rudrateswarar

rudrateswarar

Sunday, October 20, 2013

சிவலோக பதவி வருந்தத்தக்கதா ?

                                                       ஓம் நமசிவாய


சிவலோக பதவி வருந்தத்தக்கதா ?



நாளிதழ்களில்  இறந்தவர்களுக்கு துக்க மரண அறிவிப்புகள் வெளியிடுகிறார்கள் அது போல சுவரொட்டிகளும் ஒட்டப்படுகின்றன அதில்  இன்னார் இறந்து விட்டார்கள் என அறிவிப்பது வருந்தத்தக்க விசயந்தான் ஆனால் அதில் அவர்கள் வெளியிடும் செய்தி நகைப்புக்குரியது மட்டுமல்ல வேதனை யானதும் கூட .  

ஏனெனில் இன்னார் சிவலோக பதவி அடைந்து விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறோம் என்று வெளியிடு கிறார்கள் . சிவலோக பதவி என்பது எளிதில் கிடைக்குமா ? அப்படி கிடைத்தாலும் அது மிகப்பெரிய பாக்கியம் அல்லவா ? அது கிடைக்காமல் ஏங்குவோர் எவ்வளவு பேர் ? சிவலோக பதவி என்பது இனி பிறவி இல்லை என்னும் முக்தி வீடுபேறல்லவா ? அது மனித பிறப்பில் நாம் அடையும் கண நேரம் தோன்றி மறையும் அற்ப இன்பமா ?  எல்லையில்லா பேரின்பமல்லவா ? .

ஒருவேளை இறந்தவருக்கு சிவலோக பதவி கிடைத்துவிட்டதே என்று பொறாமையினால் அப்படி போஸ்டர் ஓட்டுகிறார்களோ என்னவோ ? 

சிவலோக பதவி எப்படி வருந்தத்தக்க விசயமாகும் என்பதை இனியாவது சிந்தித்து உணர்வார்களா ? மரண அறிவிப்புகள் இது போல நகைப்புக்குரிய விசயமாக இல்லாமல் இருந்தாலே அது துக்கம் அனுஷ்டித்ததாக இருக்கும் .



                    போற்றி ஓம் நமசிவாய 



                            திருச்சிற்றம்பலம்  

2 comments:

  1. நல்ல சிந்தனை அய்யா..! எனக்கும் இந்த கேள்வி உண்டு..!!

    ReplyDelete
  2. இவன் சிவலோக பதவி ன்னு கருமாதி பத்திரிகை ல அச்சடிக்கிறான். இன்னொருத்தன் நாமக்காரன் அவனுக்கு சிவன் பிடிக்காது அதனால என் தோப்பனார் வைகுந்த பதவி அடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்னு பத்திரிகை அடிக்கிறான். பதவி கிடைச்சிருக்கு ரிடையர்டுமென்டே கிடையாது அப்புறம் எதுக்கு வருந்துகிறேன் னு அடிக்கிற . மகிழ்கிறேன்னு பத்திரிகை அடி

    ReplyDelete