rudrateswarar

rudrateswarar

Thursday, April 11, 2013

ஐந்தெழுத்தின் மேன்மை - 4

                                                           ஓம் நமசிவாய



ஐந்தெழுத்தின் மேன்மை- 4


திருமுறை.8 பதிகம் 26 அதிசயபத்து பாடல் 6 


எண்ணி லேன்திரு நாம அஞ் செழுத்தும்
            என்ஏழைமை யதனாலே
நண்ணி லேன்கலை ஞானிகள் தம்மொடு
             நல்வினை நயவாதே
மண்ணி லேபிறந் திறந்துமண் ணாவதற்
            கொருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரிற்கூட்டிய
             அதிசயங் கண்டாமே.



இறைவனது திருநாமமாகிய ஐந்தெழுத்தை என் அறியாமையால் நினைக்கவில்லை  அடியார்களோடு சேர்ந்திருக்கவில்லை நற்கருமங்களை விரும்பாமல் இம்மண்ணில் பிறந்து இறந்து மண்ணாவதற்கு இசைகின்ற அடியேனை, பெரியோனாகிய சிவபெருமான் ஆண்டருளித் தன் அடியாரோடு சேர்த்த அதிசயத்தைக் கண்டோம்.




திருமுறை.11 பதிகம் 9 பாடல் 39,40

       
கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி


வாயிலே வைக்கு மளவில் மருந்தாகித்
தீய பிறவிநோய் தீர்க்குமே தூயவே
கம்பெருமா தேவியொடு மன்னு கயிலாயத்து
எம்பெருமான் ஓர் அஞ் செழுத்து.
 


தூய்மையுடைய திருவேகம்பரே தேவியோடு நிலை பெற்றிருக்கும் கயிலைப் பெருமானே  திரு ஐந்தெழுத்தை உபதேசித்த அளவில் அது மருந்தாகி கொடிய பிறவி நோயைத் தீர்க்கும்




அஞ்செழுத்தும் கண்டீர் அருமறைகள் ஆவனவும் 

அஞ்செழுத்தும் கற்க அணித்தாகும்-நஞ்சவித்த 
காளத்தியார் யார்க்கும் காண்டற்கு அரிதாய்ப்போய்
நீளத்தே நின்ற நெறி



விடத்தின் வேகத்தைத் தணித்த 
திருக்காளத்தியில் எம்பெருமானைக் காணமுடியாத அளவு நீளத்தே நின்ற நெறி  அஞ்செழுத்தும் கற்க அணித்தாகும்  அஞ்செழுத்தே அருமறைகளாகும்  என்பதை காணுங்கள்  





திருமுறை.11. பதிகம் 28 பாடல் 14

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை


ஒராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும்
நேராதே நீரும் நிரப்பாதே- யாராயோ
எண்ணுவார் உள்ளத்து  இடைமருதர் பொற்பாதம்
நண்ணுவாம் என்னுமது நாம்.


ஐந்தெழுத்தை தியானிக்காமலும்  பச்சிலையை நினைக்காமலும் மஞ்சன நீரைக் கொண்டுவந்து  நிரப்பாமலும்  இருந்து விட்டால் இறைவன் அருள் கிடைக்குமா  திருவிடைமருதர் பொற்பாதத்தை  யார்  நண்ணுவார்களோ அவர்களே பதம்  பெறுவார்   வேறு தெய்வங்களை  எண்ணிப்பயனில்லை



                                      
                             திருச்சிற்றம்பலம்



                         போற்றி ஓம் நமசிவாய


சிவனடிமைவேலுசாமி                               

No comments:

Post a Comment