ஓம் நமசிவாய
பரமனையே பாடுவார் புராணம்
"பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்"
குரு பூசை - பங்குனி கடைசி நாள்
(13-04-2013) சனிக்கிழமை
புரமூன்றுஞ் செற்றானைப் பூணாகம் அணிந்தானை
உரனில் வரும் ஒருபொருளை உலகனைத்தும் ஆனானைக்
கரணங்கள் காணாமல் கண்ணார்ந்து நிறைந்தானைப்
பரமனையே பாடுவார் தம்பெருமை பாடுவோம்
தென்றமிழும் வடகலையும் தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும் வள்ளலையே பொருளாக
ஒன்றிய மெய்யுணர்வோடும் உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புள் கானாப் பரமனையே பாடுவார்
திரிபுரம் எரித்தவரும் பாம்பை அணிந்தவரும் ஒப்பற்ற பொருளானவரும் அனைத்து உலகங்களையும் தன் மாயையால் உள்ளனவாய் ஆக்கியவரும் கருவிகாரணங்களால் காணப்படாத
வரும் அவற்றுள் நிலைத்து நின்று காட்டுபவருமான
பரமனையே பாடுபவரின் பெருமைகளைபாடுவோம்
பரமனையேபாடும் பரிசுடைய இவர்கள் தென்தமிழும்
வடமொழியும் மற்றும் உள்ள திசை மொழிகளையும் நன்கு பயின்று அம்பலவாணரது அடிமலரை நினைந்து உருகி வாயாரப் பாடுவதே என்று
உணர்ந்து உள்ளம் குழைந்துபாடிபரவசமடைவார்கள்
சிலர்பொருள் வேண்டி மனிதர்களையும் காமவெறி
கொண்டு மகளிரையும் புகழ்ந்துபாடுகின்றனர்
அவ்வாறு அழிந்து விடுகின்ற மனிதர்களைப்
பாடாமல்அழிவற்றஆண்டவனையே பாடவேண்டும்
ஒருவர்மீது அன்பு அதிகமாகும் போது புகழ்ந்து
உரைக்காமல் இருக்க முடியாது
ஆகவே இறைவனிடம் அன்பு மேலிடும் போது இறைவனை உள்ளங்குழைந்து பாடுகின்றார்கள்
பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்கிறார் அருணகிரி நாதர்
பாடுகின்ற பனுவலோர்கள் தேடுகின்ற செல்வமே என்கின்றார் தாயுமானவர்
பக்தியுடன் பரமனைப் பாடினால் பாவப்பிணி ஓடும் பரகதி கூடும் பரமனையே பாட வேண்டும்
பரமனை பாடும் பக்தர்களை நாமும் பணிந்து பரகதியடைவோமாக
போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment