ஓம் நமசிவாய
பற்றுக பற்று அற்றவன் திருவடியை
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை
திருகுறளில் துறவு என்னும் அதிகாரத்தில் முதல் பாடலாக இந்த பாடல் உள்ளது இப்பாடலை துறவு என்னும் அதிகாரத்தில் முதல் பாடலாக எழுதுகிறோம் எனவே பற்று என்ற ஒட்டுதல் அறவே கூடாது என்று திருவள்ளுவர் ஒவ்வொரு வார்த்தையும் உதடுகள் ஒட்டாமல் எழுதியுள்ளார்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்
துறவு அதிகாரத்தில் பத்தாவது பாடலாக இந்த பாடல் உள்ளது இதை திருவள்ளுவர் எழுதும்போது பற்று வேண்டும் என்கிறார் எதன் மீது ? பற்றற்ற இறைவன் திருவடியை பற்ற வேண்டும் என்று அருள்கிறார் . அதற்காக அனைத்து வார்த்தைகளும் அழுத்தமாக உதடுகள் ஓட்டும் வண்ணம் எழுதியுள்ளார் .
இதிலிருந்தே எதைப் பற்றவேண்டும் என்று தெளிவாக தெரிகிறது . பற்றற்றவன் தாளை தவிர மற்ற பற்றுகள் துன்பம் விளைவிக்கும். எனவே அளவில்லா வற்றாத இன்பம் கிடைக்கும் வண்ணம் உலகப்பற்றுக்களை நீக்கி பற்றற்ற இறைவன் திருவடியினை பற்றுவோம், பிறவிப்பிணி நீங்கி ஆனந்தம் பெறுவோம்
போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment