rudrateswarar

rudrateswarar

Saturday, June 1, 2013

சோமாசிமாற நாயனார் புராணம்

                                  ஓம் நமசிவாய 


சோமாசிமாற நாயனார் புராணம்

                       “அன்பரான்  சோமாசி மாறனுக்கும் அடியேன்” 


அவதார தலம் -அம்பர் 
முக்தி தலம்     -திருவாரூர்

குருபூசை திருநட்சத்திரம்- வைகாசிஆயில்யம்   (13-06-2013 வியாழக்கிழமை)




சோமாசிமாற நாயனார் சோழநாட்டில் திருவம்பர் என்னும் ஊரிலே அந்தணர் குலத்திலே தோன்றினார். சிவபக்தி உடையவராய்ச் சிவனடியார்களுக்குத் திருவமுதளித்து ஆதரிக்கும் சிறந்த பண்புடையவராக அவர் விளங்கினார் உமையொரு பாகனாகிய சிவபெருமானையே முதல்வன் எனக்கொண்டு போற்றும் வேள்விகள் பலவற்றையும் உலகங்கள் ஏழும் உவப்ப விதிப்படி செய்தார்.

எத்தன் மையராயினும் ஈசனுக்கன்ப ரென்றால் 
அத்தன் மையர் தாம் நமையாள் பவர் என்று கொள்வார் 
சித்தந் தெளியச் சிவன் அஞ்செழுத் தோதும் வாய்மை 
நித்தம் நியமம் எனப்போற்றும் நெறியில் நின்றார் 

ஈசனுக்கு அன்பர் என்போர் எக்குணம், எக்குலம் எத்தன்மையராயினும் அவர்கள் தன்னை ஆளாகவுடையார்கள் என்று உறுதியாகத் தெளிந்திருந்தார்
சிவன் அஞ்செழுத்தும் சித்தந் தெளிய ஓதும் நித்த நியமம் உடையவராயிருந்தார்  இறைவனை எப்போதும் நினைந்து  நினைந்து 
உருகும் இவர் தம்பிரான் தோழராகிய நம்பியாரூரருடைய பெருமையைக்கேட்டு அவர் மீது அளவற்ற அன்பு கொண்டார் .  சீரும், திருவும் பொலியும் திருவாரூரினை அடைந்து தம்பிரான் தோழராகிய வன்தொண்டர்க்கு அன்பினால் நெருங்கிய நண்பரானார்  திருவாரூரில் ஐம்புலச் சேட்டைகளையும், காமம் முதலிய அறுவகைக் குற்றங்களையும் நீக்கிய இவர் திருவாரூரில் தங்கி ஆரூரர் தம் திருவடிகளைப் பணிந்து போற்றி குருவருளும்
திருவருளும் பெற்று சிறப்பினால் என்றும் நின்று நிலவும் சிவலோகத்தில் இன்பம் உற்றார்.


                            போற்றி ஓம் நமசிவாய


                                  திருச்சிற்றம்பலம் 



No comments:

Post a Comment