rudrateswarar

rudrateswarar

Friday, June 3, 2016

எம்பிரான் சம்பந்தர் போற்றிப்பரவிய நாயன்மார்கள்

                                                     ஓம் நமசிவாய

எம்பிரான் சம்பந்தர் போற்றிப் பரவிய நாயன்மார்கள்

எம்பெருமான் அண்டர்கோன் ஒருவனைத் தவிர மற்ற யாரையும் பாடாத எந்தம் பரமாசிரியர் தலைமகன் ஞானசம்பந்தர் இவர்களைத் தம் பாடல்களில் வைத்துப் பாடியுள்ளார் எனில் அவர்தம் பெருமை தான் என்னே ?.

                         திருசிற்றம்பலம் 

1.மங்கையர்க்கரசியார்


மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே 3-120-1

2.குலச்சிறையார்

வெற்றவே யடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியுங்
கொற்றவன் றனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவி நின்றேத்தும்
ஒற்றைவெள்விடையன் உம்பரார்தலைவன் உலகினிலியற்கையை ழிந்திட்டு
ற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற ஆலவா யாவதும் இதுவே 3-120-2

3.நின்றசீர் நெடுமாறர்

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்  
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே  2-66-11


4.கண்ணப்ப நாயனார்



கண்ணனும் நான்முகன் காண்பரியார்

வெண்ணாவல் விரும்பு மயேந்திரரும்
கண்ணப்பர்க் கருள்செய்த கயிலையெங்கள்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே  3-109-7

5.கோட்செங்கட்சோழர்

கருவ ருந்தியின் நான்முகன் கண்ணனென்று 
இருவ ருந்தெரி யாவொரு வன்னிடஞ்
செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்
நிருபர் தண்டலை நீணெறி காண்மினே  3-50-9

6.சண்டேசுர நாயனார்

தோத்திரமா மணலிலிங்கத் தொடங்கியஆன் நிரையிற்பால்
பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி
ஆத்தமென மறைநால்வர்க் கறம்புரிநூ லன்றுரைத்த
தீர்த்தமல்கு சடையாருந் திருவேட்டக் குடியாரே  3-66-3

7.சிறுத்தொண்டர்

பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே  3-63-1

8.திருநீலநக்கர்

பொடிதனைப் பூசுமார்பிற் புரிநூலொரு பாற்பொருந்தக்
கொடியன சாயலாளோ டுடனாவதுங் கூடுவதே
கடிமணம் மல்கிநாளுங் கமழும்பொழிற் சாத்தமங்கை
அடிகள்நக் கன்பரவ அயவந்திய மர்ந்தவனே  3-58-2

9.புகழ்த்துணை நாயனார்

நிலந்த ணீரோ டனல்கால் விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தானூர்
அலந்த அடியான் அற்றைக் கன்றோர் காசெய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே   2-63-7

10.நமிநந்தியடிகள்

தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை
ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்
கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே  1-62-6

11.முருக நாயனார்

தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையுங்
கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன் செய்கோலங்
கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார்
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே  2-92-3

12.திருநீலகண்ட யாழ்ப்பாணர்

நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்
தாணுவெனை ஆளுடையான் தன்னடியார்க் கன்புடைமை
பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்
கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே  1-62-9

13.தில்லைவாழ் அந்தணர்

ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்தணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே
பாடினாய்மறையோடுபல் கீதமும் பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே  3-1-1
      
                        திருசிற்றம்பலம்
          போற்றி ஓம் நமசிவாய 
 

சிவனடிமை வேலுசாமி 

No comments:

Post a Comment