rudrateswarar

rudrateswarar

Tuesday, June 28, 2016

முக்கண்பரமரின் முறுவல்




                        ஓம்நமசிவாய                  
        
முக்கண்பரமரின் முறுவல்

திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணத்தில் எம்பெருமானின் அருள் வெளிப்பாடு நிகழும்போதும் நேரில் வெளிப்படும்போதும் புன்முறுவல் பூத்து உள்ளார் முறுவல் என்பது குறுநகை அல்லது புன்னகை எனப்படும் அந்த முறுவல் நிகழ்ந்த இடங்கள் எவையெவை என்று தொகுத்து உள்ளோம்.

                      திருச்சிற்றம்பலம்


1. திருநாளைப்போவார் கனவில்

திருநாளைப்போவார் புராணம் பாடல் -27

இன்னல்தரும் இழிபிறவி
   இதுதடையென் றே துயில்வார்
அந்நிலைமை அம்பலத்துள்
   ஆடுவார் அறிந்தருளி
மன்னுதிருத் தொண்டரவர்
   வருத்தமெலாந் தீர்ப்பதற்கு
முன்னணைந்து கனவின்கண்
   முறுவலொடும் அருள்செய்வார்

2.திருக்கயிலையில் எம்பெருமானிடம் ஆகம உபதேசம் கேட்ட உமையம்மை அன்ணலாரை அர்ச்சனை புரிய ஆதரித்த போது

திருக்குறிப்புத்தொண்டர் புராணம் பாடல் -52

நங்கை உள்நிறை காதலை நோக்கி
   நாய கன்திரு வுள்ளத்து  மகிழ்ந்தே
அங்கண் எய்திய முறுவலும் தோன்ற
   அடுத்த தென்கொல்நின் பால் ன வினவ
இங்கு நாதநீ மொழிந்தஆ கமத்தின்
   இயல்பி னால்உனை அர்ச்சனை புரியப்
பொங்கு கின்றதென் சையென் றிறைஞ்சிப்
   போக மார்த்தபூண் முலையினாள் போற்ற

3.திருஒற்றியூரில் சங்கிலிநாச்சியாரை பிரியேன் என்று சபதம் செய்ய பெருமான் அருளை சுந்தரர் வேண்டி நிற்கும்போது

ஏயர்கோன் கலிக்காமர் புராணம் பாடல் -246


என்செய்தால் இதுமுடியும்
    ஆதுசெய்வன் யானிதற்கு
மின்செய்த புரிசடையீர்
    அருள்பெறுதல் வேண்டுமென
முன்செய்த முறுவலுடன்
    முதல்வரவர் முகநோக்கி
உன்செய்கை தனக்கினியென்
    வேண்டுவதென் றுரைத்தருள

4.பரவைநாச்சியார் பால் முதல்முறை தூது சென்ற இறைவர்,அவர் மறுக்கவே மீண்டு சுந்தரர்பால் அணைந்தபோது

ஏயர்கோன் கலிக்காமர் புராணம் பாடல் -351

சென்றுதம் பிரானைத் தாழ்ந்து
    திருமுகம் முறுவல் செய்ய
ஒன்றிய விளையாட் டோரார்
    உறுதிசெய் தணைந்தார் ன்றே
அன்றுநீ ராண்டு கொண்ட
    அதனுக்குத் தகவே செய்தீர்
இன்றிவள் வெகுளி யெல்லாந்
    தீர்த்தெழுந் தருளி என்றார்3510

5.திருச்செங்காட்டங்குடியில் வயிரவர் கோலத்தில் இறைவர் சிறுத்தொண்டர் திருமனைக்கு எழுந்தருளும் போது

சிறுத்தொண்டநயனார் புராணம் பாடல் -35

அருள்பொழியும் திருமுகத்தில்
    அணிமுறுவல் நிலவெறிப்ப
மருள்மொழிமும் மலம்சிதைக்கும்
    வடிச்சூலம் வெயில்எறிப்பப்
பொருள்பொழியும் பெருகன்பு
    தழைத்தோங்கிப் புவியேத்தத்
தெருள்பொழிவண் தமிழ்நாட்டுச்
    செங்காட்டங் குடிசேர்ந்தார்

6.திருக்கயிலையில் சேரர் பெருமாளை நோக்கி அருளுகையில்

வெள்ளானைச்சருக்கம் பாடல் -45

மங்கை பாகர்தம் திருமுன்பு
    சேய்த்தாக வந்தித்து மகிழ்வெய்திப்
பொங்கும் அன்பினில் சேரலர்
    போற்றிடப் புதுமதி அலைகின்ற
கங்கை வார்கடைக் கயிலைநாயகர்
    திரு முறுவலின் கதிர்காட்டி
இங்கு நாம்அழை யாமை நீ
    எய்தியது ன் ன அருள்செய்தார்

  
              திருச்சிற்றம்பலம்

           போற்றி ஓம்நமசிவாய

சிவனடிமைவேலுசாமி 

No comments:

Post a Comment