ஓம் நமசிவாய
திருமுறைகள் பெருமை
திருமுறை என்பதன் பொருள் திரு என்றால் செல்வம், முறை என்றால் நூல்.மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பதைக் குறிக்கும்
கருவாகி,உருவாகி உழலும் நாம் அதில்
இருந்து மீள தில்லையுள் கூத்தனை தென் பாண்டிநாட்டானை அல்லல் பிறவி அறுப்பானை சொல்லுவதற்கு அரியானின் திருவடியை வாழ்த்தி வணங்கி போற்றி அவன் தாள் பற்றி செல்ல மிக சிறந்த வழிகாட்டியாக அவரே அளித்த பொக்கிசமே திருமுறைகள்
சில திருமுறைப் பெருமைகள்
2.பாலை நிலம் நெய்தல் ஆனது
3.பாண்டியன் சுரம் தீர்த்து கூன் நிமிர்த்தியது
4.தேவார ஏடுகளை தீயில் கருகாமல் பச்சை யாக எடுத்தது எதிர் நீச்சல் இடவைத்தது
5.ஆண் பனை பெண் பனையாகியது
6.விஷத்தினால் இறந்த செட்டி உயிர்பெற்றது
7.எலும்பை பெண்ணாக்கியது
8.சுண்ணாம்புக் காளவாயில் 7 நாட்கள் இருந்தும் உயிர் பிழைத்தது
9.மத யானையை வலம் வரச்செய்து வணங்கவைத்தது
10.மானசரோவரில் மூழ்கி திருவையாற்றில் எழுந்தது
11.கல்லை தெப்பமாக கொண்டு கரையேறியது
12.செங்கல்லைப் பொன்னாக்கியது
13.விருதாசலத்தில் மணிமுத்தாற்றில் இட்ட பொன்னை ஆரூர் குளத்தில் எடுத்தது
14.முதலை விழுங்கிய பிள்ளையை மீட்டது
15.காவேரி பிரிந்து வழி விட்டது
16.நரியை குதிரையாக்கியது
17.வெள்ளானையில் கயிலாயம் சென்றது
18.குதிரையை நரியாக்கியது
19.பிறவி ஊமையை பேச வைத்தது
20.பரம்பொருளான சிவபெருமானே எழுதிய பெருமைக்குரியது
இப்படி திருமுறைகளின் அற்புதங்கள் ஏராளம் அதன் பெருமைகளை அளவிட முடியாது திருமுறைகளை நாளும் ஓதுவோம் சிவானுபவம் பெறுவோம்
போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்
திருமுறைகள் பெருமை
திருமுறை என்பதன் பொருள் திரு என்றால் செல்வம், முறை என்றால் நூல்.மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பதைக் குறிக்கும்
நம்முடைய பிறப்பில் இருந்து இறைவன் திருவடியை அடையும் வரை நமக்கு ஏற்படும் இன்னல்களை நீக்க அவனருளாலே அவன் தாள் வணங்கி நின்று திருமுறைகளைப் பாடி பயன் அடையவேண்டும் நாம் நம்முடைய தேவைகளை திருமுறை
களின் மூலம் பெற்று திருவருளின்
துணையோடு அனுபவிப்பதே சிவானுபவம் ஆகும். இவ்வுலகிற்கு தேவையான பொருள் மற்றும் அருள் உலகத்திற்கு தேவையான அருள் என அனைத்தையும் ஒருங்கே கொடுப்பது திருமுறைகளே
களின் மூலம் பெற்று திருவருளின்
துணையோடு அனுபவிப்பதே சிவானுபவம் ஆகும். இவ்வுலகிற்கு தேவையான பொருள் மற்றும் அருள் உலகத்திற்கு தேவையான அருள் என அனைத்தையும் ஒருங்கே கொடுப்பது திருமுறைகளே
கருவாகி,உருவாகி உழலும் நாம் அதில்
இருந்து மீள தில்லையுள் கூத்தனை தென் பாண்டிநாட்டானை அல்லல் பிறவி அறுப்பானை சொல்லுவதற்கு அரியானின் திருவடியை வாழ்த்தி வணங்கி போற்றி அவன் தாள் பற்றி செல்ல மிக சிறந்த வழிகாட்டியாக அவரே அளித்த பொக்கிசமே திருமுறைகள்
சம்பந்தசுவாமிகள் அருளிய தேவாரத்தில்
வினைநீக்கம் பற்றியே அதிகமாக பாடியுள்ளார்
வினைநீக்கம் பற்றியே அதிகமாக பாடியுள்ளார்
உயிரைப்பற்றிய ஆணவ மலத்தினை நீக்கும்
பொருட்டு பிறப்பு இறப்பு என்ற செயல்களை இறைவன் ஏற்படுத்துகிறார் .இந்த உயிர் நால்வகைத் தோற்றம் ஏழ் வகை பிறப்பு எண்பத்திநாலு லட்சம் யோனி பேதம் என பிறந்து உழல்கிறது இதை கடலை கையால் நீந்திகரையேறுவதை போல என்று அருள்நந்தி சிவாசாரியார் கூறுகிறார்
கருத்தரிக்க,கரு காக்க ,சுகப்பிரசவம் ஆக ,
வாதம் முதலான நோய் இல்லாமல் நடக்க,
கல்வி ஞானம் சிறக்க , படித்து வேலை கிடைக்க ,வேலை ,தொழில் இலாபம் பெற , இல்வாழ்க்கை அமைய ,அமைந்த வாழ்வு சிறக்க ,நாட்களாலும் கோள்களாலும் வரும்
வாதம் முதலான நோய் இல்லாமல் நடக்க,
கல்வி ஞானம் சிறக்க , படித்து வேலை கிடைக்க ,வேலை ,தொழில் இலாபம் பெற , இல்வாழ்க்கை அமைய ,அமைந்த வாழ்வு சிறக்க ,நாட்களாலும் கோள்களாலும் வரும்
இன்னல்களை போக்க ,நோய்நொடி இல்லா
வாழ்வு பெற ,இறைவன் திருவருள் கிடைக்க
அமைதி பெற முக்தி பெற என அனைத்து
வாழ்வியல் மற்றும் வாழ்விற்குப் பிறகும் பெரும் பேறு கிடைக்க திருமுறைகள் வழிகாட்டுகின்றன
வாழ்வு பெற ,இறைவன் திருவருள் கிடைக்க
அமைதி பெற முக்தி பெற என அனைத்து
வாழ்வியல் மற்றும் வாழ்விற்குப் பிறகும் பெரும் பேறு கிடைக்க திருமுறைகள் வழிகாட்டுகின்றன
சில திருமுறைப் பெருமைகள்
1.வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்தது பிறகு திருத்தாளிட்டது
2.பாலை நிலம் நெய்தல் ஆனது
3.பாண்டியன் சுரம் தீர்த்து கூன் நிமிர்த்தியது
4.தேவார ஏடுகளை தீயில் கருகாமல் பச்சை யாக எடுத்தது எதிர் நீச்சல் இடவைத்தது
5.ஆண் பனை பெண் பனையாகியது
6.விஷத்தினால் இறந்த செட்டி உயிர்பெற்றது
7.எலும்பை பெண்ணாக்கியது
8.சுண்ணாம்புக் காளவாயில் 7 நாட்கள் இருந்தும் உயிர் பிழைத்தது
9.மத யானையை வலம் வரச்செய்து வணங்கவைத்தது
10.மானசரோவரில் மூழ்கி திருவையாற்றில் எழுந்தது
11.கல்லை தெப்பமாக கொண்டு கரையேறியது
12.செங்கல்லைப் பொன்னாக்கியது
13.விருதாசலத்தில் மணிமுத்தாற்றில் இட்ட பொன்னை ஆரூர் குளத்தில் எடுத்தது
14.முதலை விழுங்கிய பிள்ளையை மீட்டது
15.காவேரி பிரிந்து வழி விட்டது
16.நரியை குதிரையாக்கியது
17.வெள்ளானையில் கயிலாயம் சென்றது
18.குதிரையை நரியாக்கியது
19.பிறவி ஊமையை பேச வைத்தது
20.பரம்பொருளான சிவபெருமானே எழுதிய பெருமைக்குரியது
இப்படி திருமுறைகளின் அற்புதங்கள் ஏராளம் அதன் பெருமைகளை அளவிட முடியாது திருமுறைகளை நாளும் ஓதுவோம் சிவானுபவம் பெறுவோம்
போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்
_/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
ReplyDeleteதிருமுறை - திரு.சிவகுமார் அவர்களின் திருமந்திர சொற்பொழிவில் தந்த விளக்கத்தின் சுருக்கம்.
திரு - என்றால் சிவன். அதனால்தான். சிவன் திருஅண்ணாமலை, திருசிதம்பரம், திருஆரூர், திருமயிலை என சொல்கிறோம்.
முறை - என்றால் முறையிடுதல், நமக்கு இருக்கும் கவலைகளை, கஷ்டங்களை மற்றவர்களிடம் கூறி நமக்கு அனுக்கிரகம் கேட்பது..
திருமுறை என்றால் எல்லாம் வல்ல ஈசன் சிவனிடம் நம் மனக்கவலைகளை பாடல்கள் மூலம் சொல்வதுதான் திருமுறை.
ஓம் நமசிவாய
ReplyDeleteதிரு என்றால் செல்வம் என்றே பொருள். பிறிதோரிடத்தில் திரு என்பது மரியாதைக்குரிய சொல் (திரு. அருண் என்பது போல)
சிதம்பரத்தை தில்லை என்றோ கோயில் என்றோ தான் குறிப்பிடுவார்கள்
திரு சிதம்பரம் என்பதெல்லாம் மத்திய அமைச்சரைத் தான் சொல்வார்கள்
திரு என்றால் சிவன் என்பது தவறு. திருப்பதி என்றால் சிவன் பதி என்றா அர்த்தம் ? திருவரங்கம் என்றால் சிவன் அரங்கம் என்றா பொருள் ?
திருமுறைகள் என்பன புகழி நூல்கள் (தோத்திரங்கள் என்பதன் தமிழாக்கம்)அது நம் கவலை,கஷ்டம் மட்டும் தீர்க்கும் நூல் அல்ல அது மேலான செல்வங்களை (16)அளிக்கவல்லது .முறை -முறையிடுதல் என்ற பொருள் இந்த இடத்தில் பொருந்தாது உதாரணம் சுந்தரம் என்றால் அழகு என்று ஒரு பொருள். சுந்தரம் என்றால் குரங்கு, வானரம் என்றும் பொருள் ஸ்ரீ என்பதன் நேர் தமிழாக்கம் தான் திரு .யார் திரு என்பதற்கு சிவன் என்று பொருள் கூறியிருந்தாலும் தவறே .ஈஸ்வரன் என்றாலே ஐஸ்வர்யம் தருபவன் என்று தான் அர்த்தம் . இன்னும் புரியவில்லை என்றால் மறுமொழியிடவும்
இன்னும் விளக்க அடியேன் காத்திருக்கிறேன்
போற்றி ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Deleteஅய்யா திரு.அருண் அவர்கள் எதையுமே பிரமாணம் இல்லாமல் எதையாவது செய்கின்றவர் என்பது ஒம்சிவசிவஒம் என ஆரம்பிக்கும் போதே தெரிகிறது ஏற்கெனவே திருமுறைகளில் விளக்கம் சொல்லியும் அவர் தெளிவாகவில்லை 2010க்குமுன் ஒம்சிவசிவஒம் எங்கு போயிற்று
இதென்ன காரா மாடல் மாத்த? புதுசு புதுசா மாத்தி கண்டுபிடிக்க? கால காலமாக ஐந்தெழுத்து மந்திரம் சைவர்களின் சிவ பக்தர்களின் நாடி துடிப்பு உயிர் மூச்சு. அதை மாற்றுபவர்கள் வியாபார நோக்கம் அன்றி வேறென்னவாக இருக்க முடியும் .
ஒம்சிவசிவஒம் சொல்ல திருமந்திரப்பாடல் சொல்கிறார்கள்
சிவசிவ என்கிலர் தீவினையாளர் என்று ,கோவில்களில் சிவ சிவ என எழுதி வைத்துள்ளார்கள் என்று
ஒம்ஹரிஹரிஒம் சொல்ல எங்கே என்ன எழுதி வைத்துள்ளார்கள் இவர்கள் தானே இதையும் சொல்ல சொன்னவர்கள் ஹரி வியாபாரம் போணி ஆகவில்லை ஆதலால் சிவ வியாபாரம் மட்டும் ஓடுகிறது
இவர்கள் மக்கள் ஏமாந்தால் ஓம் முனிமுனி ஓம் என்றும் ஓம் கரு கரு ஓம்
என்றும் ஓம் மாரிமாரி ஓம் என்றும் ஓம் காளிகாளி ஓம் என்றும் மந்திரக்
கோடவுன் வைத்து வெளியிடுவார்கள்
அது போலவே திருமுறை விளக்கம் சொல்கிறார் அருண் அவர்கள் நுனிப்புல்
மேய்ந்து உள்ளர்த்தம் தெரியாமல் .
