rudrateswarar

rudrateswarar

Thursday, October 19, 2017

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 03




தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 03

திருச்சிற்றம்பலம்


திருஞான சம்பந்தர் பெருமான் தனது திருக்கடைக்காப்பில் எங்கும் இப்பதிகத்தை வைத்து வேள்வி செய்ய சொல்லவில்லை என்று பார்த்தோம்
வேத வேள்வி பற்றி சொல்லியுள்ளார்களா ?

சம்பந்தர்
தி-1-ப-39-பா-3 கலந்திசையாலெழுந்த வேதமும்வேள்வியும்
தி-1-ப-42-பா-2 அனலதுவாடுமெம் மடிகள் மிக்கநல்வேத வேள்வியுளெங்கும்
தி-1-ப-82-பா-8 மறைவேள்வி பயின்றார் பாவத்தைவிடுத்தார்
தி-1-ப-82-பா-10 தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு
தி-2-ப-13-பா-7 வில்லானை வேதமும் வேள்வியு மானானைக்
தி-2-ப-31-பா-3 வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்
தி-3-ப-71-பா-5 வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி
தி-3-ப-80-பா-7 மந்திரநன் மாமறையி னோடுவளர் வேள்விமிசை
அப்பர்
தி-4-ப-74-பா-1 வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க
தி-4-ப-92-பா-17 ஓதிய ஞானமும் ஞானப்பொருளும் ஒலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியு மாவன
தி-5-ப-11-பா-9 வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர்
தி-5-ப-67-பா-4 அருமறை நான்குடன்தங்கு வேள்வியர்
தி-6-ப-2-பா-2 பரிதி நியமத்தார் பன்னிருநாள் வேதமும் வேள்விப் புகையும்
தி-6-ப-16-பா-3 வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்
தி-6-ப-48-பா-1 நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண்
தி-6-ப-48-பா-1 வேத வேள்விச்சொல்லான்காண்
சுந்தரமூர்த்தி நாயனார்
தி-7-ப-68-பா-8 வேதனை வேத வேள்வியர் வணங்கும்விமல னை
தி-7-ப-88-பா-1 அந்தணர் நான்ம றைக்கிட மாய வேள்வியுள்
தி-7-ப-97-பா-7 அங்கமொ ராறவையும் அருமாமறை வேள்விகளும்
மணிவாசகர்
தி-8-ப-9-பா-20 வேதமும் வேள்வியும் ஆயி னார்க்கு
கண்டராதித்தர்
தி-9-ப-20-பா-2 ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறங்க நான்மறையோர்
நக்கீரர்
தி-11-ப-13-பா-1 பெருந்தேவபாணி -
வேலை நஞ்சினை மிக அமுதாக்கியை
வேத வேள்வியை விண்ணவர் தலைவனை

இது போன்ற சான்றுகள் இன்னும் நிறைய திருமுறைகளில் உள்ளது.
இவர்கள் அருளியது சிவபரம்பொருளின் வாக்கேயாம். எனதுரை தனதுரை
என்று . அப்படிப்பட்ட அருளாளர்களின் வாக்கை மதியாமல் அவர்களின் பாடல்களைத் தவறாக வேள்விக்குப் பயன்படுத்தி குருத் துவேசத்துக்கும் சிவநிந்தனைக்கும் ஆளாக்குமே தவிர பயனிலாச் செயல் இவர்கள் செய்வது பொருள் பற்றியே அருள் பற்றியல்ல.
வேதவேள்வியை நம் ஆச்சார்ய பெருமக்கள் மறுத்து உள்ளார்களா ? ஆம்
அதற்கு ஒரு பதிகமே பாடியுள்ளார் தவமுதல்வர் குருமுதல்வர்
மூன்றாம் திருமுறை பதிகம் 108 பாடல் முதல் வரி மட்டும்

