ஓம் நமசிவாய
மகா பிரதோஷம்
இறைவன் நஞ்சை உண்டு நீலகண்டனாகிய இந்நேரம் பிரதோஷம் எனப்படுகிறது. நித்ய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாத பிரதோஷம் என்றிருக்க அது என்ன மஹாபிரதோஷம் ?
இந்நிகழ்வு ஒரு சனிக்கிழமை திரயோதசி திதியில் பகலும் இரவும் சந்திக்கும் நேரத்தில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன ஆதலால் சனிப்பிரதோஷம் மகாபிரதோசம் எனப்படுகிறது சூரியன் அஸ்தமிக்கும் முன் 3 3/4 நாழிகை(90 நிமிடம்1.30மணிநேரம்) அஸ்தமித்த பின் 3 3/4 நாழிகை (90 நிமிடம் 1.30மணி நேரம்) தோராயமாக 4.30pm முதல் 7.30pm வரை .இது இறைவனை வழிபட ஏற்ற புண்ணிய காலம் இறைவன் நஞ்சை உண்ட அயர்ச்சியினால் இருந்தார்.அந்நேரம் என்ன ஆகுமோ என்று மூவரும் தேவர்களும் அன்னையும் தவித்தனர்
அப்பொழுது ஜீவராசிகள் அனைத்திற்கும் புத்துணர்ச்சி வழங்குதல் பொருட்டு மகாதேவர் நந்தியெம்பெருமானின் கொம்புக ளுக்கிடையே திருநடனம் புரிந்தருளினார் உயிர்களின் இயக்கம் சீராகவும் அவர்கட்கு உற்சாகம் அளிக்கவும் கருணைக்கடல் திருநடனம் புரிந்தார் ஆகவே குறைபாடான அந்தநேரத்தில் இறைவன் நம் குறை களைந்து துயர் துடைப்பான்,அந்த நேரத்தில் சகல தேவர்களும் மால்அயன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் இறைவனை துதித்துப் பேறு பெறுகின்றன . எனவேஅரிய மானுடப்பிறவியாகிய நாமும்
இறைவனையும் நந்தியெம்பெருமானையும்
அபிஷேகித்து, அர்ச்சித்து ஆராதித்து ஐந்தெழுத்து ஜெபித்து தொழுது வலம் வந்து நமது ஆன்மா எனும் உயிரை புத்துணர்வு செய்து கொள்ளலாம்
அபிஷேகித்து, அர்ச்சித்து ஆராதித்து ஐந்தெழுத்து ஜெபித்து தொழுது வலம் வந்து நமது ஆன்மா எனும் உயிரை புத்துணர்வு செய்து கொள்ளலாம்
இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன ? செய்ய வேண்டியதை செய்யாமல் இருக்கலாம் ஆனால் செய்யக்கூடாததை செய்யாமல் இருக்க வேண்டும்.
செய்யத்தகாதவை
1.உணவு அருந்தக்கூடாது முடிந்தால் நீர் பருகுவதை கூட தவிர்க்கலாம். கோவில் பிரசாதம் கூட பிரதோஷ காலம் முடிந்த பின் எடுத்துக்கொள்ளலாம்.திருவிளையாடல் புராணத்தில் இறைவன் மேல் விழுந்த அடி அனைத்து உயிர்களின் மேல் விழுந்தது எனவே இறைவன் நஞ்சு உண்ட காலத்தில் நாம் அருந்தும் உணவு விஷத்திற்கு சமம்
2.உறக்கம் தவிர்க்க வேண்டும் (மற்ற நாட்களிலும் 4.30 to 7.30மணி வரை )
3. அதிகமாக அலங்கரித்தல் செய்யக்கூடாது
4.ஆலயம் சென்றால் அரட்டை அடிக்க கூடாது
5.மலஜலம் கழிப்பதை முன் கூட்டியே முடித்துக் கொள்ளவேண்டும்
6.ஒன்றுகொன்று தள்ளிக்கொண்டு முண்டியடித்து தகராறு செய்வது அடியோடு கூடாது ,பொறுமை அமைதி காக்க வேண்டும்
7.பக்தி பாடல் என்ற பெயரில் சினிமா படத்தில் வரும் பாடல்களை பாடகூடாது
8.கண்ட இடங்களில் விழுந்து வணங்க கூடாது
9.சண்டேஸ்வரர் சந்நிதியில்நூல்போடுவதும் சத்தமாக கை தட்டுவதும் கூடாது.சதா சிவ நிஷ்டையில் இருக்கும் அவரை தொந்தரவு செய்வது சிவாபராதமாகும்
10.அன்று நாள் முழுதும் இரவு வரை விரதம் இருக்காமல் இருந்தாலும் பரவாயில்லை தவறியும் அசைவம் கூடாது
11.தீட்சை பெற்றவர்கள் தங்களது நித்ய கடமையான அனுஷ்டானம் சந்தியா வந்தனம் பூஜை போன்ற கிரியைகளை செய்யகூடாது
செய்யத்தகுந்தவை
1.பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகிய திரு நீறு ருத்ராட்சம் அணிந்து உள்ளசுத்தியோடு ஆலயம் செல்ல வேண்டும்.
2.வெறுங்கையோடு எப்பொழுதும் ஆலயம் செல்லாமல் பூ வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் வில்வம் என நம்மால் முடிந்த ஒன்றை கொண்டு செல்லவேண்டும்.
3.அபிசேகப்பொருட்கள்,திரவியங்கள் பால் பன்னீர் ,மஞ்சள் திருமஞ்சனம்கொடுக்கலாம்
4.ஆலயத்தை தூய்மை செய்து கொடுக்கலாம்
5.சிவபுராணம் ,லிங்காஷ்டகம் ,திருமுறை பதிகங்களை பண் தெரியாவிட்டாலும் நமக்கு தெரிந்தவகையில் பாடலாம்
6.மேற்சொன்ன பாடல்கள் தெரியாது என்றால் வருத்தம் தேவையில்லை மிக எளிய ஏழை பங்காளனின் மூல மந்திரம் ஓம் நமசிவாய சொல்லுங்கள், அதை விட உலகில் உயர்ந்த மந்திரம் ஒன்றுமில்லை
7.கிழக்கு மேற்கு பார்த்த கோவில்களாக இருந்தால் வடக்கு பார்த்தும் வடக்கு தெற்கு பார்த்த கோவில்களாக இருந்தால் கிழக்கு பார்த்தும் தலைவைத்து கொடிமரம் பலி பீடத்திற்கு அருகில் மட்டும் வணங்கவேண்டும்
8.சண்டிகேஸ்வரரை வணங்கி சிவதரிசன பலன்களை தந்தருளுங்கள் என்று வேண்டிக் கொள்ளவேண்டும்
9.ஓம் நமசிவாய சொல்வதற்கு ஜப மாலை இல்லை எப்படி 108 முறை கணிப்பது என்று குழப்பம் தேவையில்லை மனமொன்றி சிவனை மனத்தில் நினைத்து 108 முறை நோட்டில் எழுதுங்கள் ,அது போதும்
10 ஆலயம் வலம் வரும் போது கைகளை மார்புக்கு கீழே தொங்க விடாமலும் வீசி நடக்காமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்
11.பெரிய புராணம் எனும் நாயன்மார்கள் வரலாற்றை படித்தும் கேட்டும் பயன் பெறலாம்
No comments:
Post a Comment