rudrateswarar

rudrateswarar

Tuesday, April 9, 2013

சைவர்களின் திருக்குறள் 1431

                                             ஓம் நமசிவாய


சைவர்களின் திருக்குறள்  1431


திருவள்ளுவர் சைவ சித்தாந்த கொள்கை கொண்ட பதி பசு பாசம் என்கின்ற முப்பொருள் உண்மையின் அடிப்படையிலே யே உலகநீதிகளையும் அறங்களையும்  நமக்கு அருளியுள்ளார் 

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் சைவ சித்தாந்த கருத்துக்களை உள்ளடக்கி உள்ளதால் அவர் சைவ புலவர் ஆவார்

சைவ சமயத்தைப் பொருத்தவரை குருபூசை என்பது நாயன்மார்களுக்கும் ஆச்சார்யர்க ளுக்கும் மட்டுமே  நடத்தப்பெறும். சித்தர்களுக்கு குருபூசை என்பது  அவர் எவ்வளவு சித்தி பெற்றிருந்தாலும் சைவத்தில் கிடையாது

அப்படி குருபூசை செய்ய துவங்கிய நாள் முதல் திருவள்ளுவர் குருபூசை மாசி உத்திரம் நட்சத்திரத்தில் அதாவது அவர் முக்தி பெற்ற நாளில் கொண்டாடப்படுகிறது 

அவருடைய திருக்குறள் அரங்கேற்றத்துக்கு முதலில் முன் மொழிந்தவரே சோமசுந்தர கடவுள் தான். திருவள்ளுவமாலை எனும் நூலில் ஒவ்வொரு புலவர்களும் திருக்குறளின் சிறப்பை பாராட்டி முன்னுரை வழங்கியிருப்பார்கள்  அதில் முதலாவதாக அசரீரி என்றிருக்கும் அது சாட்சாத் சிவபெருமானே தான்.அது 
திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு
உருத்தகு நற்பலகை ஒக்க - இருக்க
உருத்திர சன்மர் எனஉரைத்து வானில்
ஒருக்கஓ என்றதுஓர் சொல்

அதனாலேயே திருவள்ளுவர் சைவப்புலவர் 
அப்படி திருவள்ளுவதேவ நாயனார்  அறம் பொருள் இன்பம் என முப்பால்களை மட்டும் பாடினார் ஆனால் வீடுபேறு பற்றி மட்டும்  எழுதவில்லை

 சைவ சாத்திர ஆசிரியரில் ஒருவரான உமாபதிசிவம் அவர்கள்  திருவருட்பயன் நூலில் 101 குறட்பாக்கள் அருளியுள்ளார் வீடுபேறு எனும் முக்திக்கு  வழிகாட்டும் ஞானநூல் திருவருட்பயன்.பதினான்கு சாத்திர நூல்களில் ஒன்றாக உள்ளது 

 உமாபதிசிவம் அவர்கள் பின்னாளில் வீடு  பேற்றை குறட்பாக்களால்  பாடவேண்டும்  என்றே திருவள்ளுவர் விட்டு வைத்திருக்கலாம் 

ஆக திருவள்ளுவர்  அறத்துப்பால் -380 குறள்கள் , பொருட்பால் -700 குறள்கள் , இன்பத்துப்பால் -250 குறள்கள்  உமாபதிசிவம் அவர்களின் வீட்டுப்பால் -101 என மொத்தம் 1431 குறள்களை அனைத்து சைவர்களும்  கற்று பயனுற அம்மையப்பர் நம்மை ஆட்டுவிப்பாராக


                                    


                                    போற்றி ஓம் நமசிவாய


                                                



                            திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment