rudrateswarar

rudrateswarar

Thursday, March 14, 2013

நேச நாயனார் புராணம்

                                                     ஓம்நமசிவாய 

 

நேச நாயனார் புராணம்
        

                           " நேசனுக்கும் அடியேன்"

பிறந்த தலம் - காம்பீலி  
முக்தி தலம் - திரு ஆரூர்
 குருபூசை திருநட்சத்திரம் -பங்குனி, ரோகிணி 
18-03-2013 (திங்கள் கிழமை )
         
 உயர்வும் ஒழுக்கமும் நிறைந்த உத்தமர்கள் வாழும் திருநகர் காம்பீலி . அப்பழம்பதியில் சாலியர் திருமரபில் அவதரித்தவர்    நேசநாயனார். 
சிவனடியார்களை பணிந்து போற்றும்  பண்புடையவர்.
இவர் மனத்தை இறைவன் திருவடிக்கும் வாக்கை ஐந்தெழுத்துக்கும்  தொழிலை சிவனடியார்களுக்கும் செய்து வாழ்ந்தார் அடியார்கட்கு உரியனவாக ஆடையும் கீழும் கோவணமும் நெய்து அன்புடன் ஈந்து மகிழ்வார். இவ்வாறு இடையறாது திருத் தொண்டு புரிந்து கண்ணுதற் பெருமான் திருவடி நிழலை சேர்ந்தார் 
       மனம் வாக்கு காயம் எனும் மூன்று கரணங்களாலும்  தெய்வப்பணியில்  அர்ப்பணித்தார் என்பதை  கீழ்கண்ட  திருப்பாட்டின் மூலம் அறியலாம்  

ஆங்கவர் மனத்தின் செய்கை அரனடிப் போதுக் காக்கி 
ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்செழுத்துக் காக்கித்
தாங்குகைத் தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க் காகப்
பாங்குடை யுடையுங் கீளும் பழுதில்கோ வணமும் நெய்வார் 

     
நாயனாரது குரு பூசையில் கலந்து கொண்டு அவரடிபோற்றிநாமும்அவரை பின்பற்றி 
நற்பணிகள் செய்து நல்வாழ்வு பெறுவோம் 
                   
                                   



                            போற்றி ஓம் நமசிவாய
 
                                     


                              திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment