காலற் சீறிய கழலோய் போற்றி
மூலத் தொகுதி முதல்வ போற்றி
ஒற்றி மாநகர் உடையோய் போற்றி
முற்றும் ஆகிய முதல்வ போற்றி
அணைதொறும் சிறக்கும்அமிர்தேபோற்றி
இணைபிறி தில்லா ஈச போற்றி
ஆர்வம் செய்பவர்க் கணியோய்போற்றி 730
தீர்வில் இன்சுவைத்தேனே போற்றி
வஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றி
நஞ்சினை அமிர்தாய் நயந்தோய் போற்றி
விரிகடல் வையக வித்தே போற்றி
புரிவுடை வனமாய்ப்புணர்ந்தோய்போற்றி
செம்மைக் காணியாகிய அரனே போற்றி
பெண்ணோடாணெனும்பெயரோய்போற்றி
தீப மாகிய சிவனே போற்றி
மாலோய் போற்றி மறையோய் போற்றி
மேலோய் போற்றி வேதிய போற்றி
சந்திர போற்றி தழலோய் போற்றி
இந்திர போற்றி இறைவ போற்றி
அமரா போற்றி அழகா போற்றி
குமரா போற்றி கூத்தா போற்றி
பொருளே போற்றி பொற்பாதம் போற்றி
போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி
பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றிபோற்றி
சொல்லுவதறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி
வல்லைவந்தருளி என்னை வழித்தொண்டு கொண்டாய்போற்றி எல்லையில் இன்பவெள்ளம் எனக்கருள் செய்தாய் போற்றி
தில்லையம்பலத்து ளாடும் சேவடி போற்றி
படிமிசைகமரில் வந்திங்கமுது செய்பரனே போற்றி
துடியிடை பாகமான தூய நற் சோதி போற்றி
பொடியணி பவளமேனிப் புரிசடைப் புராண போற்றி 755
தென்தில்லை மன்னினுள் ஆடி போற்றி
வேட்கள நன்னகர் மேயாய் போற்றி
நெல்வாயில் வளர் நிதியே போற்றி
கழிப்பாலை உரை கரும்பே போற்றி
நல்லூர் பெருமண நம்பா போற்றி 760
மயேந்திரப்பள்ளி மன்னா போற்றி
தென்திருமுல்லை வாயிலாய் போற்றி
கலி காமூர் வளர் கண்ணே போற்றி
சாய்க்காடு இனிதுறை சதுரா போற்றி
பல்லவனீசர பரனே போற்றி
வெண்காடு உகந்த விகிர்தா போற்றி
கீழைத்திருக்காட்டு ப்பள்ளியாய் போற்றி
குருகாவூர் உரை குணமே போற்றி
காழியுள் மேய கடலே போற்றி
கோலக்காவின் கோவே போற்றி
வேளூர் மேவிய வித்தகா போற்றி
கண்ணார்கோயில் வாழ் கனியே போற்றி
கடைமுடிப் பரம நின் கழல்கள் போற்றி
நின்றியூர் வளரும் நிதியே போற்றி
திருப்புன்கூர் அமர் திருவே போற்றி
நீடூர் நிருத்த நின் நீளடி போற்றி
அன்னியூர் வளர் அரனே போற்றி
வேள்விக்குடி வளர் வேதா போற்றி
எதிர்கொள்பாடி எம்மிறைவா போற்றி
மணஞ்சேரி வார்சடை மணாளா போற்றி
குறுக்கை வீரட்டக் குழகா போற்றி
கருப்பறியலூர் காப்பாய் போற்றி
குரங்குக்கா கோவே போற்றி
வாழ்கொளிப்புத்தூர் வாழ்வே போற்றி
மன்னிப்படிக்கரை மணியே போற்றி
ஓமாம்புலியூர் ஒருவனே போற்றி
கானாட்டுமுல்லூர் கடவுளே போற்றி
நாரையூர் நன்னகர் நலமே போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
பந்தணைநல்லூர் பசுபதி போற்றி 790
கஞ்சனூர் ஆண்ட கற்பகமே போற்றி
கோடிக்கா உண்ட கோவே போற்றி
திருமங்கலக்குடி தேனே போற்றி
பனந்தாள் தாலவனேச்சரனே போற்றி
ஆப்பாடி பதி அமலா போற்றி
சேய்ஞலூர் உறையும் செல்வா போற்றி
திருந்துதேவன்குடி தேவா போற்றி
வியலூர் இருந்தருள் விமலா போற்றி
கொட்டையூரில் கோடீச்சரா போற்றி
இன்னம்பர் ஈச நின் இணையடி போற்றி
புறம்பயம் பதிவாழ் புண்ணியா போற்றி
விசயமங்கை வேதியா போற்றி
திருவைக்காவூர் உறை சிவனே போற்றி
வடகுரங்காடுதுறையாய் போற்றி
பாங்கார் பழனத்து அழகா போற்றி
சீரார் திருவையாறா போற்றி
நெய்த்தானத்து நெய்யாடியே போற்றி
பெரும்புலியூர் பெருமானே போற்றி
மழபாடி வைரத்தானே போற்றி
பழுவூர் மேவிய பண்பா போற்றி
கானூர் மேய செங்கரும்பே போற்றி
அன்பில் ஆலந்துறை அரசே போற்றி
வடகரை மாந்துறை வல்லான் போற்றி
திருப்பாற்றுறை உறை தேவே போற்றி
ஆனைக்கா உறை ஆதீ போற்றி
பைஞ்ஞிலி அண்ணல் நின் பாதம் போற்றி
பாச்சிலாச்சிராம பரனே போற்றி
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி
வாட்போக்கி மலை உரை வாழ்வே போற்றி
கடம்பந்துறை வளர் கடலே போற்றி 821
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
கற்குடி மாமலை கண்ணுதல் போற்றி
மூக்கீச்சரத்து முதல்வா போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
எறும்பியூர் இருந்த எம்மான் போற்றி
நெடுங்களம் இனிது அமர் நிமலா போற்றி
மேலைத் திருக்காட்டுப்பள்ளியாய் போற்றி
ஆலம்பொழில் உறை அரனே போற்றி
திருப்பூந்துருத்தி தேசிகா போற்றி
கண்டி வீரட்டக் கரும்பே போற்றி
சோற்றுத்துறை வளர் தொல்லோய் போற்றி
வேதிகுடி உறை விசய போற்றி
தென்குடித்திட்டை தேவே போற்றி
திருப்புள்ளமங்கை திருவே போற்றி
சக்கரப்பள்ளி எம் சங்கரா போற்றி
கருகாவூர் உறை கடம்பா போற்றி
திருப்பாலைத்துறை செல்வா போற்றி
நல்லூர்ப் பெருமண நற்பதம் போற்றி
ஆவூர் பசுபதீச்சரனே போற்றி
சத்திமுற்றச் சதுரா போற்றி
பட்டீச்சரம் உறை பரமா போற்றி
பழையாறை வடதளியாய் போற்றி
வலஞ்சுழி மேவிய வரதா போற்றி
குடமூக்கு அமர் கும்பேசா போற்றி
கீழ்க்கோட்டத்து எம் கூத்தா போற்றி
குடந்தைக்காரோணத்தாய் போற்றி
நாகேச்சரம் வாழ் நாதா போற்றி
இடைமருது உறையும் எந்தாய் போற்றி
தென் குரங்காடுதுறையாய் போற்றி 850
நீலக்குடி உறை நிருத்தா போற்றி
வைகல் மாடக்கோயிலாய் போற்றி
நல்லம் நடம்பயில் நாதா போற்றி
கோலம்பதுறை கோவே போற்றி
ஆவடு தன் உறை அமரா போற்றி
துருத்தி ஈச நின் துணையடி போற்றி
அழுந்தூர் ஆளும் அரசே போற்றி
மயிலாடும் துறை மணியே போற்றி
திருவிள நகர் உறை திருவே போற்றி
பறியல் வீரட்டப் பரமா போற்றி
செம்பொன்பள்ளி செல்வா போற்றி
நனிபள்ளி வளரும் நம்பா போற்றி
வலம்புரம் மன்னிய வாழ்வே போற்றி
தலைச்சங்காடு அமர் தத்துவ போற்றி
ஆக்கூர் அமர்ந்த அம்மான் போற்றி
கடவூர் கால வீரட்டா போற்றி
கடவூர் மயானக்கடவுளே போற்றி
வேட்டக்குடியின் மேயாய் போற்றி
திருதெளிச்சேரி சிவனே போற்றி
தருமபுரம் வளர் தத்துவா போற்றி
நள்ளாறுடைய நாதா போற்றி
கோட்டாறு அமரும் குழகா போற்றி
அம்பர் பெருந்திருக்கோயிலாய் போற்றி
அம்பர் மாகாளத்து அரனே போற்றி
மீயெச்சூர் உரை விண்ணவ போற்றி
மீயெச்சூர் இளங்கோயிலாய் போற்றி
திலதைப்பதி வாழ் திலகமே போற்றி
பாம்புர நன்னகர் பரமனே போற்றி
சிறுகுடி விரை முடி செல்வா போற்றி
விண்ணிழி வீழிமிழலையாய் போற்றி 880
வன்னியூர் மேவிய மைந்தா போற்றி
கருவிலி அமரும் கண்ணே போற்றி
பேணுபெருந்துறைப் பெம்மான் போற்றி
நறையூர் சித்தீச்சரனே போற்றி
அரிசிற்கரைப் புத்தூரா போற்றி
செழுமலர் சிவபுரத்தரசே போற்றி
கலையநல்லூர் கடவுளே போற்றி
கருக்குடி அண்ணல் நின் கழல்கள் போற்றி
திருவாஞ்சிய அம்பலர் தேவே போற்றி
நன்னிலத்து பெருங்கோயிலாய் போற்றி
கொண்டீச்சரத்து கோவே போற்றி
திருப்பனையூர் வளர் தேவே போற்றி
விற்குடி வீரட்டம் மேயாய் போற்றி
புகலூர் மேவிய புண்ணியா போற்றி
புகலூர் வர்த்தமானீச்சரா போற்றி
இராமனதீச்சரத்து இறைவா போற்றி
பயற்றூர் உறையும் பண்பா போற்றி
செங்காட்டங்குடி சேவகா போற்றி
மருகல் பெரும நின்மலரடி போற்றி
சாத்தமங்கை சம்புவே போற்றி 900
நாகைகாரோணம் நயந்தாய் போற்றி
சிக்கல்நகர் வளம் செல்வா போற்றி
கீழ்வேளூர் ஆல் கேடிலி போற்றி
தேவூர் ஆதி நல்தேனே போற்றி
பள்ளி முக்கூடல் பரனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
ஆரூர் அறநெறி அப்பா போற்றி
பரவையுன்மண்டளி பரனே போற்றி
விளமர் உக ந்த வித்தகா போற்றி
கரவீர சங்கரனே போற்றி
பெருவேளூர் உறை பெரும போற்றி
தலையாலங்காடு அமர்ந்தாய் போற்றி
குடவாயில் மன்னிய குருவே போற்றி
சேறை செந்நெறி செல்வா போற்றி
நாலூர் மயான நாடகா போற்றி
கருவாய்க் கரைபுத்தூரா போற்றி
திரு இரும்பூளைத் தேவே போற்றி
அரதைப் பெரும்பதி அமர்ந்தாய் போற்றி
அவளிவள் நல்லூர் அரசே போற்றி 920
பரிதிநியமப் பரனே போற்றி
வெண்ணி வாழ் நிமலா நின் மெல்லடி போற்றி
பூவனூர் புனித நின் பொன்னடி போற்றி
பாதாளீச்சரப் பரமா போற்றி
திருக்களர் மேவிய தேவா போற்றி
ஓங்கு சிற்றேமத்து ஒருவா போற்றி
உசாத்தானத்து அமர் உறவே போற்றி
இடும்பாவனத்து உறும் போற்றி
கடிக்குளத்து உறை கடலமுதே போற்றி
தண்டலை நீள்நெறி தாயே போற்றி
கோட்டூர் மேவிய கொழுந்தே போற்றி
வெண்டுறை மேவிய வேதா போற்றி
கொள்ளம்புதூர் கோவே போற்றி
பேரெயில் பெருமநின் பெய்கழல்போற்றி
கொள்ளிக்காடு அமர் கொற்றவ போற்றி
திருத்தெங்கூர் வளர் தேனே போற்றி
நெல்லிக்கா உறை நித்திய போற்றி
நாட்டியத்தான்குடி நம்பி போற்றி
திருக்காறாயில் தியாகா போற்றி
கன்றாப்பூர் நடுநெறியே போற்றி
வலிவலம் வந்தருள் வரதா போற்றி
கைச்சினம் மேவிய கண்ணுதல் போற்றி
கோளிலி உறையும் கோவே போற்றி
திருவாய்மூர் அடிகள் நின் மலர்ப்பதம் போற்றி
மறைக்காடு உறையும் மணாளா போற்றி
அகத்தியான்பள்ளி அய்யா போற்றி
கோடிக்கோயில் குழகா போற்றி
திருவிடைவாய் வளர் தேவா போற்றி
கோணமாமலை குடிகொண்டாய் போற்றி
அண்ணல் கேதீச்சரத்து அடிகள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி
ஆப்பனூர் வளர் அய்யா போற்றி
திருப்பரங்குன்றில் செல்வா போற்றி
ஏடகத்து எந்தை நின் இணையடி போற்றி
கொடுங்குன்று அமரும் கோவே போற்றி
திருப்புத்தூர் திருத்தளியாய் போற்றி
திருப்புனவாயில் என் செல்வா போற்றி
மால்செய் இராமேச வாழ்வே போற்றி
ஆடானை உறை ஆதீ போற்றி
கானப்பேர் உறை காளையாய் போற்றி
பொருப்பமர் பூவனத்து அரனே போற்றி
சுழியல் வளர் துணைவா போற்றி
குற்றாலத்து உறை கூத்தா போற்றி
நெல்வேலி உறை செல்வா போற்றி
அஞ்சைகளத்து உறை அப்பா போற்றி
அவினாசி வளர் அரனே போற்றி
முருகன்பூண்டி முதல்வா போற்றி
திருநணா வளரும் திருவே போற்றி
கொடிமாடச்செங்குன்றாய் போற்றி
பாண்டிக்கொடுமுடி பழையோய் போற்றி
கருவூர் ஆனிலை கண்மணி போற்றி
நெல்வாயில் அரத்துறையாய் போற்றி
பெண்ணாகடத்து பெரும போற்றி
கூடலையாற்றூர் கோவே போற்றி
எருக்கத்தம்புலியூர் எந்தாய் போற்றி
திருத்தினை நகர சிவனே போற்றி
சோபுரம் மேவிய சொக்கா போற்றி
அதிகை வீரட்டத்து அழகா போற்றி
நாவலூர் மேவிய நம்பா போற்றி
முதுகுன்று அமர்ந்த முனிவா போற்றி
நெல்வெண்ணெய் மேவிய நிருத்தா போற்றி
கோவல் வீரட்டக் கோமான் போற்றி
அறையணிநல்லூர் அரசே போற்றி
இடையாறு இடையமர் ஈசா போற்றி
வெண்ணைநல்லூர் உறை மேலோய் போற்றி
துறையூர் அமர்ந்த தூயோய் போற்றி
வடுகூர் அடிகள் மாடளி போற்றி
திருமாணிக்குழி வளர் தேவா போற்றி
பாதிரிப்புலியூர் பரமா போற்றி
முண்டீச்சரத்து முதல்வா போற்றி
புறவார் பனங்காட்டூரா போற்றி
திருஆமாத்தூர் அமர் தேவா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
கச்சி மேற்றளி உறை கடலே போற்றி
ஓணகாந்தன்தளியாய் போற்றி
கச்சி அனேகதங்காவதா போற்றி
கச்சிநெறிக்காரைக் காடாய் போற்றி
குரங்கணில் முட்டம் குழவினாய் போற்றி
மாகறல் வாழும் மருந்தே போற்றி
ஓத்தூர் மேவிய ஒளியே போற்றி
வன்பார்த்தான் பனங்காட்டூரா போற்றி
திருவல்ல மேவிய தீவண்ணா போற்றி
மாற்பேறால் உமை மணாளா போற்றி
திருவூறல் வளர் தேவே போற்றி
இலம்பையங்கோட்டூர் ஈசா போற்றி
விற்கோலத்து உறை வீரா போற்றி
ஆலங்காட்டு எம் அடிகள் போற்றி
பாசூர் அமர்ந்த பசுபதி போற்றி
வெண்பாக்கத்து உறை விமலா போற்றி
கள்ளில் மேய கனியே போற்றி
காளத்திநாத நின்கழல் இணை போற்றி
ஒற்றியூர் உடை ஒருவ போற்றி
வலிதாய உறை வல்லான் போற்றி
வடதிருமுல்லை வாயிலாய் போற்றி
வேற்காட்டு வேத வித்தகா போற்றி
மயிலைக் கபாலீச்சரத்தாய் போற்றி
வான்மியூர் அமர்ந்த வாழ்வே போற்றி
கச்சூர் ஆலக்கோயிலாய் போற்றி
இடைச்சுரம் இருந்த எழில்வண்ண போற்றி
திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி
அச்சிறுப்பாக்கம் அமர்ந்தாய் போற்றி
வக்கரை அமர்ந்த வரதா போற்றி
அரசிலி நாதா அய்யா போற்றி
இரும்பை மாகாளத்து இறைவா போற்றி
கோலக்கோகர்ணக் கொழுந்தே போற்றி
திருப்பருப்பதத்து தேவே போற்றி
இந்திர நீல மலையாய் போற்றி
அனேகதங்கா வதம் அமர்ந்தாய் போற்றி
கேதார கிரி கிழவோய் போற்றி
கயிலைமலையானே போற்றி
|
No comments:
Post a Comment