போற்றி ஓம் நமசிவாய
தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 07
திருச்சிற்றம்பலம்
தமிழ்வேள்வி வழிபாட்டுக்கு முன்னோடி என்று ஒருவரைக்
கூறுகிறார்கள்
வேதாசலம் பிள்ளையை .இவர்
தனித் தமிழ் இயக்கம் காணட்டும் இன்னும் எதுவும் காணட்டும் இவர் தனது பெயரைத் தானே தமிழ்ப்படுத்தி மறைமலை என்று
வைத்துக்கொண்டார் நமக்கு ஆட்சேபணை இல்லை.
வாதவூரடிகள், நமிநந்திஅடிகள் , பெரியபெருமான்
அடிகள் என்பது போல தனக்குத்தானே அடிகள் என்று தம்மைக் கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்திக்கொண்ட
அக்கால நீதிக்கட்சிக்காரர் .இவர்
செய்த அநியாயத்துக்கு அளவேயில்லை நம் சமயக்குரவர்களின் பெயரை தமிழ் படுத்தினார்
பாருங்கள்
திருஞான சம்பந்தர் - அறிவுத்தொடர்பு
, மாணிக்க வாசகர் - மணிமொழி, சுந்தரமூர்த்தி – அழகுரு ,
அப்பர்
தப்பினார் இதில் . இறைவனிடமும்
அருளாளர்கள் மீதும் உண்மையான பயபக்தி இருந்தால் மலம் நீங்கப்பெறாத தனது பெயரை
அடிகள் என்றும் சமயக் குரவர்களின் பெயரையும் மாற்றுவார் .
இவர் யாரிடமும் தீட்சை பெறவில்லை சிவபூஜை செய்யவில்லை ஏன்
சிவசின்னம் கூட தரிக்காத இவர் ஈரோடு ராமசாமியின் தோழர் என்றால் மிகையில்லை. இவர் எப்படி
வழிபாட்டு முறையில் தலையிடலாம் ? தகுதி தான் என்ன ? சண்டமாருதம் சூளை சோமசுந்தரம் நாயகர் அவர்களிடம் சைவ சித்தாந்தம் மட்டும்
படித்தவர் .
அடுத்து இவரிடம் தமிழ் படிக்க வருகிறார் பாலசுந்தரம்
அவர்கள் .இவருக்கு
தனித் தமிழ் பெயராக இளவழகனார் என்று பெயர் மாற்றம் செய்கிறார் இவர் தனது ஆசிரியர்
வழியில் தனது பெயரை ( தீட்சா
நாமம்? ) அழகரடிகள்
என்று வைத்துக் கொண்டார் . இவர்
திருக்குறள் பீடம் நிறுவியவர் . இருக்கட்டும்
இவர்களின் தமிழ் அறிவு கற்றதனால் ஆய பயனென் கொல் என்ற குறளுக்கு விளக்கமாக இல்லை. நாலு பேர் போன
வழியும் போகவில்லை அவர்கள் காட்டிய வழியும் போகவில்லை .வேதம் ஆகமம்
முதலியவை இறைவனால் அருளப்பட்டவை என்ற நால்வர் வாக்கை தூக்கியெறிந்தனர் . திருமுறைகளுக்கும்
சைவ சித்தாந்தத்திற்கும் புதுமையாக இவர்கள் மனம் போன போக்கில் உரை சொன்னார்கள்.இன்னும் கூட
சித்தாந்தத்திற்கு எல்லோரும் ஒரே மாதிரியான உரை சொல்வதில்லை அது நமக்கு வேண்டாம்
தீட்சா முறைகள் மற்றும் கிரியைகள் ஆகமத்தில் மட்டுமே விரிவாக
கூறப் பட்டுள்ளது அதன் பின் திருமந்திரம் சித்தியார் போன்றவற்றில் கூறப்பட்டுள்ளது தீட்சை என்பது
பாசமாகிய மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுப்பது .இந்த தீட்சையின் தாற்பரியம் எதுவும் இல்லாமல் இவர்களாக ஒரு
தீட்சை முறையை உருவாக்கி மக்களை ஏமாற்றத் தொடங்கினர் .மலம் நீங்கி
குருநாதரால் ஞானநோக்கம் அருளப்பெறாத மந்திர உபதேசம் பெறாதவர் எப்படி அதை
மற்றவர்களுக்கு செய்து வைக்கமுடியும் ?. அந்த
பாவனை எப்படித்தெரியும் ?.மந்திரம்
என்ன பீஜம் சேர்த்து சொல்லவேண்டும் என்பதெல்லாம் இவர்கள் சம்பந்தர் போல ஓதாமல்
உணர்ந்தரோ ?
இவரிடம் நடராசன் என்பவர் வருகிறார் அவருக்கு ஆடலரசு என்று தனித்தமிழ்ப்
பெயர் சூட்டப்படுகிறது .அது
அவருக்கு தீட்சாநாமம் ? ஆனது. இந்த பெயர்
மாற்றியதே சமய விஷேட நிர்வாண ஆச்சார்ய தீட்சை ஆனது. ஆடலரசு அவர்கள் தம்தமிழ் குருநாதரைப் போலல்லாமல் எதோ இரண்டு
கிரியைகள் அதாவது சீடன் மேல் நூல் போடுவது கையால் தொடுவது கண்ணால் பார்ப்பது
எல்லாம் செய்கிறார் .இதெல்லாம் ஏதோ நூல்களில் படித்து விட்டு அதன் படி செய்கிறார் .ஆனால் அப்படி செய்யும் பாவனைக்கு பலன் உண்டாக்கத்
தெரிய வேண்டுமே வெறுமனே செய்து என்ன பயன் ?.உண்மையில்
சொல்லப்போனால் தீட்சையில் வர்த்தினி என்றால் யார் என்று கேட்பார்கள் ஆனால் என்ன
செய்தாலும் கோளறுபதிகம் திருநீலகண்டப்பதிகம் , இடர்களையும்
பதிகம் ,பஞ்சாக்கரப்பதிகம்
, தவநெறிப் பதிகம்
இவை தான் மந்திரம் . இன்று வரை
எல்லா வேள்வியிலும் தீக்கை நிகழ்விலும் இவைதான் பாடப் படுகிறது. நால்வர் வாக்கை இவர்கள் மதியாமல்
போனாலும் இப்பதிகங்கள் தான் சோறு போடுகிறது என்பது நிஜம்.
எப்படியோ ஆடலரசு சமய விஷேட தீட்சை மட்டும்
கொடுத்துக்கொண்டிருந்தார் அவரிடம் நிர்வாண தீட்சை கேட்டவர்களுக்கு 12 ஆண்டுகள்
ஆகவேண்டும் என்று கூறித் தப்பிவிட்டார் . அடுத்து
இவர் தனது மகன்கள் அருளரசு மற்றும் ஒளியரசு அவர்களிருவருக்கும் நிர்வாண ஆச்சார்ய
அபிஷேகம் செய்து வைத்ததாக சொல்லப்பட்டு அவர் காலத்திற்குப்பின் அவர்கள் தீட்சை
வழங்கலாயினர் .ஏன் தமிழகம் முழுக்க
சீடர்கள் இருக்க தம் இருமக்களுக்கு மட்டும் ஏன் நிர்வாண ஆச்சார்ய அபிஷேகம் செய்து
வைக்கவேண்டும் . வேறு பக்குவமானவர் ஒருவரும் இல்லையா ?
