rudrateswarar

rudrateswarar

Saturday, June 15, 2013

திருஞானசம்பந்தர் - முத்துப்பந்தல் பெற்றது

                                                          ஓம் நமசிவாய


திருஞானசம்பந்தர் - முத்துப்பந்தல் பெற்றது


தொண்டர்குழாம் ஆர்ப்பெடுப்பச்
          சுருதிகளின் பெருந்துழனி
எண்திசையும் நிறைந்தோங்க
          எழுந்தருளும் பிள்ளையார்
வெண்தரளப் பந்தர் நிழல்
           மீதணையத் திருமன்றில்
அண்டர்பிரான் எடுத்ததிரு
          வடிநீழல் எனஅமர்ந்தார்


திருஞானசம்பந்தர் திருச்செங்குன்றூரிலிருந்து புறப்பட்டுப் பாண்டிக்கொடுமுடி வெஞ்சமாக் கூடல் கருவூர் ஆனிலை முதலிய தலங்களை பணிந்து சோழ நாடு மீண்டு திருச்சிராப்பள்ளி முதலிய காவிரித் தென்கரைத் தலங்களை வணங்கிக் கொண்டு அடியார்கூட்டத்தொடு  திருவலஞ்சுழி வந்தடைந்தார் அது ஒரு இளவேனில் பருவம் தொடங்கிய காலம் . திருவலஞ்சுழி இறைவனை வணங்கிப் பழையாறை மேற்றளியையும் திருச்சத்தி முற்றத்தையும் பணிந்து நண்பகல் பொழுதில் பட்டீச்சுரம் வந்தடைந்தார்.சம்பந்தர் சுவாமிகள் வெய்யிலின் வெம்மையில் வாடி வருவதை கண்ட ஈசன் சிவபூதங்களை வானத்தில் மறைந்து நின்று முத்துப்பந்தல் குடை பிடித்து வருமாறு அருளினார் .பட்டீசுரர் அளித்த முத்துப்பந்தரை ஏந்தியவாறு சிவகணங்கள் இது சிவபெருமான் அளித்தது எனக் கூறி ஞானசம்பந்தரின் சிவிகையின் மேல் ஏந்தி நிழல் செய்தன. அடியவர் வானினின்றிழியும் அப்பந்தரை ஏந்தியவர்களாய்த் தண்ணிழலில் ஞானசம்பந்தரை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர். 

முத்துப்பந்தல் நிழலில் ஞானசம்பந்தர் வரும் அழகை பார்க்க திருவுள்ளம் பற்றிய இறைவர் நந்தி எம்பெருமானை சற்று ஒதுங்கி இருக்க பணித்தார் .ஞானசம்பந்தர் இறைவனது தடங் கருணையை வியந்தவாறு பாடல் மறை எனும் பதிகம் பாடிப் பட்டீச்சுரரை வழிபட்டு மகிழ்ந்தார்.


இன்றும் பட்டீச்சரம் செல்லும் அன்பர்கள் நந்தி விலகி நிற்பதை காணலாம் .இறைவர் முத்துப் பந்தல் அளித்த நிகழ்வு ஆனி  முதல் நாளில் பட்டீஸ்வரத்தில் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது 


                             போற்றி ஓம் நமசிவாய 

                                  திருச்சிற்றம்பலம் 



No comments:

Post a Comment