1.வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
2.வைதி கத்தின் வழியொழு காதவக்கைத வம்முடைக்
3.மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
4.அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்
5.அந்த ணாளர் புரியும் அருமறைசிந்தை செய்யா
6.வேட்டு வேள்விசெ யும்பொரு ளைவிளி
7.அழலது ஓம்பும் அருமறை யோர்திறம்

இப்படி சைவத்தின் வேதாகமத்தை மறுப்பது என்பது அதை அருளிய
ஈசனையே மறுப்பதாகும். இவர்கள் திருநீறு எங்கே? எதற்கு? சிவவேடம் எங்கே எதற்கு ?
எல்லாம் பொய்வேடமே. மேலும் திருமுறைக்கு தப்பாக பொருள் கூறும் அஞ்ஞானிகள் இது சமணர்களைக் கண்டித்து பாடியது எங்களுக்கு அல்ல என்பர் .அப்போ இடரினும் தளரினும் பாடல் பாடினால் சம்பந்தருக்கு மட்டும் தான் பொருள் கிடைக்குமா ? உங்களுக்கு கிடைக்காதா ? திருநீற்றுப்பதிகம் பாடினால் எல்லோருக்கும் சுகம் உண்டாகாதா ? அறிவிலிகளே. உண்மையை உணர்ந்து திருமுறையை ஓதி உய்வு பெறுங்கள்
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்கு சோதிக்க வேண்டா ? என்றாரே சம்பந்தர் திருப்பாசுரத்தில்.
தி.க.வின் ஆன்மீகப்பிரிவினருக்குத் தான் இந்த எச்சரிக்கை. அடுத்த பாடலில்
ஆடும் மெனவும் அருங்கூற்ற முதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே

இறைவன் திருநடனம் புரிவதும் , மார்க்கண்டேயருக்காகக் காலனைக் காலால் உதைத்ததும் , வேதங்களை அருளிச் செய்ததுமான செயல்கள் தன் புகழ்  கருதியா செய்தார்  மன்னுயிர்களின் தீவினைகளை நீங்குவதற்காகவும் , பிறப்பை அறுத்துப் பிறவா நெறியை அளிப்பதற்காகவும் செய்த அருளிப்பாடுகள் என்று கூறுகிறார். வேதங்களை அருளியது நாம் உய்யவே என்று நிறுவுகிறார்.
வேள்வித்தலைவன் ஈசனே அவரை மதியாதும் அவருடைய வாக்கை இந்த மரமண்டைகளுக்குப் புரியும் வண்ணம் தமிழில் அருளிய அருளாளர்களின் வாக்கை மதியாதும் செய்யும் வேள்வியால் என்ன பயன் ?. பயனல்ல கேடு தான் எப்படி ? இறைவன் திருவுளப்பாங்கிற்கு மாறாக இவர்கள் செய்யும் வேள்வி போலச் செய்த தக்கன் வேள்வியில் நிகழ்ந்தது


எச்சனிணத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார்
இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார்
மெச்சன்வியாத் திரன்தலையும் வேறாக் கொண்டார்
விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்த
உச்சநமன் தாளறுத்தார் சந்திரனை யுதைத்தார்
உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம்
அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார்
அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே. தி-6-ப-96-பா-9

எச்சன் எனும் வேள்வித்தலைவனின் தலை,பகன் என்னும் சூரியரின் கண்,இன்னொரு சூரியனின் பல்,தக்கன் தலை,அக்கினியின் கரம்,வேள்வி காத்த யமன் கால், சந்திரனுக்கு உதை இவையெல்லாம் தண்டனையாக கிடைத்தது .
அற்ப மானுடராகிய நாம் ஈசனின் திருவுளத்திற்கு மாறாக தமிழ் வேள்வி செய்தால் …….


    திருச்சிற்றம்பலம்

2 comments:

  1. வேதவேள்வியை நம் ஆச்சார்ய பெருமக்கள் மறுத்து உள்ளார்களா ? ஆம் // ஆம் என்பது சரியா ?

    ReplyDelete
    Replies
    1. எங்கும் மறுக்கவில்லையே

      Delete