rudrateswarar

rudrateswarar

Thursday, October 24, 2019

சிவாகம சிவதீக்ஷை


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
யார் தருவார் மந்திர உபதேசமும் சிவதீக்ஷையும் ? (சிவாகம சிவதீக்ஷை விழா அழைப்பு )
யார் தருவார் மந்திர உபதேசமும் சிவாகம சிவதீக்ஷையும்  என்ற உங்கள் தேடுதலுக்கும் ஏக்கத்திற்கும் இதோ விடை கிடைக்கப்போகிறது
தீக்ஷை என்றால் உயிரைப்பற்றிய ஆணவ மலத்தைக் கெடுத்து  சிவஞானத்தை கொடுப்பது என்று பொருள் தமிழில் தீக்கை. உடலுக்கு பலசடங்குகள் செய்யப் படுகின்றன  அது போல உயிராகிய ஆன்மாவிற்கு செய்யக்கூடிய சடங்கே தீக்ஷை. வாகனம் ஓட்ட, எப்படி ஓட்டுனர் உரிமம் தேவையோ, நிலம் வாங்க பத்திரப்பதிவு அவசியமோ, தொழில் துவங்க தொழில் உரிமம் தேவையோ, அது போல சிவ சம்பந்தம் எனும் ஆரம்பப்படி நிலையை உறுதிப்படுத்திக்  கொள்ள இம்மை மறுமை நலன்கள் பெற  சிவபெருமான் திருவருள் பெற உரிமம் எனும் தீக்ஷை தேவை .
          
 எந்த வயதினரும் 7வயது முதல் எந்த வயதிலும் ஆண் பெண் இரு பாலரும் தீக்ஷை பெறலாம். தீக்ஷை  பெறாதவர் பொதுச்சைவர் எனப்படுவர். அவர்கள் திருநீற்றை நீரில் குழைத்து  முப்பரிமாணமாக திரிபுண்டரமாக  பூச முடியாது .  மிக உயர்ந்த மந்திரமான ஐந்தெழுத்தை உச்சரிக்கும் அதிகாரம் கிடையாது. மாதா பிதா குரு தெய்வம் என்பது தான் சைவம் காட்டும் நெறி . எனவே குருவின் மூலம் தீக்ஷை பெற வேண்டும். அவர்கள் அருளியதே  நமக்கு பிரமாணம். ஸ்ரீஇராமனுக்கு அகத்தியரும்ஸ்ரீகிருஷ்ணனுக்கு உபமன்யு முனிவரும் சிவதீட்சை  செய்து வைத்துள்ளார்கள் 
ஏன் தீக்ஷை  பெற வேண்டும்?
1.    சிவபெருமானை சிவாகமங்களில் 
விதித்தபடி வழிபாடு செய்வதற்குரிய 
அதிகாரம் பெற்று ஐந்தெழுத்து
ஓதி முப்புரிமாணமாக திருநீறு அணிந்து பூசை செய்யலாம். 
2. தீக்ஷை பெற்றால் ஞானம் பெறலாம். ஞானத்தின் வாயிலாக வீடுபேறு எனும் முக்தி பெறலாம்.
 3.சமய தீக்ஷை பெற்றாலே அவர்களை எமன் அணுக மாட்டான் அதனால் நரகம் இல்லை. அவ்வுயிரை வாங்க ஸ்ரீகண்ட பரமேஸ்வரன் தான் அதிகாரம் பெற்றவர் .
4.விசேட தீக்ஷை பெற்றால் அவ்வுயிரை அனந்த தேவர் வாங்குவார் 
5.நிர்வாண தீக்ஷை பெற்றால் சதாசிவ மூர்த்தி  வாங்குவார் .
6.எமன் வாங்காததால் நரக துன்பம் ஆவியுலக துன்பங்கள் நம்மை அணுகாது.
7.நமது வாரிசுகள் நமக்கு பிதுர் கடன் ஆற்றா விட்டாலும் கூட ஆவியுலக இன்னல் இல்லை 
8. இறைவன் தீக்ஷா கிரியையின் மூலம் மட்டுமே அருளுகிறார் 
9. பில்லி சூன்யம் ஏவல் கண்திருஷ்டி இவை நெருங்காது 
10. பிராணயாமம் செய்யும் போது இருதய நோய் வராது . மாரடைப்பு நெருங்காது .
11. சிவோகம் பாவனைகள்  மூலம் மனம் அடங்கும், .நிம்மதி கிட்டும் ஐம்பொறிகளும் நமக்கு குற்றேவல் புரியும் அப்பர் பெருமான் அதை  பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி என்றதன் மூலம் அறியலாம். பாவனை உயிரை தூய்மைப்படுத்தும் 
12.நியாசம் எனும் (சகளீகரணம் )அங்கசுத்தி செய்வதன் மூலம் வியாதி நீங்கும் அது தான் இன்றைய ரெய்கி.
13.முத்திரைகள் பிடிப்பதால் பிசியோதெரபி 
செய்யும் பலன் கிடைப்பதால் நரம்பு சம்பந்தமான வியாதிகள் நெருங்காது.
14. தீக்ஷை பெற்று  ஆன்மார்த்த பூசை  செய்வதன் மூலம் நமது வினைகள் குறையும்  (பிராரத்தம்). ஆகாமியம் ஏறாது 
15. வறுத்த நெல் முளைக்காது .அது போல தீக்ஷை பெற்ற உயிர் பிறவிக்கு வராது.
15. தீஷை பெற்றவர் இருபிறப்பாளர் ஆகிறார் , தீக்ஷாநாமம் சூட்டப்படும்.
நாள்:
30-01-2020 வியாழக்கிழமை
விஹாரி தை  மாதம் 16 ஆம் நாள்  
(காலை 8 மணி)
தீக்ஷாத்தானம்:
ஸ்ரீ கிரிகுஜாம்பிகா ஸமேத         ஸ்ரீநாகேச்வரர்ஆலயம்,முதலிபாளையம்  
நீலம்பூர், கோயம்புத்துர் - 641062
தீக்ஷா ஆச்சார்யர் :
சிவஸ்ரீ. ஸத்யோஜாத தேசிகர் அவர்கள்
தொடர்பு அலைபேசி எண்
 9965533644  

  ஸ்ரீநாகேச்சரவர் ஆலயம்

https://goo.gl/maps/tLaSkc54VPu1qTkk7


திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment