rudrateswarar

rudrateswarar

Wednesday, April 10, 2013

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்

                                                               ஓம் நமசிவாய



சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்     
                                                       புராணம்


              "சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் "


குரு பூசை  - பங்குனி கடைசி நாள் 

13-04-2013 சனிக்கிழமை 


காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதங்கடந்து 
பூரண மெய்ப் பரஞ் சோதி பொலிந்திலங்கு நாதாந்தத் 
தாரணையாற் சிவத்தடைந்த சித்தத்தார் தனிமன்றுள் 
ஆரண காரணக் கூத்தர் அடித் தொண்டின் வழியடைந்தார் 


பிரமன் முதலான காரணக் கடவுளர் ஐவர்க்கும் 
உரிய தானங்களைக் கடந்து சென்றுஅப்பால் 
நிறைவுடையதாய் உள்பொருளாய் சுயபேரொளியாய் 
உள்ளசிவஞான ஒளி வீசி விளங்கும் நாதாந்தத்தில் 
உள்ளத்தைச் செலுத்துதலால்சிவனிடத்தில் 
நிறுத்திய சித்தத்தை உடைமையால் சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார் என்பவர் ஒப்பில்லாத 
அம்பலக்கூத்தரின் திருவடித்தொண்டின் வழியில் 
நின்று அவரை அடைந்தவர்கள் ஆவர் 
 
 
 காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் பதம்
 
நான்முகன்   -படைத்தல்    -நிவர்த்தி கலை 
திருமால்        -காத்தல்         - பிரதிட்டை கலை  
உருத்திரர்      -அழித்தல்    -வித்தை கலை 
மகேசுவரர்    -மறைத்தல் -சாந்தி கலை 
சதாசிவர்       - அருளுதல் -சாந்தி அதீத கலை
 
இந்த ஐந்து பதங்களையும் கடந்து சிவத்தின்பால் 
திருவுள்ளம் வைத்தவர்கள் மேலானவர்கள்  அவர்களை தொழுது நாமும் அந்த நிலை  எட்ட  ஈசன் அருள் புரிய வேண்டிகொள்வோமாக 
 

                                                       போற்றி ஓம் நமசிவாய 


                                                             திருச்சிற்றம்பலம்   

No comments:

Post a Comment