rudrateswarar

rudrateswarar

Monday, March 4, 2013

காரி நாயனார் புராணம்

                                              ஓம் நமசிவாய  


காரி நாயனார் புராணம்

"காரிக்கும் அடியேன் "

அவதார தலம்  -     திருக்கடவூர் 
முக்தி தலம்         -       திருக்கடவூர்   
குருபூசை திருநட்சத்திரம் -  மாசி , பூராடம் 
  07-03-2013,வியாழன்
       


திருக்கடவூரிலே திரு அவதாரம் செய்தவர். செந்தமிழில் மிக்க புலமையும் கவி பாடும்  வல்லுநர். மூவேந்தரிடத்தும்  சென்று சொல் விளங்க பொருள் மறைந்து நிற்கும் படி தமது பெயரில் காரிக்கோவை என்று பாடி உரையும் விளக்குவார். அம்மன்னர்கள் மகிழ்ந்து கொடுத்த பொற்குவியல்களை கொண்டு பல சிவாலயங்களை புதுக்கினார்.எல்லோருக்கும் உள்ளம் உவக்கும்படி இன்சொல் கூறுவார்  சிவனடியார்க்கு இருநிதியும் அன்புடன் வழங்கும் நியமம்  கொண்டிருந்தார் வடகயிலையை மறவாது தியானம் புரிந்து கொண்டிருந்தார் .தீதின்றி வந்த பொருள் சிவாலயத்திற்கும் சிவனடியார்க்கும் வழங்குவது சிவ புண்ணியம்,அதை அவர் செவ்வனே செய்தும் இடைவிடாது கயிலை தியானத்தினாலும் இவர் இந்த பூவுடலோடு கயிலைபேறு பெற்றார் .              

நெடுஞ்சடையார் தம் அருள் பெற்ற தொடர்பினால் வாய்ந்தமனம் போலுடம்பும் வடகயிலை மலை சேர்ந்தார்.             

என சேக்கிழார் கூற்றின் மூலம் அறியலாம். 
           
இவ்வாறு மானுட உடலோடு பாண்டவர் களில் மூத்தவரான தர்மர் சொர்க்கலோகம்   சென்றதாக மகாபாரதம் கூறுகிறது 
   
அத்தகைய மேன்மை பெற்ற காரி நாயனார் குருபூசை நாளில் (07-03-2013) அவர்  அடிக்கமலம் தாழ்ந்து வணங்கி நாமும் சிவனருள் பெற்று உய்வோமாக .      

 

                   

                   போற்றி ஓம் நமசிவாய

 


                         திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment