rudrateswarar

rudrateswarar

திங்கள், 16 அக்டோபர், 2017

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் -2

                                            போற்றி ஓம் நமசிவாய 
                                    திருச்சிற்றம்பலம் 
தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் -2

வேதச்சிறப்பு

சைவத்தின் மேன்மை என்ன தெரியுமா ? மற்ற சமயங்கள் மற்றும் மதங்களின் வேதம் என்பது பசு வாக்கியம் அதாவது நம்மைப்போல மலம் உள்ள மனிதர்களால் செய்யப்பட்டது. ஆனால் சைவ வேத ஆகமங்கள் சிவபரம்பொருளாலேயே அருளப்பட்ட பெருமை பெற்றது பதி வாக்கியம்.பிறவா இறவா கடவுள் சிவம் ஒருவரே.
சரி வேத ஆகமங்கள் எம்மொழியில் உள்ளது .சமஸ்கிருதம் என்னும் வடமொழியில்.அதை அருளியவர் சிவபெருமான் என்பதற்கு சான்று எங்கு உள்ளது. திருமுறைகளில் .
சம்பந்தர் தேவாரம்
தி-1--131-பா -7 அறங்கிளரும் நால்வேதம் லின்கீழ் ருந்தருளி
தி-1--135-பா -3 வேதர் வேதமெல்லாம் முறையால்விரித்து ஓத தி-2--038-பா -7 வேத நாவினர்
அப்பர் தேவாரம்
தி-4--7-பா-8 விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
தி-4--51-பா-3 ஆறும் ர் நான்கு வேதம் றமுரைத் தருளி னானே
தி-4--22-பா-5 ஓதினார் வேதம் வாயால் ளிநிலா வெறிக்குஞ் சென்னி
சுந்தரர் தேவாரம்
தி-7--36-பா-10 மெய்யெலாம் பொடிக்கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர்
தி-7--49-பா-07 வேதம் தி வெண் ணீறு பூசி
தி-7--61-பா-07 வேதந் தான்விரித் தோதவல் லானை
மணிவாசகர்
நீத்தல்விண்ணப்பம் பா-43-வேதமெய்ந்நூல் சொன்னவனே
அன்னைப்பத்து பா-1- வேத மொழியர்
திருமூலர்
திருமந்திரம்-வேதச்சிறப்பு
வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன் வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே

வேதங்கள் சிவபெருமானால் அருளப்பட்டது. இருக்கு யஜூர் சாம அதர்வணம் என்னும் நான்கு அதன் பெயர்களை சொல்லியுள்ளார்களா ?

இருக்கு வேதம்
தி-1--63-பா-3 நன்றுநகு நாண்மலரால் நல் ருக்கு மந்திரங்கொண்டுன்றி வழிபாடு
தி-2--04-பா-7 பண்டு ருக்கு ரு நால்வர்க்கு நீர் உரை செய்ததே.
தி-4--29-பா-4 முந்திய தேவர் கூடி முறைமுறை யிருக்குச் சொல்லி
தி-4--48-பா-3 எண்ணுடை ருக்குமாகி ருக்கினுள் பொருளுமாகிப்
தி-4--100-பா-10 இருக்கு இயல்பாயின ன்னம்பரான் தன்இணையடியே
சாமவேதம்
தி-2--92-பா-8 சாம வேதமொர் கீதம் தியத் தசமுகன் பரவும்
தி-2--94-பா-1 சாகை யாயிர முடையார் சாமமு மோதுவ துடையார்
தி-3--56-பா-1 சடையினன் சாமவேதன் சரி கோவண வன்
தி-2--57-பா-1 சடையவன் சாமவேதன் சசி தங்கியசங்கவெண்தோடு
மற்ற இரு வேதங்களைச் சொல்லவில்லையே மண்ணுக்கும் விண்ணுக்கும் என்றால் இடையில் இருப்பது எல்லாம் என்று பொருள்
இப்படி பெருமானின் வாக்கை ஏற்காத இவர்கள் சைவர்களா ?
தமிழில் திருமுறைகளை அருளிய அருளாளர்கள் வாக்கையும் ஏற்காமல் அதை மறுக்கும் இவர்கள் சைவர்களும் அல்ல சிவ பெருமானின் அருளுக்குப் பாத்திரமானவர்களும் அல்ல .இவர்களை வைத்து வேள்வி செய்தால் அவமே விளையும்.குளிக்கிறேன் என்று சேற்றைப் பூசிக்கொள்வது போல சிவ நிந்தனைக்கு ஆளாகி விடுவோம்

தனது திருப்பதிகங்கள் தோறும் திருக்கடைக்காப்பில் பதிகப்பலன் சொல்லும் தவமுதல்வர் சம்பந்தப்பிள்ளையார் அவர்கள் இப்பதிகத்தை இசையொடுகூடிய, பாடவல்லார்க்கு, சொல்லவல்லார்க்கு, ஓதவல்லார்க்கு, கேட்டார்க்கு, நினைவார்க்கு, கற்றார்க்கு, ஏத்துவார்க்கு, பாடல்வல்லார்க்கு, பரவ வல்லார்க்கு, உரைசெய்தார்க்கு, பத்தும் வல்லார்க்கு, தமிழ்வல்லார்க்கு, மொழிவார்க்கு, பாடியாட, மாலைவல்லார்க்கு, பாட, துதித்து, வணங்கி, உரைப்பார், இசைகூடும் வகை,சொலக்கேட்டார்,இசை பாடும் பத்தர்,இன்னுரை வல்ல என்று இன்னும் பலவாறு தான் அருளியுள்ளாரே தவிர இப்பதிகத்தை வைத்து வேள்வி செய்ய என்று ஒரு பதிகத்திலாவது அருளியுள்ளாரா ?
அப்படி இருக்க குருமுதல்வர் வாக்கை மீறிச் செய்யலாமா ?
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு என்பது மணிவாசகம்.

மேலும் தேவாரம் இசையுடன் பாடக்கூடியது. அது இசை பற்றி வந்தது. சமணர்கள் இசை காமத்தை உண்டாக்கும் என்ற கொள்கையுடையர் . அதை மறுத்து சிவமே ஓசை ஒலி  எல்லாமானவர். அவரே வீணாகானர் ஏழிசையானவர் இசையே அவருக்கு விருப்பம். அதனால் தான் இராவணன் சாம கானம் பாடி அருள் பெற்றதை எட்டாவது பாடல் தோறும் குறிப்பிட்டார். சம்பந்தர் திருஅவதாரமே வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்கத்தானே . சத்யம் வதா தர்மம் சர என்ற உண்மை அறம் வேதத்தில் எம்பெருமானால் சொல்லப்பட்டது

தமிழ் வேள்வி வழிபாடு தவறு என்று அவர்கள் தமிழிலேயே விளக்கியாயிற்று ஆக இவர்கள் தவறுக்கு உடந்தையாக இருப்பவர்க்கும் தக்கன் யாகத்தில் நடந்த அந்த பலனே விளையும்.


                             போற்றி ஓம் நமசிவாய 
                                 திருச்சிற்றம்பலம்

5 கருத்துகள்:

  1. ஐயா வேதம் வடமொழியில் தான் சொல்லப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரம் இங்கு இல்லையே.

    பதிலளிநீக்கு
  2. தமிழில் இருந்து வடமொழிக்கு போயிற்று. இந்த மொழியில் தான் வழிபட வேண்டும் என்று இறைவன் எங்கே கூறியிருக்கிறான்? அப்படி கூறினால் அவன் இறைவனே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருச்சிற்றம்பலம்
      இறைவனே இல்லை என்று சொல்லும் கூட்டம் தான் வழிபாட்டில் நவீனத்தை ஊன அறிவு கொண்டு புகுத்தியது .கண்ணுதலான் காட்டாக்கால் காண இயலாது .அவன் காட்டிய வழியே நால்வர் வழி நாலு பேரு போன வழியில போனா உய்வு பெறலாம் .கொடுநரகுக்கு வழிதேடுவோர் தேடலாம் . அவுட் ஆப் சிலபஸ்ஸில் பரீட்சை எழுதினால் யார் மார்க் போடுவார்கள்

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு