rudrateswarar

rudrateswarar

Saturday, June 1, 2013

சிவாலய குளத்தை மறைத்த ஆதிபராசக்தி சித்தர்பீடம்

                                                 ஓம் நமசிவாய

சிவாலய குளத்தை மறைத்த   ஆதிபராசக்தி சித்தர்பீடம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருள்மிகு மதுவன நாயகி உடனமர் அருள்மிகு மதுவனேஸ்வரர் ஆலயம் தேவார பாடல் பெற்ற 71வது தலமாகும் .இது கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயிலாகும் இக்கோயில் 1400ஆண்டுகளுக்கு முற்பட்டது இக்கோயிலுக்கு பிரம்ம தீர்த்தம் சூல தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளன 

இக்கோயிலின் குளம் ஆலயத்தின் திருமதிலை ஒட்டி வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது இக்குளத்திற்கு தீர்த்தம் எடுக்க செல்ல வழியில்லாமல் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைப்பினர் திருக்கோயில் மதிலை ஒட்டி கூடாரம் அமைத்து உள்ளனர் .ஆலயம் என்பது மூர்த்தி தலம் தீர்த்தம் என மூன்றும் முக்கியத்துவம் பெற்றது. ஆலய இறைவர் அபிசேகத்திற்கும் தல யாத்திரை வரும் பக்தர்கள் புனித நீராடவும் குறைந்தது தீர்த்தம் 
தங்கள் மேல் தெளித்துகொள்வதும் வழக்கம். அதற்காகவே குளங்கள் உள்ளன 

சித்தர் பீடத்தினர் குளத்தை மறைத்து செட் அமைத்துள்ளதால் மேற்படி பணிகளுக்கும் கோயிலின் புனிதத்திற்கும் இழுக்கு நேர்ந்துள்ளது .இது பற்றி ஆதி பராசக்தி சித்தர் தலைமை பீடத்தில் புகார் கூறினோம். திருவாரூர் கிளையில் கூறி அந்த மன்ற நடவடிக்கைகளை கேட்டு மேல் நடவடிக்கை 
எடுத்து சிவனடியார் மனம் நோகாமல் பார்த்துக் கொள்வதாக கூறினார்கள் இது வரை எதுவும் நடக்கவில்லை.

இதன் மூலம் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மேல்மருவத்தூர் சித்தர் பீடத்திற்கும் தெரிவிப்பது என்னவென்றால் திருக்குளம் செல்லும் வழியை நீக்காவிட்டால் முதலில் சிவனடியார்களை திரட்டி உண்ணாவிரதமும்
திருமுறை விண்ணப்பமும் திருவாசக  முற்றோதலும் சாத்வீக முறையிலும் பின்
நீதி மன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்

ஆன்மீக அன்பர்கள் ஒன்றுகொன்று மாறுபட்டு நிற்பது நல்லதல்ல என உணர்வார்கள் என நம்புவோம்.நாம் தொலைபேசியில் தலைமை 
கோவையில் இருந்துகொண்டு நன்னிலம் கோயிலுக்காக ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டார்கள்.எங்களுக்கு 274 பாடல் பெற்ற ஆலயங்களும் பாதுகாக்கப்பட்டு இன்னும் பல தலைமுறைகளுக்கு வேண்டும் என்ற நோக்கமே என்று கூறினோம்.சித்தர் பீட எண்
    044-27529096)


                          போற்றி ஓம் நமசிவாய



                                  திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment