rudrateswarar

rudrateswarar

Friday, October 20, 2017

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 05



         போற்றி ஓம் நமசிவாய

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 05
                     திருச்சிற்றம்பலம்

ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
இது திருவாசகம் சிவபுராணத்தில் 4 ஆவது வரி.
இந்த பாடல் வரிகள் மூலம் ஆகமத்தைப் பின்பற்றி வழிபட்டால் அயன் மால் இந்திராதி தேவர்களுக்கு அரிய பெருமான் நம்மை அண்ணிப்பார்.நெருங்குவார் என்று மணிவாசகர் அருளியுள்ளார். இது அவரை வணங்குவோம் அவர் பாடலை நாளும் சொல்லுவோம் அவர் சொன்னவாறு பொருள் உணர்ந்து அதன் படி நடக்க மாட்டோம் நாங்கள் பகுத்தறிவு சிங்கங்கள் என்பது போல உள்ளது.ஏன் இந்த போலி வேடம் ? இன்னும் ஆகமம் பற்றி சில திருமுறை உதாரணங்கள்

தி-3--39-பா-2- ஆகமத்தொடு மந்திரங்களமைந்த சங்கத பங்கமாப்
தி-3--57-பா-10- ஆகமச்செல்வனாரை லர் தூற்றுதல் காரணமாக்
தி-3--23-பா-6- தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்வகுத்தவன்
தி-7--96-பா-6- அம்மானே ஆகம சீலர்க்கு ருள்நல்கும்பெம்மானே
தி-7--100-பா-8- அரவொலி ஆகமங்கள் அறிவார்அறி தோத்திரங்கள்
              விரவிய வேதஒலி விண்ணெலாம்
தி-8--2-மாவேட்டாகிய ஆகமம் வாங்கியும்
      மற்றவை தம்மை மகேந்திரத்திருந்து
      உற்ற ஐம்முகங்களால் பணித்தருளியும்

11-37-40 ஆகமங்கள் கேட்பார் அருங்கலை நூல் ஆதரித்துப்
                போகம் ஒடுங்காப் பொருள் துய்ப்பார் சோகமின்றி.

திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் புராணம்

வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந்து ருளித்
துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுது
தெள்ளு வாய்மையின் ஆகமத் திறன் எலாம் தெளிய
உள்ளவாறு கேட்டு அருளினாள் உலகை ளுடையாள்  -பாடல்-50

திருக்கயிலை மலையில் வீற்றிருந்து அருளும் கங்கை சூடிய சிவபெருமான் உலக உயிர்களை அடிமையாக உடைய உமையம்மைக்கு தெளிந்த மெய்ப் பொருள்களைக் கூறும் சிவாகமங்களின் தன்மைகளை உள்ளவாறு அருள அம்மை தொழுது கேட்டருளினார். இது மேற்கண்ட பாடலின் பொருள்

எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை என  ரைத் தருள
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆ தரித்தாள்
பெண்ணில் நல்லவள் யின பெருந்தவக் கொழுந்து பாடல்-51

எண்ணற்ற ஆகமங்களை மொழிந்தருளிய ஈசர் தாம் விரும்பும் உண்மையாவது தம்மை முறைப்படி பூசிப்பதேயாகும் என்று உரைத்தருள பெண்ணில் நல்ல பெருமாட்டியாரும் உயிர்கள் அனைத்திற்கும் தலைவரான பெருமானாரை வழிபாடாற்ற உள்ளத்து விருப்பம் கொண்டார். இது மேற்கண்ட பாடலின் பொருள்

நங்கை உள்நிறை காதலை நோக்கி நாயகன் திருவுள்ளத்து மகிழ்ந்தே
அங்கண் எய்திய முறுவலுந் தோன்ற அடுத்ததென்கொல் நின்பாலெனெ வினவ
இங்கு நாதநீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனைஅர்ச்சனை புரியப்
பொங்குகின்றது என் ஆசையென்றிறைஞ்சிப் போகமார்த்தபூண்முலையினால் போற்றபாடல்-53

பெருமாட்டியின் திருவுள்ளம் தம்மை வழிபட இருக்கும் நிறைந்த காதலை நோக்கி நீ செய்வது யாது ? என வினவ என்தலைவரே தாங்கள் அருளிய ஆகமத்தின் இயல்பினால் உம்மை வழிபட ஆசை பொங்குகின்றது என்றார் பெருமாட்டி.

மூன்று பாடல்களிலிருந்தும் நாம் பெறுவது என்ன
1.ஆகமங்கள் சிவபெருமானால் அருளப்பட்டவை 
2.ஆகம பூசையையே சுவாமி விரும்புகிறார். விருப்பு வெறுப்பற்ற ஈசனுக்கு விருப்பமா ? ஆம் உயிர்கள் உய்வு பெற வேண்டும் என்று கொண்ட பெருங்கருணை. 3.ஆகமங்களின் தன்மைகளை உணர்ந்து ஈசர் விரும்பும் பூசையை ஆகமத்தில் அருளியவாறு செய்ய அம்மை விரும்புகிறாள். அம்மை ஏன் விரும்ப வேண்டும் ? உலக உயிர்களைத் தன் அடிமையாக உடையவள் அல்லவா ? பால் குடிக்கும் குழந்தைக்கு உடல் நலமில்லை என்ற உடனே தாய் மருந்துண்ணுவது போல அன்னை தலைவியாய் இருந்து உயிர்களுக்கு முன்னுதாரணமாய் இருந்து உணர்த்தினாள். தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்புழிப்போல .

தெய்வச்சேக்கிழார் சுவாமிகள் இதைவிட எப்படி விளக்கமுடியும் ? இதிலிருந்து ஆகமவழி பூஜையே இறைவர் விரும்புவது என்று நிரூபணம் ஆகிறது . பெரியபுராண வகுப்பு எடுக்கும் தமிழ்வேள்வி வழிபாடு செய்யும் மேதாவிகள் தாங்கள் என்ன உணர்ந்தார்கள் ? இவர்கள் பெரிய புராணத்தை வெறும் கதையாக மட்டும் சொல்லிக்கொண்டுளரா ? இவர்களால் பெரியபுராணத்தின் உண்மையான சாராம்சம் விளக்க முடியுமா ? அதுவும் பொருள் பற்றியே தானா ? தமிழ்வேள்வி வழிபாட்டை விரும்பும் மக்களே ,ஒரு அடிப்படையும் இல்லாமல் நீங்கள் ஆதரவு கொடுத்தால் ஏமாறுபவர் இருக்கும்வரை ஏமாற்றுபவர் இருப்பர் என்பதற்கு உதாரணம் ஆவீர்.

            திருச்சிற்றம்பலம்

அடுத்து ஆகம உண்மைகளைச்செப்ப வந்த திருமூலதேவர்……

No comments:

Post a Comment