rudrateswarar

rudrateswarar

Friday, October 20, 2017

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 04



                   போற்றி ஓம் நமசிவாய
தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 04

                     திருச்சிற்றம்பலம்

மறைகள் நிந்தனை சைவ நிந்தனை பொறா மனம் வேண்டும் என்று திருவையாற்றில் அப்பனிடம் வரம் கேட்டுப்பெற்ற நம் முதல் குரவனாம் (அடியேனுக்கும்) நந்தி எம்பெருமான் பாதமலர் தலைக்கொண்டு தொடர்வோம். சைலாதி மரபுடையோன் கயிலாய பரம்பரையின் முதல் குருவான திருநந்தியெம்பெருமான் மறை நிந்தனை மறந்தும் தனக்கு வந்து விடக்கூடாது என்று முதல்வரமாக அதைக் கேட்கிறார் என்றால் அதன் முக்கியத்துவம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கும் . குருவணக்கப் பாடல் சொல்லும்போது கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கம் முதல் கற்ற கேள்வி என்று பாடுகிறீர்களே .அது பொய்யான வணக்கமா ? உள்ளத்தில் அன்பில்லாமல் வெறும் வாய்ச்சொல்லாக பாடினால் பலன் உண்டா ? நால்வர்துதி சொல்கிறீர்களே அவர்கள் ஆசி உங்களுக்கு உண்டா ? உங்களையும் சிலர் வேள்விக்கு அழைக்கிறார்களே அவர்கள் நம்பிக்கையைக் கெடுத்து சிவபரம்பொருளின் திருவுள்ளத்துக்கும் ஆச்சார்யப் பெருமக்களின் வாக்குக்கும் மாறாக வேள்வி செய்கிறீர்களே ?.அது பலன் கொடுக்குமா ?

ஓதி உணர்ந்து இருந்தால் ஏக தெய்வ வழிபாடாக இருக்கும் தேவார திருவாசகங்களை வேள்வியில் இட மாட்டார்கள் . அதை சிறு தெய்வங்களான கருப்பராயன் மாரியாத்தா அங்காளம்மன் சாய்பாபா முனீஸ்வரன் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகத்திற்குப்  பயன்படுத்துவார்களா ?. ஆக இவர்கள் வேதத்திலும் பொருந்தவில்லை . திருமுறைகளுக்கும் உண்மையாக இல்லை. சாத்திரங்களிலும் நம்பிக்கையில்லை . ஐயோ இரக்கம் ஒன்றிலீர் என்று பாடிவிட்டோமே? திருவருளுக்கு மாறுபட்டு நடந்தோமோ ? என்று அப்பர் வருந்தினாரே .என்ன கற்றீர் திருமுறையில் .வாகீசராக இருந்தபோது அப்பர் செய்த தவறு என்ன ? இராவணன் உய்யும் வழி தானே கூறினார் அதற்கே பிறவி பெற்று புறச்சமயம் சார்ந்து எவ்வளவு இன்னல்கள் பெற்றார். இன்னொரு பிறவியே கொடுமை எனும் போது புறச்சமயம் அதைவிடக்கொடுமை தானே ? இவர்கள் செய்யும் தவறுக்கு மனிதப்பிறவி வாய்ப்பதே அரிதல்லவா ? ஊதியமே பொருட்டாக செய்ய மனசாட்சி இல்லையா? வந்த பிறவியை இறைவரை வாழ்த்தி ஆன்ம நலம் பெற்று உய்வு பெறாமல் வீணாக்கலாமா ? சிந்தியுங்கள் திருமுறைத்தொழிலோரே !

வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயக னாதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே. தி-5--100-பா-1

வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களேதிருமந்திரம்    வேதச்சிறப்பு
             திருச்சிற்றம்பலம்

அடுத்து ஆகமமாகி நின்றால் அண்ணிப்பவரைச் சிந்திப்போம்….

No comments:

Post a Comment