rudrateswarar

rudrateswarar

Monday, October 16, 2017

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் -1



                    போற்றி ஓம் நமசிவாய

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் -1



திருமுறைக்கு தவறாக பொருள் கூறும் மேதைகளுக்கு இது சிவாபராதம் என்று தெரியுமா? புரிந்து வழிபாடாம் தமிழில். உண்மையில் புரிந்து மட்டும் ஒருவர் உங்கள் தமிழ் வழிபாட்டினை கண்ணுற்றால் அப்பொழுது தெரியும் உமது நிலை.கிரியைக்கு பொருத்தாமில்லப் பாடலைச் சொல்வது. உதாரணம் ஒன்று மட்டும் இப்போது ஆனைந்து வழிபாடு . ஆனைந்துக்கும்  பஞ்சாக்கரப் (நமசிவாய )பதிகங்களுக்கும் என்ன சம்பந்தம். தவறிப்போய் அப்பர் பஞ்சாக்கரப்பதிகத்தில்  ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல் என்று பாடிவிட்டார்.  ஆவினுக்குத் தான் அது அருங்கலம். ஆனால் பஞ்சகவ்விய வழிபாட்டுக்கும் இப்பாடலுக்கும் மற்ற ஐந்தெழுத்து பதிகங்களுக்கும் என்ன சம்பந்தம்.



இது மாதிரி சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் பொருத்தம் இல்லா பாடலைப் பாடி வயிறு வளர்க்கும் கும்பல் இதே போல தூபம் தீபம் அமுது படைக்க  என எல்லாவற்றிற்கும்  செய்கிறது. இச்செய்கைகள் தினம் ஒன்றாக பதிவிட்டு மக்களை  மாக்கள் என நினைந்து பொய்யுரைத்து பணம் பறிக்கும்  நிகழ்வு  திருவருள் துணை கொண்டு தோலுரிக்கப்படும்

                     திருச்சிற்றம்பலம்

4 comments:

  1. இந்த கட்டுரை தொகுப்பை எனது வலை தளத்தில் தங்கள் வலைதள பெயரில் வெளியிட வேண்டுகிறேன்

    ReplyDelete
  2. இந்த கட்டுரை தொகுப்பை எனது வலை தளத்தில் தங்கள் வலைதள பெயரில் வெளியிட வேண்டுகிறேன்

    ReplyDelete
  3. தங்களது இந்த தொடர் கட்டுரையை எனது வலைதளத்தில் மறபதிவு செய்யலாமா. (with your blog reference) My blog is hinduunityblog.wordpress.com

    ReplyDelete