ஓம் நமசிவாய
இசைஞானியார் புராணம்
"இசைஞானி காதலன் திருநாவலூர்கோன் அன்னவனாம்
ஆரூரன் அடிமை கேட்டுவப்பார் ஆரூரில் அம்மானுக்கன்பராவரே"
குருபூசை திருநட்சத்திரம் -சித்திரைமாதம்-சித்திரை
அவதார தலம் -ஆரூர் கமலாபுரம்
முக்தி தலம் -திருநாவலூர்
25-04-2013-வியாழன்
திருநாவலூரிலே ஆதிசைவர் மரபில் உதித்த சடையனாருக்கு வாழ்க்கைத் துணைவியாக இருந்தவர் இசைஞானி அம்மையார் அரும்பெரும் தவம் புரிந்து சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் புதல்வராகப் பெற்றார் .சிவபக்தியும் பதிபக்தியும்
பூண்டு வாழ்ந்து முடிவில் முழுமுதற் கடவுளாம் பரமேஸ்வரனுடைய பதமலர் சேர்ந்து பரம சுகமுற்றார்
"ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசைஞானியார்" என்று சேக்கிழார் பெருமான் கூறுகின்றார் குற்றமில்லாத கற்புடைய இவருடைய புண்ணியத்தின் திரட்சியே ஓர் உருவாக திரண்டு வந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார் ஆவார்
உலகக் கேடுகளில் முதன்மையானது தீய மைந்தனை பெறுதல், நன்மைகளுள் முதன்மையானது தூய மைந்தனைப் பெறுதல் . ஆகவே திருத்தொண்டத்தொகை பாடி உலகம் உய்வித்த உத்தமப்புதல்வரை ஈன்ற அந்த உத்தமியார் பெருமையை உரைக்கமுடியுமோ?அது எண்ணுக்குள்ளும் எழுத்துக்குள்ளும் அடங்காதது அதனை சேக்கிழார் பெருமான் இவ்வாறுகூறுகிறார்
இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டியாரை என்சிறுபுன்
மொழியால் புகழ முடியுமோ முடியாதெவர்க்கும் முடியாதால்
திருச்சிற்றம்பலம்
போற்றி ஓம் நமசிவாய

🙏🙏🙏🙏🙏
ReplyDelete