ஒம் நமசிவாய
சிவன் - சைவம்
சிவன் - சைவம்
சைவம் என்றால் சிவத்தோடு சம்பந்தம் உடையது என்று பொருள் சிவம்- சைவம் (விஷ்ணு- வைணவம், புத்தர் -பவுத்தம் ). எப்படி சம்பந்தம் கொள்வது .பூஜை ,ஹோமம் தியானம் இவற்றின் மூலமாக வைத்துக் கொள்ளலாம்.
சிவபெருமான் நமக்கு வேதங்களையும் ஆகமங்களையும் அருளியுள்ளார் .ஆனால் வேதங்களின் மூலம் அவரை எளிதில் அணுக முடியாது,அதை மணிவாசக பெருமான் வேதங்கள் அய்யா என ஓங்கி ஆழ்ந்த அகன்ற நுண்ணியனே என்கிறார் , ஆனால் ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க என்பதனால் ஆகமத்தின் மூலம் அணுகினால் இறைவன் நம்மை நெருங்கி வருவான் .அவனை வணங்க அவன் அருள் வேண்டும் இல்லை என்றால் நமக்கு அந்த கொடுப்பினை இருக்காது .அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பதன் மூலமும் புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு என்ற திருமூலர் திருவாக்கின் மூலமும் நமக்கு உணர்த்துகிறார் .
படைத்தலை பிரமனை கொண்டும்,காத்தலை திருமாலைக்கொண்டும்,ருத்ரனை கொண்டு அழித்தலையும்,அனந்த தேவர் மூலம் மறைத்தலையும்,சதாசிவமூர்த்தியாக அருளுவதையும் என ஐந்தொழில் புரிகிறார்.
சைவ சித்தாந்த வினைக்கொள்கையின் படி ஆன்மா அழிவில்லாதது, மாயை ஆகிய இந்த உடல் மட்டும் அழியும், ஆன்மாவிற்கு அது செய்யும் பாவ புண்ணிய வினைக்கு ஏற்றவாறு அதற்கு மாயையில் இருந்து இன்னொரு உடல் கொடுக்கப்படும்.அது வினைக்கு ஏற்றவாறு உடனேவும் நிகழலாம் பல ஆண்டுகளும் ஆகலாம்,முக்தியும் கிடைக்கலாம்.
இன்று இந்த பிறப்பே நமக்கு சாஸ்வதம் கிடையாது இந்த பெற்றோர்களுக்கே நாம் பிறப்போம் என்ற உறுதி கிடையாது எனவே உலகப்பற்றை குறைத்து பற்றற்றவன் மேல் பற்று வைத்தல் நன்று. அன்பே சிவம் என்பதன் பொருள் நாம் சிவனிடத்திலே அன்பு செலுத்த வேண்டும் என்று அர்த்தம் நாம் காட்டும் அன்புக்கு ஈடாக அவர் நமக்கு அருளுவார், நாயன்மார்கள் அதனால் உயர்ந்தார்கள். யாரும் யார் மீதும் குரோதம் வேண்டாம், உயிர்பலி வேண்டாம். யார் எவ்வளவு உயர்ந்த ஞானம் கைவரப்பெற்ற வர்களுக்கும் ஆலய வழிபாடு அவசியம் என்பதையே திருமுறையை அருளிய ஆசிரியர்கள் உணர்த்தினார்கள் அவர்கள் யாரும் வீட்டில் அமர்ந்து பதிகங்கள் பாடவில்லை.ஆலயம் சென்றே தொழுதார்கள் அவர்களின் வழியில் நாமும் சென்று நம் பிறவி தூய்மை பெறுவோம்.
சிவபெருமானே முழுமுதல் கடவுள் அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன்,பிறப்பு இறப்பு இல்லாதவன், மால்,அயன் இந்திரன் முதலானோர் தேடியும் கிடைக்கா தனிப் பெரும் தலைவன்.மக்கள் மட்டுமின்றி புல் முதல் விலங்குகள் வரை அனைத்தும் அவனை வழிபட்டுக்கொண்டே உள்ளன. இப்பிறவி தப்பினால் இனி எப்பிறவி வாய்க்கும்? இப்பேறு பெற பிற சமயத்தில் பிறந்தவர்கள் ஒரு நாள் சைவத்தில் சார்ந்து சிவபூசை செய்து தான் முக்தி எனும் வீடு பேறு பெறுவர்.எந்த தாயின் வயிற்றிலும் பிறவாதவன் அவனே அனைத்திற்கும் மூலமானவன்,84 லட்சம் யோனி பேதம் எனும் ஜீவராசிகளின் கர்த்தா, ஆகமங்களையும் வேதங்களையும் உலகை சிருஷ்டித்த அன்றே அருளி வாழ்க்கை முறையை அளித்தவன்.ஜீவராசிகளின் பொருட்டு நஞ்சை உண்ட கருணைக்கடல். யுகயுகமாக இருக்கும் சைவம். சிவபெருமான் அவனை காலத்தால் அளவிட முடியுமா,அது பசுபிக் மகாசமுத்திரத்தை கையால் அளப்பது போலவாகும்.
சைவத்தின்மேல்சமயம்வேறில்லை. மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம் .
போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
தேவாரப் பதிகங்கள்- நாயன்மார்கள்-ஆழ்வார்கள்-புராணங்கள்
ReplyDeleteகோயில்களில் மட்டுமல்ல எப்பொழுதும் பஞ்ச புராணம் கீழ்வரும் வரிசைபடியே அமையும்.
சைவத் திருமுறைகளைப் பாடத்துவங்குமுன், சைவக்குரவர், நால்வரையும், வாழ்த்துவது மரபாகும்
நால்வர் வாழ்த்து-விளக்க உரைகளுடன் விளங்கப்படுத்தும் சிறப்புப் பக்கமாக மாற்றப்பட்டுள்ளது!
தேவாரம்-. -திருவாசகம்-.. திருவிசைப்பா………… திருப்பல்லாண்டு- ……….. பெரியபுராணம்—திருப்புகழ் —
வாழ்த்து(வான்முகில்.)-
link-http://arulakam.wordpress.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/
முதல் திருமுறை- -இரண்டாம் திருமுறை:- மூன்றாம் திருமுறை: - திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
நான்காம் திருமுறை :- ஐந்தாம் திருமுறை - ஆறாம் திருமுறை திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
ஏழாம் திருமுறை:- பன்னிருதிருமுறைகளில் சுந்தரமூர்த்திநாயனார் பாடியுள்ளதேவாரப் பதிகங்களின் தொகுப்பாகும்.
எட்டாம் திருமுறை :- பன்னிரு திருமுறைகளில்மாணிக்கவாசகர் பாடியருளிய திருவாசகம், திருக்கோவையார்
ஒன்பதாம் திருமுறை சைவத் திருமுறைகள் வைப்பினிலே திருமாளிகைத் தேவர் உட்பட 9 பேர் பாடிய பாடல்களை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதில் 303 பாடல்கள் அடங்கியுள்ளன..இத் திருமுறையிலுள்ள பாடல்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டுஎன இரண்டு வகையாகப் பார்க்கப்படுகின்றன.
ஒன்பதாம் திருமுறையிலுள்ள பதிகங்கள் வாயிலாகப் பாடப்பட்ட கோயில்கள் 14 ஆகும்.
பத்தாம் திருமுறை :- பன்னிரு திருமுறைகளில் திருமூலர்பாடிய மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திரத்தை உள்ளடக்கியுள்ளது.
பதினொன்றாம் திருமுறை
001 திருவாலவாயுடையார்- 002 மூத்த திருப்பதிகம் -1-
003 திருஇரட்டைமணிமாலை 004 அற்புதத் திருவந்தாதி
005 சேத்திரத் திருவெண்பா 006 பொன்வண்ணத் தந்தாதி
007 திருவாரூர் மும்மணிக்கோவை- 008 திருக்கைலாய ஞானஉலா
009 கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி 010 திருஈங்கோய்மலை எழுபது
011 திருவலஞ்சுழி மும்மணிக்கோவை 012 திருஎழுகூற்றிருக்கை
013 பெருந்தேவபாணி 014 கோபப் பிரசாதம் 015 கார் எட்டு
016 போற்றித் திருக்கலிவெண்பா 017 திருமுருகாற்றுப்படை
018 திருக்கண்ணப்ப தேவர் திருமறம் 018 திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
020 மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
பன்னிரண்டாம் திருமுறை
பன்னிரு திருமுறைகளில் சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தை உள்ளடக்கியுள்ளது. சேக்கிழார்நம்பியாண்டார் நம்பியின் பிற்காலத்தவராதலால், நம்பியாண்டார் நம்பியால் பகுக்கப்பட்ட ஆரம்பத் திருமுறைப் பகுப்பில் இது உள்ளடக்கப்படவில்லை. பிற்காலத்தில் இது பதினொரு திருமுறைகளுடன் பன்னிரண்டாவதாகச் சேர்க்கப்பட்டது.
உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.-பன்னிரு திருமுறைகல்-ARULAKAM WORDPRESS.COM-இல் இணைக்கப்பட்டுள்ளது
சிவனை முழுமுதலாகக்கொண்ட மொழி தமிழ்,ஆகவே சிவனையும் தமிழையும் பிரித்துப்பார்க்க முடியாது
தமிழர்களுடைய வாழ்வுப் பயணம் தடம் புரண்டு போவதற்குக் காரணம்-பகுத்தறிவேபொறுப்புஆகவே
-தமிழர்களுக்கு விளங்காமல் இருக்கவே பகுத்தறிவு-வாழ்க பகுத்தறிவு எல்லாம் நம்வரலாற்றை அழிக்க நினைசைவ தவர்கள் செய்த சதி.
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்--- துலங்குக வையக மே!--
சைவம் என்று சொல்லுவோம்.திருநெறித்தமிழராய் வாழ்வோம்
தமிழ் என் தாய் நாம் வாழ்க. நாம் உயிர் தமிழ் முச்சி எங்கும் வாழ்க வாழ்க வாழ்கவே
நாம்நற்றவா! உனை நான் மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே
ARULAKAMWORDPRESS.COM எமது படைப்புகளை.எமது தலைமுறையினருக்கு மட்டுமல்ல நாளையதலைமுறையினருக்கும் பயன்படக் கூடிய .வகையில்அருளகம்இணையதளத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்
மிக்க நன்றி அய்யா
Delete