ஓம் நமசிவாய
முழுநீறு பூசிய முனிவர் புராணம்
"முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் "
குரு பூசை நாள் -பங்குனி கடைசி நாள்
13-04-2013 சனிக்கிழமை
திருநீறு என்றால் வினைகளை நீராக்குவது என்று பொருள் உடல்பிணி உயிர்பிணி எல்லாவற்றையும் போக்கவல்லது
சிவபெருமான் அருளிச் செய்த சிவாகமங்களில் திருநீறு கற்பம் அநுகற்பம் உபகற்பம் என உரைக்கப்படும் இந்த மூன்று வகையான திருநீற்றையே அணியவேண்டும் . அகற்ப நீற்றினை அணியக்கூடாது விதிப்படி திருநீறு அணிவோர் காமம் முதலிய அறுபகை கழிய பெறுவார்கள்
முறைப்படி எடுத்த திருநீற்றை அகம் புறம் தூய்மையடையுமாறு இறைவன் திருமேனி முன்னும் குருவின் முன்னும் அக்கினி முன்னும் ஆற்றின் முன்னும் வழியிலும் அணியக்கூடாது
அருநோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில் என்று அப்பரும் திருவெண்ணீ றிடா மூடர் என்று அருணகிரியாரும் கவசத் திருநீறு என்று திருமூலரும் திருவாய் பொழிய சிவாயநம என்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீ பாதிரிபுலியூர் அரனே என்று அப்பரும் திருநீற்றின் மேன்மையை அருளியுள்ளார்கள் திருநீறு அணியும் பொழுது
ஐந்தெழுத்தைஓதி அணியவேண்டும்
திருநீறு திரிபுண்டரமாக தீட்சை பெற்றவர்களும் மற்றவர்கள் உத்தூளனமாகவும் அணியவேண்டும் நற்குலத்தில் பிறந்தோர் ,தர்மகுண சீலர்கள் உண்மைநெறி உணர்ந்தவர்கள் நீதிநெறி வழுவாதவர்கள் நித்தியமும் திருநீற்றை உடம்பு முழுதும் அணிந்து மும்மல நீக்கம் பெறுவார்கள்
அத்தகைய மேன்மை பொருந்திய திருநீறு அணிந்தவர்களை சிவமாக பாவித்து வணங்கவேண்டும்
போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment