ஓம் நமசிவாய
நமக்குள்ளே மிருகம்
ஒரு யுகத்தில் நல்லசக்தியும் தீயசக்தியும் வேறு வேறு லோகத்தில் இருந்து சண்டை யிட்டுக்கொண்டன உதாரணம் கந்தபுராணம் . பத்மாசூரனுக்கும் தேவர்களுக்கும் நடந்த போர் அடுத்த ஒரு யுகத்தில் ஒரே லோகத்தில் வேறு வேறு திசையில் இருந்து சண்டையிட்டுக் கொண்டன உதாரணம் இராமாயணம் அடுத்த ஒரு யுகத்தில்இந்த நல்லசக்தியும் தீயசக்தியும் ஒரே வீட்டில் ஒரே குடும்பத்தில் இருந்து சண்டையிட்டுக் கொண்டன உதாரணம் மகாபாரதம் .அடுத்த நாம் வாழும் இந்த யுகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளேயே நல்லசக்தியும் தீய
சக்தியும் ஒன்றோடு ஒன்று போரிட்டுக் கொண்டுள்ளன.பல சமயங்களில் நல்ல சக்தியும் சில சமயங்களில் மிருக சக்தியும் வெற்றி பெறுகின்றன.
நல்ல சக்தி என்பது என்ன? நாம் செய்யும் அறச்செயல்கள் யாவும் நல்லசக்தியால் வந்தவை.தீயசக்தி மிருகசக்தி அசுரசக்தி என்பது பாவம் செய்வதையே முழுமுதலாக
செய்பவை .
முன் உள்ள யுகங்களில் இருந்து கடவுள் நேரில் தோன்றி வழிகாட்டுவதை படிப்படியாக குறைத்து விட்டார் மக்களின் தேடல் வளரட்டும் ஆன்மாவை தானே மீட்டுக் கொள்ள பக்குவம் கொடுத்துள்ளார் . அந்த பக்குவம் பிராப்தம் நம்மை அடைய நிறைய தடைகளையும் உண்டு பண்ணி கஷ்டப்பட்டால் மட்டுமே கிடைக்கும் என்ற எதார்த்தத்தில் மக்களை வழி நடத்துகிறார். அதற்குள் தான் நாம் எத்தனை புல்லுருவிகள் போலிகள் எல்லாம் தாண்டி ஆத்மகுருவை நாடி நம்மைக் கடைத்தேற்ற வேண்டும்
நமக்குள்ளே உள்ள நல்லசக்தி என்பது கடவுள் நம்மோடு இருக்கும்வரை வேலை செய்யும். கடவுள் நம்மோடு எப்போதெல்லாம்இருப்பார் . நாம் அவரை துதித்து வணங்கி தியானித்து இருக்கும்போதெல்லாம் இருப்பார். நல்ல சிந்தனை அப்போது தலை தூக்கும், செய்யும் அனைத்துமே சிறப்பாக இருக்கும்.கடவுளை மறுக்கும் உன்மத்தர்கள் நன்றாகத்தானே உள்ளார்கள் என்று கேட்பது புரிகிறது .சாக்கிய நாயனார் தினம் கல்லால் சிவலிங்கத்தை எறிவார் என் தெரியுமா?அவருக்கு கடவுளை ஈசனை எப்படி வணங்குவது என்று தெரியாது?
அதன் மூலமும் அவருக்கு முக்தி கிடைத்தது
ஏனென்றால் செய்வன திருந்த செம்மையாக
செய்தார்
இந்த சோம்பேறி நாத்திகனும் அப்படியே தான் வணங்க வழிபட அதன் வழிமுறை பற்றி அறிந்து கொள்ள சோம்பல் வேறொன்று
மில்லை அவனுக்கு அருள் கிடைக்க காலம்
இருக்கிறது அதுவரை டைம்பாஸ் செய்ய அவனுக்கு ஒரு டாபிக் தான் நாத்திகம் அப்போது அவனுக்கு கழிவறையும் ஒன்று தான் சாப்பாட்டுகூடமும் ஒன்றுதான் ,அது அதுக்கு உரிய மரியாதை தெரியாதே? தேனின் சுவையை சாப்பிட்டவரால் மட்டுமே உணர முடியும் தேன் சாதாரணமாக கிட்டுமா? அது
போல தான் ஆன்மீகமும் வழிபாடும் .
தீயசக்தி எப்போதெல்லாம் தலை தூக்கும்?
அதுவும் நம்மாலேயே வரும் நல்ல வார்த்தைகள் வராது சிந்தனையும் நன்றாக இருக்காது ச்சீ சனியனே நாசமாபோனவனே
போன்ற அமங்கலவார்த்தைகள் நம்மில்வரும் செய்யும் செயல்கள் அப்படியே நடக்கும். உள்ளத்தில் உள்ளது உதட்டில் வெளிப்படும் . இவ்வாறு சிந்தனை செயல் நன்றாக
இல்லாத மனிதன் நிலை எப்படி இருக்கும்?
கஷ்டம் தானாகவே வரும். அவனை எல்லா கெட்ட காரியங்களும் செய்ய வைக்கும். மிருகங்களுக்கு சிந்திக்க தெரியாது, அது சிந்தித்தால் அது பாவம் செய்யாது. அதனால் தான் சிந்தித்தும் நல்ல செயல் செய்யாத மனத்தை மிருகத்துடன் ஒப்பிடுகிறோம். நம்மிடத்தில் அந்த அசுரசக்தி மிருகசக்தி பலம் இழந்து விலக நாம் பக்தியுடன் சிரத்தையுடன் பற்றற்ற பகவானை பற்றுவதே சிறந்த வழி
அதுவே நம் முன்னோர்கள் பெரியோர்கள் காட்டிய அற்புதமான வாழ்வியல் நெறி வாழ்ந்து காட்டிய நெறி .அவர்கள் மிக்க அறிவாளிகள் இல்லையென்றால் அந்த ஜீன்களில் வந்த நாம் அறிவாளியாக இருக்க முடியாது.
தனக்குள்ளே உள்ள மிருகத்தை வெற்றி கொள்பவனே வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்தி வெற்றி கொள்கிறான்
போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்

arumaiyaana pathivu
ReplyDelete