ஓம் நமசிவாய
தண்டியடிகள் புராணம்
"நாட்டமிகு தண்டிக்கும் (மூர்க்கர்க்கும் )அடியேன்"
அவதார தலம் -திருவாரூர்
முக்தி தலம் -திருவாரூர்
குரு பூசை திரு நட்சத்திரம் -பங்குனி சதயம்
7-04-2013 ஞாயிற்றுகிழமை
திருமகள் பூசித்து பேறு பெற்ற புனிதமிகு
திருவாரூர் திருத்தலத்திலே முன்செய்த தவத்தினால் தண்டியடிகள் நாயனார் அவதரித்தார் .
பிறவியிலேயே கண்பார்வை இன்றி பிறந்தார் புறக்கண் இல்லாமல் அகக்கண்ணால் புற்றிடங் கொண்டபுண்ணியனாரைப் போற்றி வணங்கி வலம்
வந்து ஐந்தெழுத்துஓதிக்கொண்டு சிறந்த
சிவத்தொண்டு புரிந்தார்
திருக்கோயிலுக்கு மேற்புறத்தில் உள்ள திருக்குளத்தின் பக்கமெல்லாம் சமணர்களுடைய பாழிகளாகி குளம் பழுது பட்டது அதனை அறிந்த தண்டியடிகள் அக்குளத்தை பெருக அகழ்ந்து தொண்டு செய்ய வேண்டும் என்று கருதினார் குளத்தின் நடுவில் ஒரு கம்பும் குளக்கரையின் மேட்டில் ஒரு கம்பும் ஊன்றி இரு கம்புகளையும் கயிறு கட்டி இணைத்தார் . அக்கயிற்றை தடவிய வண்ணம் குளத்தில் இறங்கி மண்ணை ஒரு கூடையில் எடுத்து கரைமேட்டில் வந்து கொட்டுவார் இப்படி பணி செய்யும்போது இடையறாது ஐந்தெழுத்தை ஓதிய வண்ணமாக இருப்பார்
இவ்வாறு இவர் செய்யும் திருத்தொண்டைப் பொறுக்காத சமணர்கள் மனம் வெதும்பி தண்டியடிகளிடம் வந்து அய்யா மண்ணை அள்ளினால் உயிர்கள் மாளும் ஆதலால் இந்த வேலையை செய்யாதீர் என்று கூறி தடுத்தார்கள்
அவர்களிடம் தண்டியடிகள் திருநீற்றையே சாந்தமாக எண்ணிப் பூசும் சிவபிரானுக்குரிய திருப்பணி இது இதன் பெருமையை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றார்
சமணர்கள் நாங்கள் கூறிய அறநெறியை நீ கேட்கவில்லை உனக்கு கண் தான் இல்லை என்றால் காதையும் இழந்து விட்டாயா? என்றனர் அதற்கு அடிகள் நான் சிவபெருமானுடைய திருவடிகளே அன்றி வேறு ஒன்றும் காணேன் .
மந்த மதியும் காணாக்கண்களும் கேளாச்செவியும்
உங்களுக்கே உள்ளன சிவபுண்ணியத்தின் திறனை
நீங்கள் அறியவில்லை .சிவபெருமானுடைய
திருவருளினால்உலகெல்லாம் அறியும்படி என்
கண்கள் காணவும் உங்கள் கண்கள் குருடாகவும்
பெற்றால் நீங்கள் யாது செய்வீர்கள் ?என்று பதிலுரைத்தார்
உடனே சமணர்கள் அப்படி நீ கண் பெற்றாயானால் நாங்கள் இந்த ஊரில் இருக்க மாட்டோம் என்று கூறி
நாயனார் கையில் இருந்த கூடையையும் மண்வெட்டியையும் பிடுங்கி எறிந்தார்கள்
நாயனார் பூங்கோயிலின் முன் வந்து நின்று எம்பெருமானே தங்களை நிந்திக்கும் சமணர்கள் , திருக்குளங்கல்லும் சிவபுண்ணியத்தையும்
அதனைபுரியும் என்னையும் அவமானஞ் செய்தமையால் அடியேன் மனம் வருந்தினேன்
எல்லாம்வல்ல தாங்கள் இந்த இடர் நீக்கி
அருளவேண்டும் என்று துதித்து திருமடம் சென்று உறங்கினார் .அன்றிரவு கண்ணுதற்கடவுள்
கனவில் தோன்றி
அன்பனே கவலையை விடுக நாளை உன் கண் ஒளி பெறும் சமணர்கள் கண்இழப்பார்கள் அஞ்சாதே
என்று அருளி சோழ மன்னனின் கனவிலும் தோன்றி நமது அன்பன் திருப்பணிக்கு சமணர்கள் இடர் செய்தார்கள்
நீ அவனிடத்தேசென்று அவன் கருத்தை முடிப்பாய் என்று பணித்து மறைந்தருளினார்
பொழுதுபுலர்ந்த உடன் தண்டியடிகளிடம் வந்து
அவரை பணிந்து தான் கண்டகனவு பற்றி கூறினான்
தண்டியடிகளும் சமணர்களுடன் நடந்த வாக்குவாதம் பற்றி எடுத்துரைத்தார்
இது நிகழ்ந்தது இனி இந்த வழக்கை நியாயப்படி முடிப்பீர் என்றார்
அரசன்அமணர்களை அழைத்து கேட்டான் அவர்களும்
இசைந்தார்கள் தண்டியடிகள் முன்னே செல்ல அரசன் பின்னே சென்று குளக்கரையை அடைந்தார்கள்
சமணர்கள்குழுமியிருந்தார்கள் .மன்னன் தண்டியாரை
நோக்கி நீர் கண் பெறுமாறு காட்டும் என்றான்
தண்டியடிகள் சிவபெருமானே பரம்பொருள் அவருடைய
அடிமையாக நான் இருப்பது உண்மையாயின் உலகவர் முன் என் கண்கள் விளங்குக
அமணர்களின் கண்கள் ஒளி விலகுக என்று கூறி
ஐந்தெழுத்து ஓதி திருக் குளத்தில் மூழ்கினார் சிவபெருமானைத் தொழுது குளத்திலிருந்து கண் பெற்று
எழுந்தார் சமணர்கள் கண்களை இழந்து
கலங்கினார்கள் மன்னன் அவர்களை திருவாரூரை விட்டு நீங்குங்கள் என்று உத்தரவு இட்டான் .
மன்னன்சமணப்பள்ளிகளையும் சமணப்பாழிகளையும் இடித்து குளத்தின் கரைகளைபுதுப்பித்து தண்டியடிகள் தாள் மலர் மீது பணிந்தான் .
நாயனார்சிவபெருமானின் திருவருளையே சிந்தித்து
ஐந்தெழுத்தை ஓதி திருப்பணியைநிறைவாக செய்து
சிவசிந்தையுடன் இருந்து முக்கண் பெருமான்
அடிமலர் சேர்ந்தார்
தண்டியடிகள் அகக்கண் கொண்டு புகழையோ
புண்ணியத்தையோ கருதாது கடமையுணர்ச்சியுடன் சிறந்த உறுதியும் ஊக்கமும் கொண்டு திருத்தொண்டு புரிந்தார்
ஐந்தெழுத்தை ஓதுவார் எல்லா நலன்களும் ஒருங்கே
பெறுவார்கள்என்பதற்கும் நிக்கிரக அனுக்கிரக ஆற்றல்
பெறுவார்கள் அதனால் தாம்கண் பெறவும் சிவநிந்தனை செய்தோர் கண் விலக்கவும் ஆற்றல் பெற்றிருந்தார்
திருப்பணிகள்புரிந்தும் புரிவார்க்கு உதவி புரிந்தும்
சிவபெருமானுடைய திருவருளையும் சிவன் அடியார்களின் கருணையையும் பெற்று நாமும்
இந்த நாளில் நலம் பெறுவோம்
போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்

நெஞ்சின் மருவுங் கவளையினை யொழி நீ நின்கண் விழித்தந்த
வஞ்ச அமணர் தங்கண்கள் மறையுமாறு காண்கின்றாய்
அஞ்ச வேண்டா என்றருளி யவர்பால் நீங்கி அவ்விரவே
துஞ்சும் இருளில் அரசன்பால் தோன்றிக் கனவில் அருள்புரிவார்
அன்பனே கவலையை விடுக நாளை உன் கண் ஒளி பெறும் சமணர்கள் கண்இழப்பார்கள் அஞ்சாதே
என்று அருளி சோழ மன்னனின் கனவிலும் தோன்றி நமது அன்பன் திருப்பணிக்கு சமணர்கள் இடர் செய்தார்கள்
நீ அவனிடத்தேசென்று அவன் கருத்தை முடிப்பாய் என்று பணித்து மறைந்தருளினார்
பொழுதுபுலர்ந்த உடன் தண்டியடிகளிடம் வந்து
அவரை பணிந்து தான் கண்டகனவு பற்றி கூறினான்
தண்டியடிகளும் சமணர்களுடன் நடந்த வாக்குவாதம் பற்றி எடுத்துரைத்தார்
இது நிகழ்ந்தது இனி இந்த வழக்கை நியாயப்படி முடிப்பீர் என்றார்
அரசன்அமணர்களை அழைத்து கேட்டான் அவர்களும்
இசைந்தார்கள் தண்டியடிகள் முன்னே செல்ல அரசன் பின்னே சென்று குளக்கரையை அடைந்தார்கள்
சமணர்கள்குழுமியிருந்தார்கள் .மன்னன் தண்டியாரை
நோக்கி நீர் கண் பெறுமாறு காட்டும் என்றான்
தண்டியடிகள் சிவபெருமானே பரம்பொருள் அவருடைய
அடிமையாக நான் இருப்பது உண்மையாயின் உலகவர் முன் என் கண்கள் விளங்குக
அமணர்களின் கண்கள் ஒளி விலகுக என்று கூறி
ஐந்தெழுத்து ஓதி திருக் குளத்தில் மூழ்கினார் சிவபெருமானைத் தொழுது குளத்திலிருந்து கண் பெற்று
எழுந்தார் சமணர்கள் கண்களை இழந்து
கலங்கினார்கள் மன்னன் அவர்களை திருவாரூரை விட்டு நீங்குங்கள் என்று உத்தரவு இட்டான் .
மன்னன்சமணப்பள்ளிகளையும் சமணப்பாழிகளையும் இடித்து குளத்தின் கரைகளைபுதுப்பித்து தண்டியடிகள் தாள் மலர் மீது பணிந்தான் .
நாயனார்சிவபெருமானின் திருவருளையே சிந்தித்து
ஐந்தெழுத்தை ஓதி திருப்பணியைநிறைவாக செய்து
சிவசிந்தையுடன் இருந்து முக்கண் பெருமான்
அடிமலர் சேர்ந்தார்
தண்டியடிகள் அகக்கண் கொண்டு புகழையோ
புண்ணியத்தையோ கருதாது கடமையுணர்ச்சியுடன் சிறந்த உறுதியும் ஊக்கமும் கொண்டு திருத்தொண்டு புரிந்தார்
ஐந்தெழுத்தை ஓதுவார் எல்லா நலன்களும் ஒருங்கே
பெறுவார்கள்என்பதற்கும் நிக்கிரக அனுக்கிரக ஆற்றல்
பெறுவார்கள் அதனால் தாம்கண் பெறவும் சிவநிந்தனை செய்தோர் கண் விலக்கவும் ஆற்றல் பெற்றிருந்தார்
திருப்பணிகள்புரிந்தும் புரிவார்க்கு உதவி புரிந்தும்
சிவபெருமானுடைய திருவருளையும் சிவன் அடியார்களின் கருணையையும் பெற்று நாமும்
இந்த நாளில் நலம் பெறுவோம்
போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment