rudrateswarar

rudrateswarar

Monday, April 8, 2013

சுந்தரரும் கொல்லம் ஆண்டும்

                                                              ஓம் நமசிவாய


சுந்தரரும் கொல்லம் ஆண்டும் 


சுந்தரர் தனது நண்பரான சேரமான் பெருமானுடன் 
திரு அஞ்சைக்களத்தில் இருந்தார் ஒரு நாள் சேரர்பெருமான் திருமஞ்சனத் தொழிலில்  ஈடுபட்டிருந்தார்  சுந்தரர் பெருமான் திருவஞ்சைகளத்து  இறைவனை வணங்கி கொண்டிருந்தார்  இப்பூவுலக வாழ்க்கையில் 
வெறுப்புற்று திருக்கயிலை செல்ல எண்ணினார் இறைவனை இறைஞ்சி அப்போது தலைக்கு தலை மாலை என்னும் பதிகம் பாடினார் அப்பதிகத்தில் 
8ஆவது பாடலில் 

வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்
           விளங்குங்குழைக் காதுடைவே தியனே
இறுத்தாய்இலங் கைக்கிறை யாயவனைத்
          தலைபத்தொடு தோள்பல இற்று விழக்
கறுத்தாய்கடல் நஞ்சமு துண்டுகண்டங்
         கடுகப்பிர மன்தலை யைந்திலும்ஒன்
 அறுத்தாய்கட லங்கரை மேல் மகோதை
         அணியார்பொழில் அஞ்சைக்களத் தப்பனே.

என்று பாடினார்

சுந்தரருக்கு இரங்கி திருக்கயிலையில் சிவபெருமான்   மால் அயன் உள்ளிட்ட தேவர்களை நோக்கி  நமது ஆரூரனை அயிராவணம் என்னும் வெள்ளை யானை மீது ஏற்றி அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டு அருளினார் 
வானவரும் திருமாலும் பிரமனும் இந்திரனும் பரமனைப் பணிந்து திருவஞ்சைக்களம் சென்று திருவாயிலின் முன்னின்று சுந்தரரை தொழுது நின்று எம்பிரான் ஆணையை அறிவித்தனர்
ஆரூரர் வானவர் பூ மழை பொழிய வெள்ளை  யானை அயிராவனத்தின் மீதேறி செல்லும் போது தோழர் சேரர் பெருமானை நினைத்தார் . சேரர்பெருமான் தம்பிரான் தோழர் செயலறிந்து 
அருகில் இருந்த குதிரையின் காதில் ஐந்தெழுத்து ஓதவும் அது சுந்தரர் பெருமானை வலம்வந்து  முன்னே சென்றது .சேரருடைய  படைவீரர்கள் 
தங்கள்மன்னன் திருவுருவம் மறைந்ததும் அவர்
மேல் உள்ள  அன்பினால்  வாளால்  தம்முடலை வீழ்த்தி வீரவுடல் கொண்டு நாயன்மார் இருவரையும் தொழுது முன்னே சென்றனர் 
திருக்கயிலை செல்லும் வழியில் ஆரூரர் திருப்பதிகம் பாடினார் 

தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை உத்தமனே

இந்திரன் மால்பிரமன் னெழிலார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்தயானை யருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான் நொடித்தான்மலை உத்தமனே

இப்பதிகத்தை வருணன் கொண்டுவந்து அஞ்சைக்களத்தில் சேர்ப்பித்தான் தன்
நண்பரோடு திருக்கயிலையில் எம்பெருமான் 
திருவடிகளை அடைந்து அணுக்கத்தொண்டரானார் 
அவர் கயிலைப் பதி சென்ற அந்த நன்னாள் ஆடி மாதம் கடைசியில் சுவாதி திருநட்சத்திரத்தில். சேரமான் பெருமானுக்கும் குரு பூசை அந்த 
நன்னாளில் தான் .

கேரளத்தில்கொல்லம் ஆண்டு (திருவள்ளுவர் 
ஆண்டு என்பது போல)என்ற சகாப்தம் தோன்றியது 
அந்நாளில்தான். கி .பி 825

சுந்தரர் கயிலை சென்று 1188 ஆண்டுகள் ஆகிறது 

சென்ற பதிவில் காலக்கணக்கு தலைப்பில் 
நாம் சிந்தித்த கால அளவை  பார்த்தால் சுந்தரர் 
சிவபெருமானை பிரிந்த தனது 18ஆண்டு கால பூலோக வாழ்வுக்கு கயிலையில் அரை நாள் கூட  இருக்காது  போலும் .அரைநாள் பிரிவிலேயே சுந்தரரை அழைத்துக்கொண்டார் 

கொல்லம் என்ற கேரள ஆண்டுக்கணக்கு சுந்தரரும் சேரமான் பெருமானும் கயிலை சென்ற நாளில் இருந்து தொடங்கியது


 

No comments:

Post a Comment