தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 14
திருச்சிற்றம்பலம்
வழிபாடுகளில் ஆப்தவாக்கியமான சிவபரம்பொருள் நாம் உய்யும்
பொருட்டு அருளிய வேத சிவாகமங்களான வடமொழி மந்திரங்களே வேண்டும் என்பதை சென்ற
பதிவுகளில் வலியுறுத்தி உள்ளோம் .
மேலும் மொழிபெயர்ப்பு மந்திரங்களால் பயன் இல்லையென முந்தைய
பதிவுகளில் மேற்கோள் காட்டியிருந்தோம்.அதாவது
அஸ்த்ராய நம: என்பது ஆயுதம் போற்றி என மாறி அத்தம்பட் ஆயத்தம்பட் என்று மனம் போன
போக்கில் திருத்தியமையை கண்டோம்.
ஆனால் வடமொழியில் காஷ்மீர் முதல் குமரி வரை ஒரே மந்திரம்
தான் .
உதாரணத்திற்கு ஆசமன மந்திரங்கள்
1. ஓம் ஆத்ம
தத்வாய ஸ்வதா
2.ஓம் வித்யா
தத்வாய ஸ்வதா
3.ஓம் சிவ தத்வாய
ஸ்வதா
ஆனால் இந்த மொழிபெயர்ப்பு மந்திரவாதிகள்
1.போற்றி
நாலாறுண்மை
2.போற்றி
ஏழ் மெய்யறிவு
3.போற்றி
ஐந்தாம் உணர்வு போற்றி (!!!!!)
இப்படி ஒருவர்
இன்னொருவர்
1.ஓம்
எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு என் ஆன்மதத்துவங்களை தாரை வார்த்துத் தருகிறேன்
2.ஓம்
எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு என் வித்தியாதத்துவங்களை தாரை வார்த்துத் தருகிறேன்
3.ஓம்
எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு என் சிவதத்துவங்களை தாரை வார்த்துத் தருகிறேன்
மற்றொருவர்
1.ஓம் ஆத்ம
தத்துவங்களை ஏற்றருள்க
2.ஓம்
வித்யா தத்துவங்களை ஏற்றருள்க
3.ஓம் சிவ
தத்துவங்களை ஏற்றருள்க
மேலும் ஒருவர்
1.உயிர்
மெய்மையை ஏற்றுக்கொள்வீராக
2.கலை
மெய்மையை ஏற்றுக்கொள்வீராக
3.சிவ
மெய்மையை ஏற்றுக்கொள்வீராக
இன்னும் காமெடி இருக்கிறது பதிவின் நீளம் காரணமாகத் தவிர்த்துள்ளோம் .
ஏன் இந்த
மொழிபெயர்ப்பு வேலை ? .
வழிபாட்டில் என்ன புதுமை ?
சுவாமிக்குத் தெரியாதா ?
தனு கரண புவன போகங்களைக் கொடுத்தவருக்கு தம்மை வழிபட்டு
உயிர்கள் நற்கதி பெற என்ன சாதனம் கொடுக்கவேண்டும் எம்மொழியில் கொடுக்க வேண்டும்
என்று
இவர்கள் சாமிக்கு வகுப்பு எடுத்து சொல்லிக் கொடுக்கிறார்களா ? நாங்க சொல்றத நீ
கேட்டுத்தான் ஆகணும் என்பது மாதிரி என்ன ஆணவமல மறைப்பு. மற்ற மாநிலங்களில் ஆன்மீகத்தில் வழிபாட்டில் மொழித்தலையீடு இல்லை . தெலுங்கு வழிபாடு
கன்னட வழிபாடு என்று இல்லை .
அங்கெல்லாம்
இறைவாக்கான ஸமஸ்கிருத மந்திரங்களைத் துவேஷிப்பதில்லை . மாறாக துதிக்கிறார்கள்
.ஆனால் இறை சிந்தனை
இல்லாத இக்கூட்டம் ??????
இந்த மூன்று மந்திரத்துக்கு நான்கு பேர் நான்கு விதமாக
பொருள் சொல்கிறார்கள் என்றால் இவர்களுக்குள்ளே யார் புலமை மிக்கவர்? யார் அறிவாளி? என்ற
போட்டியும் தவிர மக்களை நல்வழிகாட்டி நற்கதிக்கு அழைத்துச் செலுத்தும் நோக்கமுமல்ல . புதுமையாகச்செய்து அப்பாவி மக்களை ஏமாற்றி பொருள் பறித்தலே நோக்கம்.
இது காலப்போக்கில்
அந்த ஜாதிகாரன் சொன்ன மந்திரத்த அந்த ஊர்காரன் சொல்றதை நான் சொல்வதா என்று ஆளாளுக்கு ஒரு மந்திரம் கண்டுபிடித்து ஜாதிக்கொரு மந்திரமாகும் . இதனால் வழிபாட்டில் குழப்பம் மிஞ்சுமே தவிர நன்மை கிட்டாது .
இது போன்ற அசைவர்கள் ஏற்கெனவே ஜாதி பற்றி வழிபாட்டில் புகுத்திவிட்டார்கள் ஆம் உண்மை
ஏனெனில்
பிராமணத்துவேஷமாக வந்தது தானே இந்த தமிழ்வழிபாடு என்பது . ஆக ஜாதி ரீதியில் ஏற்கெனவே கிளம்பியாயிற்று
இந்த கொடுமையான மொழிபெயர்ப்பு பரிணாம வளர்ச்சி பெற்றுப் பின்னாளில் இது மனம் போன போக்கில்
ஆளாளுக்கு மந்திரம் மொழி மாற்றம் செய்யப்பட்டு மந்திர பீஜம் எல்லாம் நெல்லை ஸ்லாங் கோவை ஸ்லாங் மதுரை ஸ்லாங் சென்னை ஸ்லாங் என்று
வந்தாலும் வரும்.
ஏனெனில் இந்த கொடுமைக்கு ஒரு உதாரணம் பஞ்சகவ்யம்.
கொங்கு நாட்டுத் தமிழ்வழிபாட்டுக்காரர்கள் பஞ்சகவ்யத்துக்கு பால் தயிர் நெய் கோசலம்கோமியம் என பயன் படுத்துகிறார்கள். ஆனால்
சென்னை கோஷ்டியோ கோமியம் கோசலத்திற்கு பதிலாக மோரும் வெண்ணையும்
பயன்படுத்துகிறார்கள்.
இவர்கள் யாருக்கும் சிவவழிபாடோ அதன் பயனாம் வீடுபேறோ முக்கியம்
அல்ல . தமிழ் வியாபாரம் திருமுறை வியாபாரம் காசு பணம் புகழ் இது மட்டுமே . தமிழ் தாய்தமிழ் தமிழ்த்தாய்
என்று சொல்வோரே உமக்கு எத்தனை பிறவியாய்த் தமிழ் தாய் மொழியாக இருக்கிறது. இந்த திராவிடர் கழக ஆன்மீகப் பிரிவினருக்கு ஆதரவு கொடுத்தால் சிந்திக்கவே முடியவில்லை ஆன்மா கடைத்தேறும் வழியை.
விழித்துக்கொண்டு படுகுழியில் வீழ்வோரையும் தன்னைச்சார்ந்தவர்களையும் படுகுழியில் வீழ்த்துவோரையும் என்ன சொல்ல ?
திருச்சிற்றம்பலம்
மிக அருமை :ஆழந்த ஆராய்சி
பதிலளிநீக்குபணி தொடர வாழ்த்துக்கள் 🌹🙏
மிக அருமை
பதிலளிநீக்குதிருச்சிற்றம்பலம் ம சிறந்த கருத்துக்கள் சிவாய நம அம்மா
பதிலளிநீக்கு