rudrateswarar

rudrateswarar

Friday, March 15, 2013

முனையடுவார் நாயனார் புராணம்

                                                     ஓம் நமசிவாய
 
முனையடுவார் நாயனார்
                 புராணம்

"அறைக்கொண்ட  வேல்நம்பி முனையடுவாற்கு அடியேன்"

அவதாரதலம்-   நீடூர்
முக்திதலம்    -   நீடூர் 
குருபூசை திருநட்சத்திரம் - பங்குனி பூசம் 
     22-03-2013 வெள்ளிக் கிழமை  
      
                
சோழ வள நாட்டிலே வயல் சூழ்ந்து செல்வம் நீடிய ஊர் நீடூர் .அத்தலத்தில் வேளாண்  மரபில் வந்து  அக்குலத்திற்குத் தலைவராய் வாழ்ந்தார்   முனையடுவார் நாயனார்   (முனை-போர்)  பலமுனைகளுக்குச்சென்று 
பகைவரை வென்றதனால் இவர் முனையடுவார் எனப் பெயர் பெற்றார் சிவபெருமானிடத்திலே மாறாத காதல் கொண்டு உள்ளம் உருகி வெள்ளம்போல் கண்ணீர் பெருகி வழிபடுவார் , அன்புநெறி நின்ற அவர் வீரஞ் செறிந்து விளங்கினார்
மாற்றாரை எதிர்த்து போர் புரிந்து வெல்ல வல்லவர் பகைவர்கட்குத் தோற்றவர் இவர் பால் வந்து வேண்டி நிற்பர் நடு நிலையுடன் அவர்பால் நிதிபெற்று பகைவரை எதிர்த்து வெற்றி பெறுவார் இவ்வகையில் வந்த பொன் கொண்டு அடியார்க்கு வழங்கி திருத் தொண்டு புரிந்தார் அடியார்க்கு அறுசுவை உண்டி அளித்து இன்புறுவார் 
      
உயிரை துரும்பாக எண்ணிப் போர் புரிந்து  
அதனால் வரும் நிதியை அள்ளி வழங்கும்  வள்ளன்மை மிகவும் போற்றுதற் குரியது                

இன்ன வகையால் பெற்றநிதி எல்லாம் ஈசனடியார்கள் 
சொன்ன சொன்ன படி நிரம்பக் கொடுத்துத் தூய போனகமும் 
கன்னல் நறுநெய் கறிதயிர்பால் கனியுள்ளுறுத்த கலந்தளித்து
மன்னும் அன்பில் நெறிபிறழாவழித் தொண்டாற்றி வைகினார்


அவர் அடியார்க்கு உண்டி வழங்கிய பாங்கினை இத் திருப்பாடல் மூலம் அறியலாம்    

இவ்வாறு நெடுநாள் சிவத்தொண்டு புரிந்து 
சைவநெறி நின்று சிவலோகமடைந்து ஆரா 
அமுதாம் பேராப் பெருவாழ்வு பெற்றார் 
நாயனாரது குருபூசை நாளில் அவரை வணங்கி அவர் போல நாமும்  சிவத் தொண்டு செய்து இறைவனின் அருளுக்கு பாத்திரமாவோம்

                                    

  
                          போற்றி ஓம் நமசிவாய 

                                          

                              திருச்சிற்றம்பலம்           

No comments:

Post a Comment