rudrateswarar

rudrateswarar

Wednesday, April 10, 2013

முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்

                                       ஓம் நமசிவாய



முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்

      
                   "முப்போதும்  திருமேனி தீண்டுவார்க் அடியேன் "


குருபூசை  - பங்குனி கடைசி நாள் 

13-04-2013  சனிக்கிழமை


தெரிந்துணரின் முப்போதுஞ் செல்காலம் நிகழ்காலம்
வருங்கால மானவற்றின் வழிவழியே திருத் தொண்டின்
விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அப்
பெருந்தகையார் குழப்பெருமையாம் புகழும் பெற்றியதோ?   -சேக்கிழார்


ஆதி சைவர்கள் அளவற்ற அன்புடையவர்கள் 
எப்போதும் ஈசனை மேலும் மேலும் விருப்புடன் சிவாகம நெறி வழுவாது வழிபடுவார்கள்  மூன்று காலங்களிலும் முப்போதும் திருமேனி தீண்டிப் பூசனை புரிவார்கள் வழி வழியாக பூசிக்கும் உரிமை பெற்ற அவர்களுடைய குலப்பெருமை புகழும்  தரமன்று 

சிருட்டி காலத்தில் அநாதி சைவராகிய சதாசிவமூர்த்தியின் ஈசானம் தத்புருடம் அகோரம் வாமதேவம் சத்யோசாதம் என்ற ஐந்து முகங்களில் 
இருந்து கௌசிகர் காசிபர் பாரத்துவாசர் கௌதமர் அகத்தியர் என்ற ஐந்து முனிவர்கள் அவதரித்தார்கள்   அம்மரபினர் சிவவேதியர் என்றும் ஆதிசைவர் என்றும் சொல்லப்பெறுவர் 

இவர்களுள்ளே சமயதீட்சை விசேட தீட்சை நிர்வாணதீட்சை  ஆச்சார்ய அபிசேகம் பெற்றவர்களே சிறந்தவர்கள் பரார்த்த பூசை செய்ய தகுதி பெற்றவர்கள் அவர்களே .
ஆகவே வேதாகமங்களை ஓதி ஆலயங்களில் 
சிவலிங்கப் பெருமானை முப்போதும் தீண்டிப்பூசிக்க எப்போதும் உரியவர்கள் 


பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றனை யர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாமென்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே                   -திருமந்திரம்


முப்போதும் திருமேனி தீண்டுவாரை வணங்கி போற்றுவோம்



                                                           போற்றி ஓம் நமசிவாய


                                                                திருச்சிற்றம்பலம்



 

1 comment:

  1. பரார்த்த பூஜையை எவரும் செய்யலாம் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. தானே கட்டி அமைத்த கோவிலாக இருந்தால், சரி. என்ன வேண்டுமானாலும் செய்து கொண்டு போகட்டும் என்று இருந்துவிடலாம்.

    சிலரோ ஏற்கனவே ஆகம முறை படி பூஜைகள் நடைபெறும் சைவத் திருக்கோவில்களில் சிவவேதியர்களைத் தவிர்த்து மற்றவர்களை அர்ச்சகர்களாய் அமர்த்த திட்டம் போடுகின்றனர்.

    ReplyDelete