ஓம் நமசிவாய
தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 10
திருச்சிற்றம்பலம்
வேதம் என்ற சொல்லே தமிழ்ச்சொல் அல்ல என்று சொல்லும்
புத்திசாலிகள் வேதம் என்ற ஒன்றே இல்லை எனும் மதியிலிகள் வேதநெறி தழைக்கவும் மிகு
சைவத்துறை விளக்கவும் வந்தவரின் கூற்றை ஏற்று எப்படி நடப்பர் . வேதம் என்பது
வடசொல்லானால் திருமுறைக ளில் நூற்றுக்கணக்கான இடங்களில் வேதம் என்ற சொல் வருகிறது வடமொழி
எதிர்ப்பாளரான நீங்கள் அதை வைத்து ஏன் பிழைப்பு நடத்த வேண்டும் .
ஆக கொள்கைக்கு
ஒன்று பிழைப்புக்கு ஒன்று என்ன ஒரு கபட நாடகம் ஆடி மக்களிடம் பணம் பறிக்கிறீர்கள்.
நீதியில் ஒன்றும் வழுவேன்
நிட்கண்டகம் செய்து வாழ்வேன்
வேதியர் தம்மை வெகுளேன்
வெகுண்டவர்க்கும் துணை ஆகேன்
இது ஏழாம் திருமுறை பதிகம் 73 பாடல் 5
இதில் நிட்கண்டகம் என்பது வடசொல்லே. அடுத்து வேதியர்
அதாவது அந்தணரை இகழேன் . அப்படி இகழ்ந்தவர்க்கும் துணையாக
இருக்க மாட்டேன் என்பது சுந்தரர் அருள்வாக்கு. வேதத்தைப்
புறம் கூறி சிவாபராதம் சம்பாதித்து ஆச்சாரியர் கள் வாக்கை மீறி குருத்துவேஷம்
சம்பாதித்து நீங்கள் செய்யும் வேள்வியில் ஆகுதி பெற யார் வருவார் ?
திருமுறை வழி சிவபூசையில் பார்த்தோமானால் அவை அனைத்தும்
பார்த்திப பூசாவிதி என்ற திருவாவடுதுறை ஆதீன வெளியீடான நூலின் மொழி பெயர்ப்பே
ஆகும் .
ஐங்கலை (பஞ்சகலா)
மந்திரங்கள் பின்வருமாறு ?
1.பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
( நிவிர்த்திகலை )
2.நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
( பிரதிட்டை கலை )
3.தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி
( வித்தைகலை )
4.வளியிடை இரண்டாய்
மகிழ்ந்தாய் போற்றி ( சாந்திகலை )
5.வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
( சாந்தியதீதகலை )
பஞ்சகலா மந்திரத்திற்கு பதில் திருவாசப்போற்றித்
திருஅகவலிலிருந்து
ஐம்முக மந்திரங்கள் ?
1.ஓம் ஓம் ஈசானம் போற்றி
2.ஓம் ஏம் தத்புருடம் போற்றி
3.ஓம் ஊம் அகோரம் போற்றி
4.ஓம் இம் வாமதேவம் போற்றி
5.ஓம் அம் சத்யோசாதம் போற்றி
ஆறங்க மந்திரங்கள் ?
1.ஓம் அம் இதயம் போற்றி
2.ஓம் ரீம் சிரசு போற்றி
3.ஓம் ஊம் சிகை போற்றி
4.ஓம் ஐம் கவசம் போற்றி
5.ஓம் ஒளம் முக்கண் போற்றி
6.ஓம் அம் ஆயுதம் போற்றி
ஐயா நடுநிலையாளர்களே தேவையா இந்த மொழிபெயர்ப்பு
மந்திரங்களில் ? . பீஜங்களைக்
கூடவா மொழிபெயர்ப்பார்கள் ?.
பீஜத்தை மொழிபெயர்த்தால் எப்படி அதன் ஒலி மற்றும் ஓசை மாறிவிடாதா ? உதாரணமாக ஓம் ஹாம்
ஹ்ருதயாய நம என்பதற்கும் ஓம் அம் இதயம் போற்றி என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்
பாருங்கள்
அப்படி இவர்கள் சொந்த அறிவு இல்லாமல் யாரோ உருவாக்கியதை
மொழி மாற்றம் செய்து உபயோகிக்க வெட்கமாயில்லை . அப்படி செய்யவேண்டியதன் அவசியம் என்ன ? இவர்கள் சில பேரை
முன்னிலைப் படுத்திக்கொள்ளத்தானே தவிர பக்தியும் இல்லை பயமும் இல்லை .இருசக்கர அல்லது
நான்கு சக்கர வாகனமா இது புதுசு புதுசா மாடல் மாற்றவும் பேரை மாற்றவும் ? அல்லது திரைப்படமா
மொழிமாற்றம் செய்து வெளியிட ?
இன்னும் வரும் இது போல அபத்தங்கள்….
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment