ஓம் நமசிவாய
சிவபெருமான் எழுதிய கடிதங்கள்
சிபாரிசுக் கடிதம் எழுதும் வழக்கம் இப்போது உள்ளது. இதைத் துவக்கி வைத்தவர்
மதிமலி புரிசை மாடக்கூடல்
சிவபெருமான் தானோ என்று எண்ண வேண்டியுள்ளது.உயர்ந்தவர்கள் தங்கள் கருத்துக்களை நேரிடையாகவோ அல்லது தக்கவர் வழியோ தெரிவித்துக் கொள்வதன்றி, ஓலை வழியும் தெரிவித்துக் கொண்டிருந்தனர். இவ் ஓலையைத் திருமுகம் என்பர்.இத்திருமுகத்தில் அருளப் பெற்றிருக்கும் பொருள்முறை இக்காலத்துக்கும் ஏற்புடையதாக அமைந்திருப்பது அறியத்தக்கதாம்.
1.முதல் கடிதம்
சேரமான்பெருமானுக்கு பொருள் வேண்டி
இக்காலத்துக் கடிதம் எழுதுவோர், அனுப்புநர், பெறுநர், பொருள் எனப்பிரித்துக் கொண்டே எழுதுவதைக் காண்கிறோம். பார்வை எண் என இடம் பெறுவது தொடர்ந்து போக்குவரத்து நிகழ்வதும், அலுவலக அமைப்பாக அமைவதுமான கடிதங்களிலேயே காணப்படுகின்றன. இவ்வகையில் அனுப்புநராக இருப்பவர் ஆலவாய்ப் பெருமான் ஆவர். இதனை
மதிமலி புரிசை மாடக்கூடல்
பதிமிசை நிலவு பானிற வரிச்சிறகு
அன்னம் பயில்பொழில் ஆலவாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
என வரும் முதற்பகுதி குறித்துக் காட்டுகிறது. இதனைப் பெறுபவர் சேரமான் பெருமாள் நாயனார் ஆவர். இதனைப்
என வரும் முதற்பகுதி குறித்துக் காட்டுகிறது. இதனைப் பெறுபவர் சேரமான் பெருமாள் நாயனார் ஆவர். இதனைப்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு
உரிமையின் உரிமையின் உதவி யொளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா வுகைக்கும் சேரலன் காண்க
என வரும் இரண்டாம் பகுதி குறிக்கிறது.
இனிப் பொருளாக அமைவது
என வரும் இரண்டாம் பகுதி குறிக்கிறது.
இனிப் பொருளாக அமைவது
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன்; தன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்;
மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே
என வரும் மூன்றாம் பகுதியாகும்.
இதன் முற்பகுதியில் கூடல் என்பது நகரையும், ஆலவாய் என்பது அதன்கண் உள்ள திருக்கோயிலையும் குறிக்கின்றது. இத்திருமுகம் அருளும் நிலையில் ஆலவாயில் அப்பெருமான் பொருந்தி இருப்பினும், அவன் யாண்டும் எக்காலத்தும் எப்பொருள்களிடத்தும் பொருந்தியிருப்பவன் என்பது உணரத்தக்கது . இனிப் பெறுநராம் சேரமானைக் குறிக்கும்பொழுது அப்பெருமகனாரின் வள்ளன்மையை முன்பும், அரசியல் சிறப்பைப் பின்புமாகக் குறித்தருளுகின்றார். கைம்மாறு வேண்டாக் கடப்பாட்டுடன் தம்பால் வருவோருக்குத் தாம் கொடுத்தலன்றி, அவரவரும் தாம் தாமும் வேண்டியவாறு எடுத்துக் கொள்ளும் உரிமை பெறுதலை `உரிமையின் உரிமையின் உதவி' என்றார்.பாணபத்திரனும் உன்னைப்போல் என் பால்அன்பு கொண்டவன் என்றார் . வரவிடுப்பதுவே' என்றது அவ்விசைப்பாணர் கடமை உணர்வு தவறாது இசைத்து வரும் இசைத்திறனின் நுகர்வை விடுத்தற்கு அரிதாதல் பற்றியாகும்.
கடிதத்துடன் திருவஞ்சைக் களத்துக்குச் சென்ற பாணரை சேரமன்னனுடைய ஆட்கள் தேடிவந்து கண்டுபிடித்து அழைத்துச் செல்ல மன்னனும் பெரும்பொருள் கொடுத்து ஏழடி நடந்து வந்து அவரை வழி அனுப்பி வைத்தான்.ஏழடி நடந்து வந்து வழி அனுப்புவது வேதத்திலும் திருமணத்திலும் சப்தபதி என்று சொல்லப்படுவது
2. இரண்டாவது கடிதம்
உமாபதிசிவத்திற்கு அருள் வேண்டி
உமாபதிசிவம் கொற்றவன்குடியில் தம் திருமடத்தில் தங்கியிருந்தார். அதே ஊரில் பூர்வ ஜன்மவினையால் தாழ்த்தப்பட்டகுடியில் பிறந்த பெற்றான் சாம்பான் என்பவன், தம் குடும்பவாழ்வை வெறுத்துத் தில்லைப்பதி சென்று, திருச்சிற்றம்பலமுடையார் திருக்கோவிலுக்கு வேண்டிய, நைவேத்தியம் சமைப்பதற்கான விறகுக்கட்டைகளை வெட்டி, நாள் தோறும் கொடுத்து வந்தான்.
அவனுடைய கிரியை வழிபாட்டின் மூலம், அவனுக்குப் பரிபக்குவம் (மலபரிபாகம்) உண்டாயிற்று. அன்று அவன் கனவில் சிவபெருமான் தோன்றி ஓர் ஓலையைக் கொடுத்து அதனை உமாபதிசிவாச்சாரியரிடம் கொடுக்குமாறு அருளினார். கண் விழித்த பெற்றான் சாம்பான் தன் கையில் ஓர் ஓலை நறுக்கு இருக்கக் கண்டான். அந்த ஓலையைக் கொற்றவன் குடியில் பத்திரப்படுத்தினான்.
அடுத்த நாள் பெருமழை பெய்தமையால், ஆறு நிரம்பி நீர் ஓடியது. பெற்றான் சாம்பானால் விறகினைத் திருமடப் பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை. அதனால் அன்று பிரசாத நைவேத்தியமும், போஜனமும் தாமதமாக நடந்தது. இந்தத் தாமதத்துக்குக் காரணம் யார்? எனக் கேட்ட, உமாபதிசிவாச்சாரியரிடம், அந்தணர்கள் பெற்றான் சாம்பான் என்பவன் நாள் தோறும் திருமடப்பள்ளிக்கு விறகு தந்து கொண்டிருக்கிறான். அவன் இன்று இன்னும் வந்து சேரவில்லை. அதனால் எல்லாம் தாமதமாயிற்று என்றனர்.பெற்றான் சாம்பான்
திருமுகம் கொண்டு வருதலை உமாபதி சிவத்திற்கு இறைவன் உணர்த்தினார் .
திருமுகம் கொண்டு வருதலை உமாபதி சிவத்திற்கு இறைவன் உணர்த்தினார் .
மறுநாள் இரண்டு நாளுக்கும் உரிய விறகுக் கட்டைகளுடன் வந்த பெற்றான் சாம்பானை, உமாபதி சிவாச்சாரியர் “நீ யார்?” எனக் கேட்டார். இறைவன் அருளிய ஓலை நறுக்கினை உமாபதிசிவாச்சாரியரிடம் பணிவுடன் கொடுத்து பெற்றான் சாம்பான் வணங்கினான். உமாபதிசிவம் அந்த ஓலையில் எழுதப் பட்டிருந்த பாடலைப் படித்தார்.
அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றக்
குடியார்க் கெழுதியகைச் சீட்டு-படியின்மிசைப்
பெற்றான்சாம்பானுக்குப்பேதமறத்தீக்கை
செய்துமுத்தி கொடுத்தல் முறை
குடியார்க் கெழுதியகைச் சீட்டு-படியின்மிசைப்
பெற்றான்சாம்பானுக்குப்பேதமறத்தீக்கை
செய்துமுத்தி கொடுத்தல் முறை
என்று திருச்சிற்றம்பலமுடைய எம்பெருமான் சிவபெருமானே எழுதியிருந்தார். அடியார்க்கு எளியன் சிற்றம்பலவன்' எனத் தொடங்கும் பாடலும் அனுப்புநர், பெறுநர், பொருள்திறன் என முறைப்படுத்திக் கூறும் அமைப்பில் பிறழாது விளங்குதலை அப்பாடலால் அறியலாம் அதனைக் கண்களில் ஒற்றிக் கொண்டு தலைமேல் வைத்து, உமாபதி சிவாச்சாரியர் போற்றினார். சிவபிரான் ஆணையைச் சிரம்மேற்கொண்ட உமாபதி சிவாச்சாரியர், தாழ்த்தப்பட்ட குலத்தில் தோன்றிய பெற்றான் சாம்பானுக்கு முறையான சமய தீட்சைகள் செய்வித்து சத்தியோநிர்வாண தீட்சையும் அளித்து முத்தியும் அளித்தார். உமாபதிசிவாச்சாரியரின் பணிவும் குருபக்தியும் அவருக்குச் சிவபெருமான் திருவருளை அளித்தன.
பெற்றான்சாம்பானின் பணிவே அவனை உமாபதிசிவாச்சாரியரிடம் சேர்த்தது உமாபதிசிவாச்சாரியரின் பணிவே அவரைச் சிவகணத்துள் ஒருவராகி பெற்றான் சாம்பானுக்கு முக்தியை அளிக்கச்செய்தது.போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment