rudrateswarar

rudrateswarar

Wednesday, April 10, 2013

திருவாரூர்ப் பிறந்தார் புராணம்

                                                             ஓம் நமசிவாய


திருவாரூர்ப் பிறந்தார் புராணம்


            "திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்"  

குரு பூசை   -பங்குனி கடைசி நாள் 

13-04-2013  சனிக்கிழமை 


அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்றபிரான்
மருவாருங் குழலுமையாள் மணவாளன் மகிழ்ந்தருளும்
திருவாரூர்ப் பிறந்தார்கள் திருத்தொண்டு தெரிந்துணர
ஒருவாயால் சிறியேனால் உரைக்கலாந் தகைமையதோ

திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திருக்கணத்தார்
பெருக்கிய சீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள் ஆதலினால்
தருக்கிய ஐம்பொறி அடக்கி மற்றவர் தம் தாள் வணங்கி
ஒருக்கிய நெஞ்சுடையவர்க்கே அணித்தாகும் உயர்நெறியே


சேக்கிழார் பெருமான் அருவமாகியும் உருவமாகியும்  அனைத்துப்பொருள்களாகியும் உமைஅம்மை கணவருமான இறைவர் மகிழ்ந்து  வீற்றிருக்கும் திருவாரூரில் பிறந்தவர்களின் தொண்டையும் பெருமையையும் ஒரு வாயால் உரைக்க முடியுமோ என்று உரைக்கின்றார் 

 மிகச் சிறப்புடைய திருக்கயிலையில் உள்ள சிவ கணங்களே  உலகை  உய்விக்கும்  பொருட்டு  சிறப்புமிக்க  திருவாரூரில் பிறந்தார்கள்.  ஆகவே 
அவர்களின் பெருமை அளவிடற்கரியது 

ஐம்புலன்களின் செருக்கடக்கி அவர்களின் 
திருவடிகளை வணங்கி ஒன்றித்த உள்ளம் பெற்றவர்களுக்கே உயர்நெறியானது  அருகில் உள்ளது என்று சேக்கிழார் உரைக்கின்றார் 

ஒருமுறை நமிநந்தியடிகள் நாயனார் திருவாரூரில் உள்ள சிவமூர்த்தி  மணலி என்னும்  ஊரில்  எழுந்தருளியமையால்  தாமும் உடன் சென்றார். விழாவில் இறைவரை வழிபட்டுத் தமது ஊருக்கு திரும்பினார்  விழாவில் பலரையும்  தீண்டிய 
காரணத்தால் குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைய எண்ணிப்புறக்கடையில் படுத்து உறங்கிவிட்டார் 

அன்றிரவு அவர் கனவில் எம்பெருமான் தோன்றி ஞான மறையோய்  ஆரூரில் பிறந்தார் எல்லாம்  நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய் என்று அருளிச் செய்தார்.
மறுநாள்நமிநந்தியடிகள் திருவாரூர் சென்றபோது 
அங்குள்ளார் அனைவரும் சிவகணங்களாய்  கண்டு களித்து வணங்கினார் 

திருவாரூருக்குஇதைவிட என்ன பெருமை வேண்டும் . திருத்தொண்டத் தொகை விளைந்த ஞான வயல் அது 
 திருவாரூர்ப்பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் 


                                                போற்றி ஓம் நமசிவாய 


                                                     திருச்சிற்றம்பலம்


 

No comments:

Post a Comment