rudrateswarar

rudrateswarar

Thursday, June 13, 2013

பிதுர் கடன் (அ ) பிதுர் தோஷம்

                                                       ஓம் நமசிவாய

பிதுர் கடன் (அ ) பிதுர் தோஷம்
பித்ரு தோஷம்


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்    தானென்றாங்கு 
ஐம்புலத்தார் ஓம்பல் தலை -     திருக்குறள் 


இறந்து தென்திசையில் வாழ்பவர்களாகிய முன்னோர்கள் ,தெய்வம், விருந்தினர்கள் , சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது இல்லறத்தானின் தலையாய கடமைகளாகும்.

வள்ளுவர் பெருந்தகை இல்லறத்தானுக்குரிய ஐந்து கடமைகளை சொல்லும்போது முதலில் தென்புலத்தார் எனும் பிதுர்கடன் (பித்ருக்கள் )  தெய்வகடன்,முன் அறிமுகம் இல்லாத விருந்தினர் கடன் ,உறவினர் கடன் , குடும்பஸ்தனாக மனைவி மக்கள் கடன் ,என்று சொல்லி அதில் பிதுர்களுக்கு செய்ய வேண்டிய ஆற்ற வேண்டிய காரியங்களை முதலில் சொல்வதிலிருந்தே இதன் முக்கியத்துவம் தெரிகிறது .ஏன் கடமை என்று சொல்லாமல் கடன் என்று சொல்கிறோம்  கடமை தவறினால் கூட பரவாயில்லை ஆனால் பட்ட கடனை அடைக்க வேண்டும் ஒவ்வொரு வருக்கும் நாம் இதை செய்ய கடன்பட்டிருக் கிறோம்.புத்திரன் என்ற சொல்லுக்கு பிதுர்க்கடன் ஆற்றுபவன் என்று பொருள் .

நம் முன்னோர்கள் இறந்த உடன் அந்த ஆன்மா அதன் வினைக்கேற்ப முக்தியோ மறுபிறப்போ நரகமோ சொர்க்கமோ உடனே கிடைக்காது அப்போது இறைவனால் மறைத்தல் தொழில் நடக்கும்  ஒய்வு அளிக்கிறார் எனவே அது வரை அந்த உயிர் (ஆன்மா) சூக்கும உடலோடு அலையும் . அதாவது சூக்கும தேகம் என்பது கனவில் நம் உடலை காண்கிறோமே அது தான் அந்த உடலால் எந்த கிரியையும் செய்ய இயலாது அல்லவா ?அப்போது அதற்கு உணவு என்று எதுவும் வழங்கப்படாது .அந்த உலகத்திற்கு பிதுர் லோகம் என்று பெயர் . அவர்களுக்கு நாம் இந்த பூமியில் செய்யும் காரியங்களே படையல்களே அவர்களுக்கு திருப்தி தரும் உணவாகும் .அவை  பிதுர் தேவதைகள் மூலம் அவர்களை சென்றடையும் அப்போது அவர்கள் மகிழ்ந்து  ஆசிர்வதிக்க நம் சந்ததி தழைக்கும் .

மூவேழ் சுற்றங்கள் எனும் 21 தலைமுறை முன்னோர்கள் இந்த பிதுர்கள் என்ற பெயரில் அடங்குவார்கள் . மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி என்று மணிவாசக சுவாமிகள் அருளியுள்ளார் .இதன் பொருள் பிதுர்களால் வரும் நரக வேதனை இல்லாமல் அருள் புரியும் என்பதாகும்

சிரார்த்தம் தர்ப்பணம் பிதுர் பித்ரு என பல பெயரில் சொல்லப்படுகிறது


இந்த பிதுர்கடனால் வரும் பாதிப்புகள் ஒருவருக்கு குறித்த காலத்தில் எந்த நல்ல விசயங்களும் நடக்காமல் தள்ளி போகும் . அதாவது திருமணம் நடக்காது  நடந்தால் தாரத்தால் நிம்மதி இருக்காது .தாரம் அமைந்தால் தொழில் அடிபடும் தொழில் இருந்தால் மக்கட்பேறு கிடைக்காது அப்படி குழந்தை இருந்தால் ஊனமாக பிறக்கும் கல்வி சிறக்காது அந்த பிள்ளையால் அவமானங்கள் நேரும், கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகும் திருமணம் காதலாகவோ கலப்புமணமாகவோ இருக்கும்,வீண் பழி,அவமானம்,கடன், கஷ்டம் விவாகரத்து,அகால மரணம் ,தெய்வ நிந்தனை செய்வது,வறுமை என்று திரும்பிய திசையில் எல்லாம் பிரச்சினை என நிம்மதியில்லாமல் இருக்கும் இது ஆண் பெண் என பாகுபாடு இல்லாமல் இருபாலர்க்கும் பொருந்தும்

பிதுர் தோஷம் ஒருவருக்கு உள்ளது என்பது அவர்களின் ஜாதகத்திலேயே அறியலாம் அந்த ஜாதகத்தில் லக்கினத்திற்கு 3,5,7,9,11 ஆகிய இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் அவர்கள் பிதுர்தோஷம்  உள்ளவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம் .இராகு தந்தை வழியையும் கேது தாய் வழியையும் குறிக்கும் 

இதற்கு  ஒவ்வொரு அமாவாசையிலும் குறிப்பாக ஆடி புரட்டாசி தை அமாவாசையும் 
பிதுர்கடன் தர்ப்பணம் ஆற்ற உகந்த நாட்கள் . இராமேஸ்வரத்தில் தில ஹோமம் என்று செய்வார்கள்   பவானி கூடுதுறை, திருச்சி, பேரூர் , அம்மா மண்டபம், திருவையாறு, கொடுமுடி, மயிலாடுதுறை போன்ற நீர் நிலைகள் உள்ள இடங்களில் பிண்டம் செய்து வைத்து வேண்டி நிவர்த்தி செய்யலாம் .

வசதி இல்லாதவர்கள் அமாவாசை அன்று நீர் நிலைகளில் சென்று சிறிது எள் எடுத்து முன்னோர்களை வேண்டி இதையே எனது தர்ப்பணமாக ஏற்று எம்மை ஆசிர்வதியுங்கள் என்று சொல்லி நீரில் விட்டு நீராடினால் கூட போதும் 

பசுவுக்கு பருத்தி கொட்டையின் பால் எடுத்து இனிப்பு கலந்து குடிக்க அமாவாசை அன்று கொடுக்க பிதுர் தேவதைகள் மூலம் அது நம் முன்னோர்களுக்கு தர்ப்பணமாக செல்லும் என்று சொல்லப்படுகிறது

அடியேன் பிரச்சினை என்று கஷ்டப்படுகிறவர் கள் பலரின் ஜாதகங்களை ஆராய்ந்த போது இந்த உண்மை தெரிந்தது முறையாக  அவர்களின் வசதிக்கு தக்கவாறு தர்ப்பணம் செய்ய அவர்கள் வாழ்வில் ஏற்றம்உண்டானது 

பிதுர் கடன் அடைபடாமல் தெய்வங்களின் துணை நமக்கு கிடைப்பதில்லை.அதனால் தான் வள்ளுவர் தெய்வங்களை இரண்டாவ தாக சொல்கிறார் .மாதா பிதா குரு தெய்வம் என்று நம் வழக்கிலும் உள்ளது 

கிருத்துவ மதத்தில் கூட ALL SOULS DAY என்று 
உண்டு இதில் கூட்டு பிரார்த்தனை போல இறந்தவர்களுக்கு பிரார்த்திப்பார்கள் 

எனவே நம் குடும்பத்தில் யாராவது இறந்தால் இடம் காலியாயிற்று என்று எண்ணாமல் அவர்களுக்கு உண்டான பிதுர்கடன் ஆற்றுங்கள் அதைப் பார்த்து உங்களுக்கு உங்கள் பிள்ளை பிதுர் கடன் ஆற்றும் .


                              போற்றி  ஓம் நமசிவாய 


                                   திருச்சிற்றம்பலம்

    

No comments:

Post a Comment