rudrateswarar

rudrateswarar

Sunday, June 5, 2016

கல்வி சிறக்க பன்னிரு திருமுறைப்பாடல்கள்



கல்வி சிறக்க பன்னிரு திருமுறைப்பாடல்கள்

கல்வியாண்டு துவங்கி மாணவச் செல்வங்கள் பள்ளி செல்லும் தருணம் இது.

கல்வியில் சிறக்க பன்னிருதிருமுறைகளில் சில பாடல்களைத் தெரிவு செய்தளித்தால்
என்ன?  என்ற சிந்தனையின் விளைவே இந்த தொகுப்பு. சிவனருளால் சிந்தையில்

அவர் இருந்து கல்வி கேள்வி ஞானம் பெற வேண்டுகிறோம்.

கணபதி துதி

கல்லால் நிழல்மலை வில்லார் அருளிய

பொல்லார் இணைமலர் நல்லார் புனைவரே
                                   
                                            திருச்சிற்றம்பலம்
திருமுறை-1

சினமலி றுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய

னன்உணர் வொடுமலர் மிசை ழு தருபொருள் நியதமும் உணர்பவர்

தனதுஎழில் ருவது கொடுஅடை தகுபர னுறைவது நகர்மதில்

கனமரு வியசிவ புரம்நினைபவர் கலை மகள் தர நிகழ்வரே  21-5

அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்

மலர்மலி குழலுமை தனை டம் மகிழ்பவர்

நலம்மலி ருவுடை யவர்நகர் மிகுபுகழ்

நிலமலி மிழலையை நினையவல் லவரே 124-1


கலைமகள் தலைமகன் இவன் என வருபவர்
அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை
இலைமலி தழியும் சைதரு சடையினர்
நிலைமலி மிழலையை நினையவல் லவரே 124-3

திருமுறை -2

வீடும் ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
வாடி ஞானம் என் வதும் எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டு இசை
பாடும் ஞானம்வல் லார்அடி சேர்வது ஞானமே 2-11


கலமார் கடல்போல் வளமார் தருநல்
புலமார் தருவே ணுபுரத்து றையை
நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன
குலமார் தமிழ்கூ றுவர்கூர் மையரே 17-10


அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர்
பெருஞா னம் உடைப் பெருமான் வனைத்
திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள்
உருஞா னம் உண்டாம் உணர்ந்தார் தமக்கே  20-11

திருமுறை -3

துஞ்சிருளின் நின்றுநட மாடிமிகு தோணிபுர மேய
மஞ்சனை வணங்குதிரு ஞானசம் பந்தனசொன் மாலை
தஞ்சமென நின்றிசை மொழிந்தஅடி யார்கள்தடு மாற்றம்
வஞ்சம்இலர் நெஞ்சிருளும் நீங்கி ருள் பெற்றுவளர் வாரே. 81-11

திருமுறை -4

தந்தையாய்த் தாயும் கித் தரணியாய்த் தரணி ள்ளார்க்கு

ந்தையும் ன்ன நின்ற ஏழுலகு டனு மாகி

எந்தைம் பிரானே என்றென்று ள்குவார் ள்ளத்து ன்றும்

சிந்தையும் சிவமும் வார் திருப்பயற் றூர னாரே. 32-8


ஈன்றாளும் ஆய்எனக்கு ந்தையும் ஆய்உடன் தோன்றினராய்

மூன்றாய் லகம் படைத்துகந் தான்மனத்து ள்ளிருக்க

ஏன்றான் இமையவர்க்கு ன்பன் திருப்பா திரிப்புலியூர்த்

தோன்றாத் துணையாய் ருந்தனன் ன்டி யோங்களுக்கே  94-1

திருமுறை -5

பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும்

கூரி தாய அறிவுகை கூடிடும்

சீரி யார்பயில் சேறையுள் செந்நெறி

நாரி பாகன்ன் நாமம் நவிலவே.  77-1


என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே

மின்னு வார்சடை வேதவி ழுப்பொருள்

செந்நெ லார்வயல் சேறையுள் செந்நெறி

மன்னு சோதிநம் பால்வந்து வைகவே   77-2

திருமுறை -6

எல்லாஞ் சிவன்என்ன நின்றாய் போற்றி

     எரிசுடராய் நின்ற இறைவா போற்றி

கொல்லார் மழுவாள் படையாய் போற்றி

     கொல்லும் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி

கல்லாதார் காட்சிக்கு ரியாய் போற்றி

     கற்றார் டும்பை களைவாய் போற்றி

வில்லால் வியன்அரணம் எய்தாய் போற்றி

     வீரட்டம் காதல் விமலா போற்றி  5-1


நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை

         நினையாஎன் நெஞ்சை நினைவித்தானைக்

கல்லாதன எல்லாம் கற்பித்தானைக்

        காணாதன எல்லாம் காட்டினானைக்

சொல்லாதன எல்லாம் சொல்லி என்னைத்

       தொடர்ந்துஇங்கு அடியேனை ஆளாக்கொண்டு

பொல்லாஎன் நோய் தீர்த்த புனிதன் தன்னைப்

       புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே  43-1


திருமுறை -7

மற்றுஒரு துணைனி மறுமைக்கும் காணேன்

        வருந்தல்உற் றேன்மற வாவரம் பெற்றேன்

சுற்றிய சுற்றமும் துணையென்று கருதேன்

      துணைன்று நான்தொழப் பட்டஒண் சுடரை

முத்தியும் ஞானமும் வானவர் அறியா

      முறைமுறை பலபல நெறிகளும் காட்டிக்

கற்பனை கற்பித்த கடவுளை அடியேன்

       கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே  58-2

திருமுறை -8

கற்று அறியேன் கலை ஞானம் கசிந்து உருகேன் ஆயிடினும்

மற்று அறியேன் பிறதெய்வம் வாக்குஇயலால் வார்கழல் வந்து

உற்று இறுமாந்து இருந்தேன் எம்பெருமானே அடியேற்குப்

பொற்றவிசு நாய்க்கு இடுமாறுஅன்றே நின் பொன் அருளே 38-5


சீரஅவு ல்லாத் திகழ்தரு கல்விச்செம் பொன்வரையின்

ர்அவு ல்லா அளவுசென்றார் அம் பலத்துள்நின்ற

ர்அவு ல்லா ஒருவன் இருங்கழல் ன்னினர்போல்

ர்அவு ல்லா அளவினர் ஆகுவர் ந்திழையே - திருக்கோவையார் -308

திருமுறை -9

கலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக்

    கற்பினில் பெற்றெடுத்து னக்கே

முலைகள்தந்து ருளும் தாயினும் நல்ல

    முக்கணான் உறைவிடம் போலும்

மலைகுடைந் தனைய நெடுநிலை மாட

    மருங்கெலாம் மறையவர் முறையோத்து

லைகடல் முழங்கும் அந்தண்நீர்க் களந்தை

    அணிதிகழ் ஆதித்தேச் சரமே  9-1


சீரும் திருவும் பொலியச் சிவலோகநாயகன் சேவடிக்கீழ்

ஆரும் பெறாத அறிவுபெற் றேன் பெற்றது ஆர்பெறு வார்உலகில்?

ஊரும் உலகும் கழற உழறிஉமைமண வாளனுக்கு ஆட்

பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே 29-7

திருமுறை -10

நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றுஒன் றிலாத மணிவிளக் காமே  -292


துணையது வாய்வரும் தூயநற் சோதி
துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வரும் தூயநற் கந்தம்
துணையது வாய்வரும் தூயநற் கல்வியே  -294

திருமுறை -11

எனக்குஇனிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்குஇனிய வைப்பாக வைத்தேன் - எனக்குஅவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்குஅரியது ன்று  6-10

அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர் பார் ஆகாயம்
அப்பொருளும் தானே அவன்   6-20

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் 

பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் 

ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் 

காதலால் கூப்புவர் தம்கை   21-1

திருமுறை -12

குலவும் மறையும் பலகலையும் கொளுத்து வதன்
       முன் கொண்டமைந்த
நிலவும் உணர்வின் திறம்கண்டு நிறுவும் 
       மறையோர் அதிசயித்தார்
அலகில் கலையின் பொருட்குஎல்லை ஆடும் 
      கழலே எனக்கொண்ட
செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் 
      சிறிய பெருந்தகையார்

சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவம்அதனை றமாற்றும் பாங்கினில்ஓங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார் அந்நிலையில்

அபிராமி அந்தாதி 

கண்களிக்கும் படி கண்டு கொண்டேன் கடம் பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெரு மாட்டிதன் பேரழகே
  -70

கந்தர் அனுபூதி

வானோ புனல்பார் கனல் மாருதமோ

ஞானோதயமோ நவில் நான்மறையோ

யானோ மனமோ எனை ண்ட இடம்

தானோ பொருளாவது சண்முகனே  -3
  
திருக்குறள்


கற்றதனால்ஆயபயனென்கொல்வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்  -02


                       திருச்சிற்றம்பலம்

                     போற்றி ஓம்மசிவாய 

சிவனடிமை வேலுசாமி
                                                

No comments:

Post a Comment