ஓம் நமசிவாய
திருநாவுக்கரசுநாயனார் புராணம்-3
அப்பூதியடிகளுக்கு அருள்புரிதல்
பல புண்ணிய தலங்களை தரிசித்து திருப்பழனம் அடுத்துள்ள திங்களூர் வந்தார்
அங்கு திருநாவுக்கரசரை குருமூர்த்தமாக கொண்டு மக்கள் சாலை குளம் கிணறு தண்ணீர்பந்தல் பாடசாலை என அனைத்திற்கும் அவருடைய பெயரை வைத்து அவரையே சதா நினைத்து பக்தி செய்து கொண்டிருந்தார் அப்பூதியார் அவர்கள் .அது கண்ட அப்பர் அங்கிருந்தவர்களிடம் கேட்டு அவர் திருமாளிகை சென்றார் .அவரை தொழுத அப்பூதியாரிடம் நீர் அமைத்த அறச்சாலை முதலியவற்றிற்கு நும் பேர் வைக்காமல் வேறொரு பேர் வைத்தது ஏனோ?
என்று வினவினார்.அது கேட்ட அப்பூதியடிகள்
சிவபெருமானின் திருவருள் முழுதும் பெற்ற எமது ஆண்ட அரசு திருநாவுக்கரசரின் பேர் வேறொரு பேரோ? நீர் உரைத்தது தவறு, அவரை அறியாதார்அவனியில் யாருளர்?நீர் யார்? என்று சிறிது கோபத்துடன் கேட்டார் .
வாகீசர் இறைவரால் சூலைவலி தந்து சமண சமயத்தில் இருந்து வந்த அடியேன் என்று கூறினார்.அதுகேட்ட அப்பூதியார் அளவில்லா ஆனந்தம் அடைந்து குடும்பத்துடன் வணங்கி அவரை தன மனையில் உணவு செய்யுமாறு
வேண்ட அரசுகள் இசைந்தார்.விருந்துக்கு வாழைஇலை பறித்து வர தனது மூத்த மகன்
மூத்த திருநாவுக்கரசை பணித்தார். சிறுவனும் மகிழ்ந்து தோட்டத்தில் வாழைகுருத்தை அறியும்போது கொடியநாகம் தீண்டியது. தாயிடம் இலையைக்கொடுத்து விடம் தீண்டியதை உரையாமல் வீழ்ந்து மாண்டான்
அதுகண்ட அப்போதியடிகளும் அவர்தம் மனைவியாரும் ஆண்ட அரசு அமுதுசெய்ய தடையாகுமே என்று மகனின் உடலை மறைத்து மலர்ந்த முகத்துடன் வாகீசரை அழைத்து திருவடி விளக்கி அமுது செய்ய அழைத்தனர்.திருநாவுக்கரசர் தமது உள்ளத்தில் திருவருளால் தடுமாற்றம் ஏற்பட
மூத்த திருநாவுக்கரசர் எங்கே?என்று வினவினார்.அப்பூதியார் அவன் இப்போது இங்கு உதவான் என்றார் .நாயனார் உள்ளதை உரைப்பீர் என்ன அப்பூதியார் நிகழ்ந்ததை யுரைத்தார்.நன்று செய்தீர் இங்ஙனம் யார் செய்வார் என்று கருணைகூர்ந்து மகனது சவத்தை திருக்கோயிலின் முன் கொணரச் செய்து

ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவ ரூர்வது தானே.
என்றதிருப்பதிகம்பாடினார். இறைவன் திருவருளால்மைந்தன்உயிர்பெற்றான்.பின் உணவுஅருந்திதிருப்பழனம்சென்று அப்பூதியடிகளைசிறப்பித்துபதிகம் பாடியருளினார்
படிக்காசு பெற்றது
திருவீழிமிழலையில் திருஞானசம்பந்தருடன்
ஆளுக்கொரு மடம் அமைத்து தங்கியிருந்த காலத்தில்பஞ்சம்ஏற்பட்டது.மக்கள் வறுமை பட்டினியால் வாடினார்கள் .வீழிமிழலை இறைவர் இருவரின் கனவிலும் எழுந்தருளி
படிக்காசுதருவோம் மக்கள் பசியாற்றுங்கள்
என்று அருளி பீடத்தில் காசு அருளினார்.அது
கொண்டு மக்கள் பசியாற்றி பதிகம் பாடி பணிந்தனர்.
வேதங்கள் பூட்டிய திருக்கதவந்திறத்தல்
அப்பரும்சம்பந்தரும்மறைகள்திருக்காப்பிட்ட
வரலாறு கேட்டு சம்பந்தர் ,அப்பரே தாங்கள்
திருவாயிலைத்திறக்கபதிகம்பாடியருளுங்கள்
என்றார்.அன்பின் பெருக்கால் காழி மன்னர் கூற கேட்டு வாக்கின் வேந்தார் பாடலரானார்
பண்ணினேர் மொழியாளுமை பங்கரோ
மண்ணினார் வலஞ்செய் மறைக்காடரோ
கண்ணினாலு மைக்காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே
வாகீசர் பாடி திறக்க சம்பந்தர் பாடி சாத்தவும் முறைபடுத்தினர்
கயிலை காண விழைதல்
திருக்காளத்தியில் இறைவனை தரிசனம் கண்டு பரவசம் பெற்று கயிலை சென்று மணிகண்டரைவணங்கும்பெருவிருப்பத்துடன் வடதிசைநோக்கி புறப்பட்டார் ,திருப்பருப்பதம்
தலம் சென்று மல்லிகார்ச்சுனரைக்கண்டு தமிழ்ப்பதிகம் பாடினார்அங்கிருந்து காசியை அடைந்து உடன்வந்தவர்களை அங்குவிடுத்து
வடதிசை நோக்கி நடந்தார் .மனிதர்கள் செல்ல முடியாதஅடர்ந்த கானகத்தில் நடந்து
தசைகள் தேய்ந்தன இருந்தும் அன்பு தேயாதவராகி கரங்களால் தவழ்ந்து செல்வாராயினர் கரங்களும் தேய்ந்து மார்பினால் தவழ்ந்தார் மார்புந் தேய்ந்து சதைப்பற்று அற்று எலும்புகள் முறிந்தன அப்போதும் மனம் தளராமல் புரண்டு புரண்டு சென்றார் பரமேசர் அவர் மேலும் உலகில் இனிய செந்தமிழ் பாடல் பாடும் பொருட்டு கயிலைக்கு சேர அருளாதவராகி முனிவர் வடிவில் சென்று விவரம் அறிந்து கயிலையை காண தேவர்களாலும் இயலாது நீர் செய்வது வீண் முயற்சி ,நீர் திரும்பி செல்வதே சரி என்றுஅருளினார்.அப்பரோஆளும்நாயகனைக் கயிலையில் காணாமல் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என்றார் அவரின் உறுதி கண்ட உம்பர் நாயகன் விண்ணில் மறைந்து நின்று நாவுக்கரச எழுந்திரு என்று அருளி தேய்ந்தஉடம்புபழையஉருப்பெற்று செழிப்புற்றுஇருக்கபணித்தார் .இத்தடாகத்தில் மூழ்கி நமது திருக்கயிலாயக் காட்சியை திருவையாற்றில் காண்பாய் என்று மலர்ந்தருளினார் .அப்பர் ஐந்தெழுத்தை ஓதி அப்புனித வாவியின் கண் மூழ்கினார் திருவையாற்றில் எழுந்தார் அங்கு
சிவசத்தி ரூபமாக கயிலை காட்சிகண்டார்
திருப்பூந்துருத்தியில் திருமடம் அமைத்து உழவாரப்பணிசெய்தார்.அங்குவந்த சம்பந்தரின் பல்லக்கு சுமந்தார்.பொன்னையும்
மணியையும்கற்களுக்குநிகராகதடாகத்தில்
எறிந்தார் .அவருடைய பக்தி வைராக்கியத்தை
மன்பதர்கள்அறியும்வண்ணம் அரம்பையர் களை அனுப்பி மயக்கும்வண்ணம் செயல் புரிந்தும் சிறிதும் சித்தம் திரியாது இருந்தார்.
தாண்டகவேந்தர் எனும் அளவில் யாரும் பாட
இயலாத அளவுக்கு திருத்தாண்டகங்கள்
புனைந்தார்.உழவாரப்பணியின்முன்னோடியாக
திகழ்ந்தவர்
இறைவனடி சாரும் இன்பநிலை எய்துவதை
திருவருட்குறிப்பினால் உணர்ந்த அப்பர்
பூம்புகலூர் மேவிய புண்ணியரிடம் வேண்டி
எண்ணுகேன் என் சொல்லி எண்ணு கேனோ எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால் கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன் கழலடியே கைதொழுது காணின் அல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. |
என்ற பதிகம் பாடி சித்திரை மாதம் சதயம்
நட்சத்திரத்தில் நண்ணரிய சிவானந்த ஞான வடிவாகி அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட
அரசு அமர்ந்து இருந்தார் பேரின்பப்பேறு
வாழ்வைப்பெற்றார்.
இறைவன் சூலை கொடுத்து ஆட்கொண்டார் .
அவரே சம்பந்தன் தன்னைப்பாடினான்
சுந்தரன்பொன்னைபாடினான். நாவுக்கரசனோ என்னைப் பாடினான் என்று பெருமையாக
உரைத்தபெருமைக்குரியவர்.அப்பர் சுவாமிகளின் ஒவ்வொரு பதிகமும் பாடலும்
உள்ளம் உருக்குவதாயும் நம்மை நம் ஆன்மா
பழவினை நீக்கம் பெற உதவுவதாயும்
உள்ளது.அந்தஞானகுருவின் குருபூசையில் கலந்துகொண்டு இறைவனால் நமக்கு
அருளப்பெற்ற அருபெரும் பதிகங்களை நாள்தோறும் ஓதி பயன்பெற குருவருளும்
திருவருளும் துணை நிற்கட்டும்
போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment