rudrateswarar

rudrateswarar

Thursday, June 16, 2016

உலகெலாம்




                         ஓம்நமசிவாய
  
உலகெலாம்
     
ஓம் என்பது பிரணவம் ஆகும். இந்த ஓம் என்பது அ கர உ கர ம கர ஒருங்கிணைப்பு ஆகும். இதில் அ கரம் படைத்தலையும் உ கரம் காத்தலையும் ம கரம் ஒடுக்கத்தினையும் (சங்காரம்) செய்கிறது. நம் பன்னிருதிருமுறைகளில் முதல் பாடலான தோடுடைய என்பதில் தோ=த்+ஓ கடைசி பாடலான வணங்குவாம் என்பதில் ம் என்று (ஓ+ம்) முடிகிறது. உயிர்களைக் காக்கும் பொருட்டு இந்த பிரணவத்தில் அடங்கும் வகையில் நமது திருமுறைகள் உள்ளன. அதுபோலவே திருப்புகழ் முத்தைத்தரு எனவும் திருமுருகாற்றுப்படை உலகமுவப்ப எனவும் கந்தர் கலிவெண்பா பூமேவு எனவும் கம்ப இராமாயணம் உலகம் யாவையும் எனவும் தொடங்குகிறது.

உலகெலாம் என்பது சேக்கிழார் பெருமானுக்கு திருத்தொண்டர் புராணம் பாட தில்லைக்கூத்தர் கொடுத்த (capital)  முதலாகும். அதை தனது பாடல்களில் முதல் தொடங்கி அங்கங்கே இடையிலும் விதைத்து கடைசியிலும் அந்தாதி அமைப்பிலும் வைத்துள்ளார் கடவுள் கொடுத்த முதலை சரியாகப் பயன்படுத்தி நமக்கு அற்புதமான பெரியபுராணம் எனும் காவியம் அளித்தார் . அதில் இந்த உலகெலாம் என்னும் அந்த முதலை 16 இடங்களில் 16 பேறுகள் போல வழங்கி உள்ளார். அவை பின்வருமாறு.
                           
                         திருச்சிற்றம்பலம்
01.பாயிரம்

உலகெ லாம் உணர்ந்து தற்கு ரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து டுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்

02.தில்லைவாழ் அந்தணர் புராணம் -07

ஞானமே முதலா நான்கும்
   நவையறத் தெரிந்து மிக்கார்
தானமுந் தவமும் வல்லார்
   தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனமேல் ஒன்றும் இல்லார்
   உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையும் தாங்கி 
   மனையறம் புரிந்து வாழ்வார்

03.இளையான்குடிமாற நாயனார் புராணம்-15

பெருகு வானம் பிறங்க  மழைபொழிந்து
ருகு நாப்பண் அறிவரும் கங்குல்தான்
கருகு மையிரு ளின்கணங் கட்டுவிட்டு
ருகு கின்றது போன்றது லகெலாம்

04.மானக்கஞ்சாற நாயனார் புராணம்-36

மனந்தளரும் இடர் நீங்கி
   வானவர்நா யகரருளால்
புனைந்தமலர்க் குழல்பெற்ற
   பூங்கொடியை மணம்புணர்ந்து
தனம்பொழிந்து பெருவதுவை
   உலகெலாம் தலைசிறப்ப
இனம்பெருகத் தம்முடைய
   எயில்மூதூர் சென்றணைந்தார்

05.திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்-48

இவ்வ ளம்தரு பெரும்திரு நாட்டிடை என்றும்
மெய்வ ளம்தரு சிறப்பினால் உலகெலாம் வியப்ப
எவ்வு கங்களும் உள்ளதென் றியாவரும் ஏத்தும்
கைவி ளங்கிய நிலையது காஞ்சிமா நகரம்

06.திருநாவுக்கரசு நாயனார் புராணம்-371

ஆதி தேவர்தம் திருவருள்
   பெருமையார் அறிவார்
போத மாதவர் பனிவரைப்
   பொய்கையில் மூழ்கி
மாதொர் பாகனார் மகிழும்
    யாற்றிலோர் வாவி
மீது தோன்றிவந்து ழுந்தனர்
   உலகெலாம் வியப்ப

07.காரைக்காலம்மையார் புராணம்-51

மலர்மழை பொழிந்த தெங்கும்
   வானதுந் துபியின் நாதம்
உலகெலாம் நிறைந்து விம்ம
    உம்பரும் முனிவர் தாமும்
குலவினர் கணங்கள் எல்லாம்
   குணலையிட் டனமுன் னின்ற
தொலைவில்பல் சுற்றத் தாருந்
   தொழுதஞ்சி அகன்று போனார்

08. திருநீலநக்க நாயனார் புராணம்-1

பூத்த பங்கயப் பொகுட்டின்மேல்
   பொருகயல் உகளும்
காய்த்த செந்நெலின் காடுசூழ்
   காவிரி நாட்டுச்
சாத்த மங்கைஎன் று லகெலாம்
   புகழ்வுறும் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர்
   முதல் பதி வனப்பு

09. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்-216

சோதி முத்தின் சிவிகை சூழ் வந்துபார்
மீது தாழ்ந்துவெண் ணீற்றுஒளி போற்றிநின்று
தி யார்அருள் தலின் அஞ்செழுத்து
தி யேறினார் உய்ய லகெலாம்

10. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்   -643

அளவிலா மகிழ்ச்சி காட்டும்
    அரும்பெரு நிமித்தம் எய்த
உளமகிழ் வுணரும் காலை
    உலகெலாம் உய்ய வந்த
வளர்ஒளி ஞானம் உண்டார்
    வந்தணைந்து ருளும் வார்த்தை
கிளர்வுறும் ஓகை கூறி
    வந்தவர் மொழியக் கேட்டார்

11. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்   -859

மீனவற்கு யிரை நல்கி
    மெய்ந்நெறி காட்டி மிக்க
ஊனமாம் சமணை நீக்கி
    உலகெலாம் உய்யக் கொண்ட
ஞானசம் பந்தர் வாய்மை
    ஞாலத்தில் பெருகி ஓங்கத்
தேனலர் கொன்றை யார்தம்
    திருநெறி நடந்த தன்றே

12. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம் -88

உலகெலாம் உய்ய உறுதியாம் பதிகம்
    உரைத்துமெய் யுணர்வறா ருமை
நிலவிய சிந்தை யுடன்திரு வருளால்
    நீங்குவார் பாங்கு நற் பதிகள்
பலவுமுன் பணிந்து பரமர்தாள் போற்றிப்
    போந்துதண் பனிமலர்ப் படப்பைக்
குலவுமக் கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர்
    குறுகினார் முறுகும் தரவால்


13. அதிபத்த நாயனார் புராணம் -16

வாங்கு நீள்வலை அலைகடல்
    கரையில்வந் தேற
ஓங்கு செஞ்சுடர் உதித்தென
    லகெலாம் வியப்பத்
தாங்கு பேரொளி தழைத்திடக்
    காண்டலும் எடுத்துப்
பாங்கு நின்றவர் மீன்ஒன்று
    படுத்தனம் என்றார்

14.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் -7

தமனியப் பலகை ஏறித்
    தந்திரிக் கருவி வாசித்து
மையொரு பாகர் வண்மை
    உலகெலாம் அறிய ஏத்தி
இமையவர் போற்ற ஏகி
    எண்ணில்தா னங்கள் கும்பிட்டு
மரர்நாடு ளாது ஆரூர்
    ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார்

15. வெள்ளானைச் சருக்கம் -40

மாசில் வெண்மைசேர் பேரொளி உலகெலாம்
    மலர்ந்திட வளர்மெய்ம்மை
ஆசில் ன்பர்தம் சிந்தைபோல்
    விளங்கிய அணிகிளர் மணிவாயில்
தேசு தங்கிய யானையும்
    புரவியும் இழிந்துசேண் டைச்செல்வார்
ஈசர் வௌள்ளிமா மலைத்தடம்
    பலகடந்து ய்தினர் மணிவாயில்

16. வெள்ளானைச் சருக்கம் -53

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யார்அவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்

                                                                    
               திருச்சிற்றம்பலம்

             போற்றி ஓம்நமசிவாய

சிவனடிமைவேலுசாமி

No comments:

Post a Comment