மொழியாக்கம் செய்து சப்தகுருமாரில் வரும் அம்பிகா குருவை அருளம்மை என ஆக்கிவிட்டார் . அதிலே ஸ்ரீகண்டகுருவை உருத்திரர் என்று போட்டுள்ளார்  அதற்கு காஞ்சி புராணப்பாடல்
வாடது மலையிற் புயநான்கும் மலர்க்கண் மூன்றும் உருத்திரமும்  என்ற பாடலைப் போட்டுள்ளார் உருத்திரருக்கும் உருத்திரம் என்ற சொல்லுக்கும் என்ன சம்பந்தம்
அடுத்து சுவாமியின் சண்டியான த்வனிச்சண்டியை ஒலிச்சண்டி( sound ) என்றும் சிவசூர்ய சண்டியான தேஜசண்டியை ஒளிச்சண்டி ( Light  ) என்றும் மொழி பெயர்த்துள்ளார் . த்வனிச்சண்டேசருக்கு தாதையை தாளற வீசிய என்ற திருப்பல்லாண்டுப் பாடல் ஏதோ சண்டேச நாயனாரைப்பற்றிய பாடல் பரவாயில்லை .ஆனால் தேஜச்சண்டியான சிவசூர்ய சண்டிக்கு தழைத்ததோர் ஆத்தியின் கீழ்த் தாபர மணலால் கூப்பி என்ற பாடல் போட்டுள்ளார் . சுவாமியின் சேய்ஞலூர் சண்டேசுவர நாயனாரின் பாடல் எப்படி போடலாம் ?. தேஜச்சண்டிக்கும் தந்தையின் தாளைத் தடிந்தவருக்கும் என்ன சம்பந்தம் ? பரிவார தெய்வங்கள் யார் யார் அவர்கள் திருவுருவம் எப்படி இருக்கும் அவர்களுக்கு என்ன வேலை என்ற அடிப்படை கூட தெரியாத இவர் தீட்சை அளித்து முத்திக்கு அழைத்துச்செல்லும் தகுதி உண்டா ?  
சிவ சிவ
அடுத்து ரிஷப தேவர் (அ) விடைத்தேவர் இறைவரின் ஊர்தியான காளை . இவருக்கு
ஓம் நந்திதேவர் நிலை போற்றி
ஓம் நந்திதேவர் உரு போற்றி
ஓம் நந்திதேவர் திருவடிகள் போற்றி    என்று போட்டு
திருவிளையாடல் புராணத்தில் வரும் திருநந்திதேவர் துதிப்பாடலான
வந்திறை அடியில் தாழும் வானவர் மகுட கோடி
பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையால் தாக்கி
அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பையாக்கும்
நந்தி எம்பெருமான் பாதநகைமலர்முடிமேல் வைப்பாம்
இப்பாடலைப் போட்டுள்ளார் . திருநந்தி தேவருக்கும் ரிஷப தேவருக்கும் கூட வித்தியாசம் தெரியாத ஞானசூன்யத்திடம் என்ன கற்று ஆன்ம மேன்மை அடையப் போகிறீர்கள் . மகுடகோடி பந்தி என்பது வடசொல் அது தெரிய வில்லை
சுவாமிக்கு ஷடுத்தாசன மந்திரத்தை மொழிபெயர்த்துள்ளார் பாருங்கள்
1.அநந்தாய நம அனந்த நிலை 2.தர்மாய நம அற நிலை 3.க்ஞாநாய நம ஞான நிலை 4.வைராக்யாய நம வைராக்கிய நிலை 5.ஐஸ்வர்யாய நம செல்வ நிலை 6.பத்மாய நம பதும நிலை
சிவஞாயிறு துதியாம் இது
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ?
இருக்கு நால்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார், கல்மனவரே
இப்பாடல் சிவசூர்யனையா போற்றுகிறது அருக்கன் எனும் சூரியனை சந்தியில் வணங்குகிறீர்களே அதுவும் சிவமே .அந்த சிவபெருமானை ரிக் முதலாகிய நான்மறை கள் தொழுகின்றன அதை நினையாதவர் கல்மனத்தவரே என்பது அப்பர் வாக்கு . இதில் அருக்கன் என்பது வட சொல்லாகும்.
சுவாமிக்கு திருநீறு சாற்றும்போது மந்திரமாவது நீறு பாடல் பாடிச் சாற்றவாம் சுவாமிக்கு திருநீற்றின் பெருமையைச் சொல்லிக்கொடுக்கிறீர்களா ? நாம் பூசும் போது அப்பாடலைச்சொல்லிப் பூசலாம் நல்லது சுவாமிக்கு ?
இது போல எல்லாக் கிரியைகளும் சம்பந்தாசம்பந்தமில்லா பாடலுடனே தான் இருக்கிறது .சுவாமிக்கு தூபம் காட்ட தீபம் காட்ட அமுது படைக்க என் எல்லாமே . செய்யும் செயலைக்குறிக்கும் ஒரு சொல் அதில் இருந்தால் அந்த பாடலை அச்செயலுக்கு பயன்படுத்தவேண்டியது .அப்பாடலின் பொருள் என்ன ? அது பற்றி யெல்லாம் கவலையில்லை . உதாரணம் தூபம் காட்ட சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்று பாடினால் சுவாமியை தூபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றோ அல்லது தூபத்தை தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றோ அப்பாடலில் பொருள் வருகிறதா ?
இதெல்லாம் அவர் தொகுத்து அளித்துள்ள நூல் மூலமே அப்பட்டமாகத் தெரிகிறது அன்பர்களே தமிழ்ப்பற்று என்பது வேறு இறைபற்று என்பது வேறு  திருமுறைப்பற்று என்பது வேறு .அவர் அரசுப்பணியில் ஓய்வு பெற்று இப்பொழுது அவர் தந்தையாரால் போலியாக தீட்சை செய்து வைக்கப்பட்டதாகக் கூறிக்கொண்டு தீட்சை முறை தெரியாமல் தீட்சை அளித்து வருகிறார் சித்தாந்த ஞானம் கிடையாது திருமுறை ஞானம் கிடையாது சுவாமியின் பரிவார மூர்த்தங்கள் எவரெவர் எங்கிருப்பர் எப்படியிருப்பர் எனத் தெரியாத இவர் உங்களை எப்படி ஞானப்பாதையில்  அழைத்துச்செல்ல முடியும்
இப்படி தப்பும் தவறுமாக பாடலைத்தெரிவு செய்து பாடி சிவபூசை செய்தால் சிவாபராதமே மிஞ்சும் .சிவபுண்ணியம் கிட்டாது .கேட்டால் அன்பு பூசையாம். எது ? பொருத்தமில்லாமல் உங்கள் திருமுறைப் புலமையை வெளிப்படுத்த சிவபூசை நேரத்தை எடுத்துக்கொள்ளுவதா ? (கொல்லுவதா ) திருமுறைகள் சிவபூஜையில் ஒரு அங்கமே தவிர அதை அதற்குரிய இடத்தில் நேரத்தில் சொல்ல வேண்டும் .திருமுறையே சிவபூஜையாகாது .மந்திரம் கிரியை பாவனை இதில் ஒன்று குறைந்தால் கூட அந்த வழிபாடு பயனற்றது என்பது ஆன்றோர் வாக்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தை கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை நல்வழியில் சரியான ஆச்சார்யாரிடம் தீட்சை பெற்று வழிபாடு செய்து ஆன்ம உய்வு பெறுங்கள். ஒரு ஆன்மார்த்த பூஜையே இப்படி என்றால் வேள்விக் கிரியைகள் ????? சிவசிவ

குருட்டினை நீக்கும் குருவினைக்கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக்கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே  - திருமந்திரம்

            திருச்சிற்றம்பலம்
 

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 10



                       ஓம் நமசிவாய 
தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 10

                         திருச்சிற்றம்பலம்

வேதம் என்ற சொல்லே தமிழ்ச்சொல் அல்ல என்று சொல்லும் புத்திசாலிகள் வேதம் என்ற ஒன்றே இல்லை எனும் மதியிலிகள் வேதநெறி தழைக்கவும் மிகு சைவத்துறை விளக்கவும் வந்தவரின் கூற்றை ஏற்று எப்படி நடப்பர் . வேதம் என்பது வடசொல்லானால் திருமுறைக ளில் நூற்றுக்கணக்கான இடங்களில் வேதம் என்ற சொல் வருகிறது வடமொழி எதிர்ப்பாளரான நீங்கள் அதை வைத்து ஏன் பிழைப்பு நடத்த வேண்டும் . 
ஆக கொள்கைக்கு ஒன்று பிழைப்புக்கு ஒன்று என்ன ஒரு கபட நாடகம் ஆடி மக்களிடம் பணம் பறிக்கிறீர்கள்.

நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண்டகம் செய்து வாழ்வேன்
வேதியர் தம்மை வெகுளேன் வெகுண்டவர்க்கும் துணை ஆகேன்

இது ஏழாம் திருமுறை பதிகம் 73 பாடல் 5 இதில் நிட்கண்டகம் என்பது வடசொல்லே. அடுத்து வேதியர் அதாவது அந்தணரை இகழேன் . அப்படி இகழ்ந்தவர்க்கும் துணையாக இருக்க மாட்டேன் என்பது சுந்தரர் அருள்வாக்கு. வேதத்தைப் புறம் கூறி சிவாபராதம் சம்பாதித்து ஆச்சாரியர் கள் வாக்கை மீறி குருத்துவேஷம் சம்பாதித்து நீங்கள் செய்யும் வேள்வியில் ஆகுதி பெற யார் வருவார் ?

திருமுறை வழி சிவபூசையில் பார்த்தோமானால் அவை அனைத்தும் பார்த்திப பூசாவிதி என்ற திருவாவடுதுறை ஆதீன வெளியீடான நூலின் மொழி பெயர்ப்பே ஆகும் .

ஐங்கலை (பஞ்சகலா) மந்திரங்கள் பின்வருமாறு ?

1.பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி ( நிவிர்த்திகலை )
2.நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி ( பிரதிட்டை கலை )
3.தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி ( வித்தைகலை )
4.வளியிடை இரண்டாய்  மகிழ்ந்தாய் போற்றி ( சாந்திகலை )
5.வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி ( சாந்தியதீதகலை )

பஞ்சகலா மந்திரத்திற்கு பதில் திருவாசப்போற்றித் திருஅகவலிலிருந்து

ஐம்முக மந்திரங்கள் ?

1.ஓம் ஓம் ஈசானம் போற்றி
2.ஓம் ஏம் தத்புருடம் போற்றி
3.ஓம் ஊம் அகோரம் போற்றி
4.ஓம் இம் வாமதேவம் போற்றி
5.ஓம் அம் சத்யோசாதம் போற்றி

ஆறங்க மந்திரங்கள் ?

1.ஓம் அம் இதயம் போற்றி
2.ஓம் ரீம் சிரசு போற்றி
3.ஓம் ஊம் சிகை போற்றி
4.ஓம் ஐம் கவசம் போற்றி
5.ஓம் ஒளம் முக்கண் போற்றி
6.ஓம் அம் ஆயுதம் போற்றி

ஐயா நடுநிலையாளர்களே தேவையா இந்த மொழிபெயர்ப்பு மந்திரங்களில் ? . பீஜங்களைக் கூடவா மொழிபெயர்ப்பார்கள் ?. பீஜத்தை மொழிபெயர்த்தால் எப்படி அதன் ஒலி மற்றும் ஓசை மாறிவிடாதா ? உதாரணமாக ஓம் ஹாம் ஹ்ருதயாய நம என்பதற்கும் ஓம் அம் இதயம் போற்றி என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்

அப்படி இவர்கள் சொந்த அறிவு இல்லாமல் யாரோ உருவாக்கியதை மொழி மாற்றம் செய்து உபயோகிக்க வெட்கமாயில்லை . அப்படி செய்யவேண்டியதன் அவசியம் என்ன ? இவர்கள் சில பேரை முன்னிலைப் படுத்திக்கொள்ளத்தானே தவிர பக்தியும் இல்லை பயமும் இல்லை .இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனமா இது புதுசு புதுசா மாடல் மாற்றவும் பேரை மாற்றவும் ? அல்லது திரைப்படமா மொழிமாற்றம் செய்து வெளியிட ?

இன்னும் வரும் இது போல அபத்தங்கள்….

               திருச்சிற்றம்பலம்