இங்கு தான் மிக முக்கிய காலகட்டம் நிர்வாண தீட்சைக்கான வழிமுறை தெரியாது . அவர்களும்
திருமடங்கள் வெளியிலுள்ள ஆச்சார்யார்கள் பலரிடம் கேட்டும் யாரும் அதற்கான செயல்விளக்கம்
அளிக்கத் தயாராய் இல்லை. இந்நிலை
இப்படியிருக்க நாங்கள் விஷேட தீட்சை பெற்று 15
ஆண்டுகள் ஆகிறது எங்களுக்கு நிர்வாண தீட்சை வழங்க வேண்டும் என்று பலரும் கேட்க
தமிழ் முதுமுனைவர் ஒருவரிடம் கலந்து பேசி இவர்களே ஒரு வழிமுறை தயாரித்து (ஆகமசீலரோ) அதற்கு மேலும்
இரண்டு பதிகங்கள் சேர்த்துப்பாடி கொடுத்துவிட்டார்கள் . இருபிறப்பாளன்
என்பதற்கு அடையாளமாக தீட்சா நாமம் கிடையாது நிர்வாண தீட்சை பெற்றவர் நித்தம்
எரியோம்பல் செய்ய வேண்டிய தில்லை
.ஏனெனில் ஆச்சார்யரே செய்வதில்லை .அதற்கெல்லாம்
எங்கே வழிவகை தேடுவது ? தீட்சை
செய்து வைப்பதே பெரிய வேலையாய்ப் போயிற்று சிவசிவ
. ஒளியரசு அவர்களை
மிக உயர்ந்த இடத்தில் வைத்திருந்த சீடன் ஒருவர் நிர்வாண தீட்சை கேட்க அவர் காலம்
தாழ்த்த அந்த சீடன் இறைவரின் பெருங்கருணையினால் நல்ல ஆச்சார்யர் ஆகமசீலர் கிடைக்க
பழைய குருவான ஒளியரசுவிடம் ஆசி கேட்கிறார் . அப்பொழுது
அவர் சொல்கிறார் அந்த நிகழ்வை வீடியோ எடுத்து தரமுடியுமா ? என்று .ஏன் ஐயா அது
எதற்கு ?என்று
கேட்க நிர்வாண தீட்சை வழிமுறைகள் தெரியவில்லை என் தந்தை எமக்கு
முறையாக செய்து வைக்கவில்லை கிடைத்தால் சவுகரியமாயிருக்கும் நிறையப்பேர்
கேட்கிறார்கள் என்று சொல்ல அந்த சீடனின் மனநிலை எப்படி இருந்திருக்கும் ? நாம் இவ்வளவு
காலம் முறையாக தீட்சை உபதேசம் பெறாத ஒருவரையா ஆன்மநலம் கிட்டும் என நம்பிக்காலம் கழித்தோம் என்று மிகவும் நொந்துவிட்டார் .எப்படி பிறப்பு இறப்பு இல்லாத ஒருவரால் மட்டுமே பிறவாமையைத் தரமுடியுமோ அதுபோல மலம் நீங்கி வினைகள் நீங்கிய ஒருவராலேயே சீடனின் மலம் நீக்கி ஞானத்தை புகட்டிடமுடியும் இவர் ஆன்மாக்கள் உய்ய வழிகாட்டாமல் ஆன்ம துரோகம் செய்கிறாரே பொய்யாக ஏமாற்றுகிறாரே போலிசாமியாருக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு ? மனச்சாட்சியே இல்லையா இவர்களுக்கு ? இன்னம்பர் ஈசன்
இவர்களின் கீழ்க்கணக்கைப் பார்க்கமாட்டாரா என்று பிரார்த்திக்கிறார் .இன்று சாதாரண
ஆரம்பப்பள்ளி ஆசிரியராவதற்கே டெட் நெட் தேர்ச்சி தேவை என்கிறார்கள் . அப்பொழுது இந்த
அருளியல் கல்விக்கு எவ்வளவு தகுதி தேவை என பாருங்கள் . இப்படிபட்ட
தகுதியற்ற வழிகாட்டிகள் தான் தமிழ்வேள்வி வழிபாட்டை முன்னெடுத்துச் செல்கின்றனர் .புரிந்துகொள்ளுங்கள்
என்று முதல் பதிவுக்கு வருகிறோம் .
மருத்துவம் முறையாகக் கற்றுத் தகுதி பெற்று ஊசி போடுங்கள் நீங்கள்
ஆரம்பக்கல்வியே முறையாகக் கற்காமல் ஆப்ரேசன் செய்வது எப்படி ?
இறைவா இன்னொரு சம்பந்தர் வேண்டும் பெருமானே
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக