ஓம் நமசிவாய
பத்தராய்ப் பணிவார் புராணம்
"பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் "
குருபூசை - பங்குனி கடைசி நாள்
(13-04-2013) சனிக்கிழமை
பத்தராய்ப் பணிவார்கள் என்போர் சிவனடியார்கள். எல்லையில்லாத அன்புடன் எங்கும் யாரும் சிவார்ச்சனை புரியக் கண்டவுடன் கண்ணும் கருத்தும் குளிர்ந்து இன்புறுவார்கள் . சிவனையும் சிவனடியார்களையும்ஆராக்காதலுடன்
வழிபடுவார்கள் .திருமாலும் பிரமனும் பெற்ற பேற்றை
விட பெரும்பேறு பெற தகுதியானவர்கள் . உடலால் செய்யும் எல்லாப் பணிகளையும்
சிவார்ப்பணமாகவே கருதி புண்ணியத்தையும்
புகழையும் விரும்பாமல் செய்வார்கள் பிறவாநெறி பெற்றவர்கள் சிவகதை கேட்டு சிந்தை
மகிழ்வார்கள் சிவபெருமானுடைய செம்மலர் பாதம் சேர்வதற்கு உரியவர்கள்
தாரைதாரையாககண்ணீர் பெருகி அதனால்
திருநீறழிய மயிர் சிலிர்க்க உடல் நடுங்க பரமனைப்பணிந்து இன்ப மேலீட்டால் நா தழும்பி அன்பு செய்வார்கள்
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடு மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை
குன்றாத உணர்வுடையார் தொண்டராம் குணமிக்கார்
எப்போதும் இடையறாது காளைக் கொடியுடைய ஈசனையே நினைக்கும் திருவுடையவர்கள்
இறைவனை அடைய எத்தனையோ வழி இருந்தாலும் பக்தி நெறியே எளிமையான நெறி
நாமும்ஒவ்வொருவரும் சிவபத்தி செய்து பிறப்பென்னும் பேதைமை நீங்கிச்
சிறப்பென்னும் செம்பொருளை(சிவபெருமான் ) அடைவோமாக.
போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment