rudrateswarar

rudrateswarar

Tuesday, June 11, 2013

கோயில்களில் அவலங்கள்

                                      ஓம் நமசிவாய

கோயில்களில்  அவலங்கள்


கோயில்களில் சமீப காலங்களில் விசேட நாட்களிலும் காலசந்தி பூசையின்போதும் பிரதோஷ நேரங்களிலும் சுவாமிக்கு செய்யும் அபிஷேக பூசையின் போது கோயிலில் அர்ச்சகர் மந்திரங்களை தன் வாயால் சொல்வ தில்லை அதற்கு பதிலாக சி.டி. பிளேயர் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்கிறது பூசை செய்யும் அர்ச்சகர் எந்திரமாக கிரியை செய்கிறார். நம் கொடுமையை இறைவனிடம் சொல்ல சென்றால் அங்கு நடக்கும் இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது. 

1.பிரதோஷ நேரத்தில் சிவபுராணம் திருமுறை படித்தால் நல்லது என்று மக்கள் உணர்ந்து பாராயணம் செய்கிறார்கள் .அதற்கு இடையூறாக அந்த நேரத்தில் யாருக்கும் புரியாமல் உச்சஸ்தாதியில் ஸ்பீக்கர் அலறுகிறது அதனால் யாருக்கு என்ன லாபம்?. கடவுள் யாருக்கு செவி சாய்ப்பார் ? இறையுணர்வு இப்படியா செல்ல வேண்டும் இது பிரதோஷம் தோறும் அடியேன் செல்லும் அவினாசி ஆலயத்தில் தான் இந்த அவலம்

2.கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு நாகநாத சுவாமி ஆலயத்தில் கேதுவுக்கு தனி சந்நிதி உள்ளது அது கேது பரிகார தலம் என்று அடையாளம் காணப்படுகிறது பாலபிசேகம்
செய்தால் நல்லது என்று பக்தர்கள் நிறைய பேர் செய்கிறார்கள் அங்கும் அந்த நேரத்தில் இந்த மைக் செட் தான் ஒலிக்கும்.அபிசேகம் செய்யும் பொருட்கள் தீர்ந்துவிட்டால் மைக்செட்டை  பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள் .மந்திரம் எந்த அளவு பாடியிருந்தாலும் அதோடு  நிறுத்தி விடுவார்கள் .ஏனெனில் அவர்களுக்கும் அது புரியாது. யாரோ சொல்ல அதை ரெகார்ட் பண்ணியது தானே .இன்னும் கொடுமை பரம்பொருள் சிவபெருமான் அம்பாள் சந்நிதியில் திருநீறு குங்குமம் கொடுக்க   யாரும் இருக்கமாட்டார்கள். என்ன அவலம் ?

3.திருப்பாம்புரம் பாடல் பெற்ற தலம் இங்கு ராகு கேது ஏக சரீரம் கொண்டு இறைவரை பூசித்து பேரு பெற்ற தலம் .இங்கு பரிகாரம் செய்ய பூசைப்பொருட்கள் வாங்க ஒரே கடை மட்டும் உள்ளது அந்த கடையில் 2 தேங்காய் 4 பழம் சிறிது பூ கை அகலம் இரு துணி இதன் விலை 120 ரூபாய் துணி இல்லாமலோ தேங்காய் இல்லாமலோ தர மாட்டார்கள் இதற்கு கோவில் அர்ச்சகர்களும் கூட்டு. அவர்கள் அதை வாங்கி வரவேண்டும் என்கிறார்கள் .பல தல யாத்திரை செய்யும் பக்தர்கள் எப்படி செலவு செய்ய முடியும் . ஆசையாக சிவனுக்கு ஒரு தேங்காய் பழம் படைத்து வழிபட யார் தடை? என்ன கேவலம் இது.எல்லோரும் எதற்காக அந்த பரிகார செட் முழுதும் வாங்கவேண்டும் .கேட்க ஆளில்லையா?

4. திருவிடை மருதூர் ஆலயத்தில் பிரம்மஹத்தி தோஷ பரிகாரம் செய்வார்கள் அதற்கு ஆலய கட்டணம் 650 .அர்ச்சகர் தனியே 100 பெறுவார் ஆனால் குறைந்தது (108 போற்றி ) அஸ்டோத்திரம் கூட சொல்வதில்லை.எப்படி தோஷம் நிவர்த்தி ஆகும் .வரகுண பாண்டியனுக்கு இது போல் பரிகாரம் செய்து பிரம்மஹத்தி நீங்கவில்லை இறைவனின் சக்தியாலும் கருணையாலும் விலகியது என்பதே வரலாறு 

5. ஆலங்குடி ஒரு அற்புத ஆலயம் அங்கு ஒவ்வொரு வியாழன் தோறும் கூட்டம்அலை மோதும் .அங்கு சகஸ்ரநாமம் எனும் 1008 அர்ச்சனைக்கு டோக்கன் பெற்று சென்றால் 108 அர்ச்சனை அதாவது அஸ்டோத்திரம் கூட சொல்வதில்லை சகஸ்ரநாம அர்ச்சனைக்கு 300 ரூபாய் டோக்கன் பெற்றும் இது தான் நிலைமை .பொருள் ஈட்டும் ஆர்வம் உள்ளது அதற்கு மினிமம் உழைக்க வேண்டும் என்ற ஒரு சிறிய தன்மானம் கூட இல்லை. அடியேன் செயல் அலுவலர் முதல் எல்லோரிடமும் புகார் சொல்லியும் சரியாக வில்லை .நாம் கேட்பது உங்களை யாரும் கட்டாயப்படுத்தி அந்த வேலை செய்ய சொல்வ தில்லை நீங்கள் விரும்பி தானே அந்த வேலையில் தொடர்கிறீர்கள்  அப்படி இருக்க இறைவனை தீண்டி பூசை செய்யும் நீங்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டாமா? ஏன் இந்த அவலம் ?

6.சூரியனார் கோயிலில் மற்றொரு வன்முறை அங்கு ஒன்பது கோள்களுக்கும் பூசை செய்ய ஒன்பது தேங்காய் தேங்காய் பழம் எல்லாம் வாங்க 100 ரூபாய் .வஸ்திரம் சாத்த தனி இரசீது அர்ச்சனை செய்ய இரசீது .ஆனால் அதுபோக குருக்களுக்கு தனியே 50 ம் அந்த பூசை தட்டு ஒவ்வொரு சந்நிதிக்கும் அவ்வாலய வாத்திய காரர் எடுத்து வருவார் அவருக்கு 25 கொடுக்க வேண்டும் .அங்கு செல்பவனே வாழ்க்கை நொந்து சீரழிந்து பரிகாரம் செய்ய செல்கிறான்
அவன் பட்ஜெட் போட்டு கோயிலுக்கு வந்தால் அவன் கதி என்ன ? 

அடியேன் நிறைய அர்ச்சகர்களிடத்தில் கேட்ட போது எங்களுக்கு வழங்கும் சம்பளம் குறைவு 
என்கிறார்கள் .குறைவான சம்பளத்தையும் நீங்கள் ஒத்துக்கொண்டு தானே வேலை செய்கிறீர்கள் .யாரும் உங்களை மிரட்டி வேலை வாங்கவில்லையே .தினம் 30 பேர் தட்டில் 10 ரூபாய் இட்டால் கூட 300 ரூபாய் கிடைக்கிறதே .நீங்களெல்லாம் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் வேலை செய்கிறீர்கள் தினம் உங்களுக்கு குறைந்தது 500 ரூபாய் கிட்டும் . அவளிவணல்லூர், அரிதுவாரமங்கலம் , திருஆப்பாடி,திருசேய்ஞலூர் போன்ற கோயில் அர்ச்சகர்கள் எப்படி இருப்பார்கள் என்று சிறிது நினைத்து பாருங்கள் .எந்த வேலையும் ரசித்து செய்தால் தான் ருசிக்கும் .ஆலயம் சிறப்பது என்பது அங்கு பணி புரியும் அர்ச்சகர் கையில் மட்டுமே உள்ளது .உதாரணம் திருநீலக்குடி திருச்சோற்றுத்துறை,திருசிறுகுடி,திருமருகல்    போன்றவை 

பூசை மணியை இடுப்பிற்கு கீழும் நெய்வேத்தியத்தை நெஞ்சுக்கு கீழும் கொண்டு செல்ல கூடாது ஆனால் அப்படியா செய்கிறார்கள் .அநியாயம் அக்கிரமம் . ஆச்சாரம் அனுஷ்டானம் கடைபிடிக்க வேண்டியவர்கள் அதை செய்வதில்லை . இதற்கு என்ன தீர்வு என்று இதை படிக்கும் அன்பர்கள் கருத்து சொல்லுங்கள் .மீதம் உள்ள ஆலயங்களையும் சமயக்கொள்கைகளையும் 
காப்பாற்றுவோம் 


                              போற்றி ஓம் நமசிவாய 


                                   திருச்சிற்றம்பலம்       

2 comments:

  1. SIVA ALAYAM KALIL SATTAI ANINTHU SELVATHU MURAIYA....?
    THIRU CHENDURURIL SIVA POOJA SEIYA IRUKKUM KOLATHIL IRRUKKUM AALAYATHINUL KOODA NAM SATTAI ANIYAMAL SELKINROM...
    ATHUPOL IRUKKUM KURUVAIRU ALAYATHINULUM AVVARU IRRUKUM POTHO,
    EAN INTHA MURANPADU
    AATHINA KURUMARKAL & SIVASARIKAL ENNA SARIYAGA NADAI MURAI KADAI PIDIKKA VILLAY...
    IPPAKKU
    AVAN ARULALAY AVAN THAL VANKKI

    ReplyDelete