rudrateswarar

rudrateswarar

Friday, March 15, 2013

கணநாத நாயனார் புராணம்

                                                     ஓம் நமசிவாய

 
கணநாத நாயனார் புராணம் 


"கடற் காழிக்கண நாதன் அடியார்க்கும் அடியேன் "


அவதார தலம் - சீர்காழி   
முக்தி தலம்     - சீர்காழி 
குருபூசை திருநட்சத்திரம் -பங்குனி ,
திருவாதிரை  20-03-2013 (புதன் கிழமை )
     
                     
சீரும் சிறப்பும் ஒருங்கே பெற்ற நகர் சீர்காழி . உமை அம்மையின் திருமுலைப்பாலுண்ட திருஞான சம்பந்த சுவாமிகள் திருஅவதாரஞ்
செய்த தலம் என்றால் அதன் கீர்த்தியை  அளவிடமுடியுமோ ? ஊழிக் காலத்திலும்  அழியாமல் தோணி போல் மிதந்த 
தோணிபுரம் அல்லவா 
                  ஆன்மாக்களுக்கு புகலிடமாக விளங்குவதால் 
புகலி எனப்படும் அப்பதியில் மறையவர்  குலத்தில் கண நாதர் அவதரித்தார்  சீர்காழி தோணியப்பரை  எப்போதும் வழிபட்டு
வந்தார்நாள்தோறும் தோணியப்பருக்குரிய  திருத்தொண்டுகளை புரிவார் 
     திருத்தொண்டு செய்யும் விருப்பத்தோடு வரும் 
அடியவர்களுக்கு திருத்தொண்டுகளை பயிற்றுவிப்பார் . நந்தவனம் அமைத்தல் , மலர்களை முறைப்படி எடுத்தல், அவற்றை  முறைப்படி தொடுத்தல், திருமஞ்சனத்திற் குரிய  சாதனங்களை அமைத்தல் திருக்கோயிலில் அலகிடுதல் , மெழுகுதல் , திருவிளக்கேற்றுதல் திருமுறைகளை  எழுதுதல் ,ஓதுதல் என அவர்களின்  விருப்பம்  அறிந்து ஈடுபடுமாறு செய்து , அதன் பயன்களை புரியுமாறு எடுத்துக் கூறி அவர்களை அன்புடன் ஊக்குவிப்பார்     

இவ்வாறு பலபல அடியார்களை பெருக்குவார் நல்லறமாகிய இல்லறத்தில் நின்று அடியார்கள் மகிழ வழிபட்டு வந்தார் 
இவ்வாறு ஒழுகி வரும் காண நாத நாயனார் திருஞான சம்பந்தர் திருவடிகளை மூன்று காலங்களிலும் மிக்க அன்புடன் அருச்சனை செய்து வழிபட்டு மகிழ்வார் 
             
அடியார்கட்கு தொண்டிலே உள்ள இனிமை அலாதியானது. தொண்டு செய்து அண்டர் போற்றும் பெருமை பெறுவர் அவர்கள் தொண்டுக்கு இடர்வருங்கால் உயிரையும் விடும்உறுதியுடையவர்கள். அப்படி பயன் கருதாமல் தாம் தொண்டு செய்ததோடு நில்லாமல் தொண்டர்கள் பலரை உண்டாக்கி அவர்களின் அன்புக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வாறு பயிற்றுவித்து உரிய சாதனங்களை வழங்கியும் வேறு பல உதவிகள் செய்தும் சிவபுண்ணியம் பெற்றார் 
       
    
    நல்ல நந்தன வனப்பணி செய்பவர் 
          நறுந்துணர் மலர் கொய்வோர் 
    பல்பணி தொடை புனைபவர் கொணர்திரு 
          மஞ்சனப் பணிக்குள்ளோர்
    அல்லு நண்பகலுந் திரு அலகிட்டுத் 
          திருமெழுக் கமைப்போர்கள் 
     எல்லையில் விளக்கெரிப்பவர் திருமுறை 
            எழுதுவோர் வாசிப்போர் 

  
இத்தகைய திருப்பணிகளில் நந்தவனப் பணியையே முதன்மையாக கூறுகின்றார் 
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு என்ற திருமூலர் வாக்கினால் மலரில்லாமல் வழிபாடு இல்லை அம்மலரை தருவது நந்தவனம் ஆகவே நந்தவனம் அமைத்தல் பெருஞ்சிவபுண்ணியமாகும் 
  "துளக்கினன் மலர் தொடுத்தோர் தூய விண்ணேரலாகும்"   என்ற அப்பர்சுவாமிகளின் திருவாக்கின் மூலம் அறியலாம் 
        
அந்த வழியில் நாமும் நம்மால் இயன்ற திருப்பணி செய்தும் செய்பவர்களை ஊக்குவித்தும் சிவபுண்ணியம் பெற நாயன் மாரது குரு பூசையில் கலந்துகொண்டு அந்த பேறு பெற வழிபடுவோம் 


                             


                        போற்றி ஓம் நமசிவாய 

                                  


                            திருச்சிற்றம்பலம்      
    

No comments:

Post a Comment