தாங்கள் சைவம் அநாதி சிவம் அநாதி என்று கூறியது 100 க்கு 100 சரி
பெருமாள் கோவில்களில் இவர்கள் பருப்பு வேகாது
தயவு செய்து வெளியிடுங்கள்
நன்றி
/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
Deleteஅன்பர்களே! வணக்கம்! முதலில் ஒன்றை புரிந்து கொள்ள முயற்சி செய்யவும்.. அடுத்தவர்கள் மனது புண்படும்படி
எழுதுவதை தவிர்க்கவும்.
KV Janani அவர்களுக்கு எனக்கு நீங்கள் சொல்லிய மாதிரி எதுவும் தெரியாது, "ஓம் சிவசிவ ஓம்" மட்டும்தான் தெரியும்.
இந்த "ஓம் சிவசிவ ஓம்" மந்திரம்தான் என்னை, என் அய்யன் சிவனிடம் அழைத்து சென்றது.
உங்கள் கோபத்தை தனித்த பின் படியுங்கள், திரு. சிவனடிமை வேலுசாமி அவர்களிடம் எனக்கு வாதம் பண்ணும் எண்ணம் இல்லை. இந்த பிரமாணம், அப்படி, இப்படி என்று எனக்கு எதுவும் தெரியாது, ஆனால், என் ஈசனை இந்த "ஓம் சிவசிவ ஓம்" என்ற மந்திரம் மூலம் உணர்ந்து இருக்கிறேன்.
ஓம் ஹரிஹரி ஓம், முனி, மாரி இதையெல்லாம் சம்பத்த பட்டவர்களிடம் விளக்கம் கேளுங்கள். எல்லாம் தெரிந்த
உங்களுக்கு நான் இதை சொல்ல வேண்டும் என்று இல்லை. ஏனெனில் நீங்கள் பிரமாணம் தெரிந்தவர், எனக்கு என் ஐயனை மட்டும்தான் தெரியும்.
அடுத்து கோவிலில் ஏன் "சிவசிவ" என்று எழுதியிருக்கிறார்கள் என்பது நான் தெரிந்து கொள்ளவே, உங்களை போல் பிடிவாதமாக வாதம் பண்ண வரவில்லை. தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வதில் தப்பில்லை என்று நினைப்பவன்,
திருமுறை - இது திரு. சிவகுமாரின் விளக்கத்தைதான் சொல்லியிருக்கிறேன். இதில் கோபம் கொள்ள எதுவும் இல்லை. சிறுவர்கள் தவறு செய்தால் திரு. சிவனடிமை வேலுசாமி போல் விளக்கம் தாருங்கள்.. அதை விட்டு ரொம்ப குதிக்க வேண்டாம், கடைசியாக, அது என்ன பிரமாணம்? உண்மையாக எனக்கு தெரியாது...
தெரிந்தால் சொல்லுங்கள்...
நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள்.. நான் என் வழியில் செல்கிறேன். என் வழியில் நீங்கள் வரவேண்டாம்.
நீங்கள் என்ன சொன்னாலும் "ஓம் சிவசிவ ஓம்" என் மூச்சு. ஆனால் உங்கள் வழியை எந்த சூழ்நிலையிலும் குறை சொல்ல மாட்டேன். ஏனெனில், மந்திரங்களையோ, வழிபாட்டையோ (எம் மதமும்) குறை கூறுவது என் அப்பன் சிவனை கொச்சை படுத்துவது என நினைப்பவன்...
நீங்கள் என்னை மாடு என்று சொன்னதில் வருத்தம் இல்லை. மனிதன் என்று கூறி மாடாய் இருப்பதைவிட மனிதனாக பிறந்து மாடாய் வாழ்ந்தாலும் என் சிவனை நோக்கி நான் சொல்கிறேன்..
எல்லாம் தெரிந்த அன்பர்களே! வாழுங்கள்! வளமுடன்!
_/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
ஓம் சிவாய நம!
ஓம் நமசிவாய
Deleteசைவ சமயத்தை பொருத்த வரையில் நமக்கு குருமார்கள் நால்வர்
சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்க வாசகர் . இவர்கள் ஐந்தெழுத்தை தவிர வேறு எதையாவது சொன்னார்களா ?
மேலும் சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கிலும் எங்கேயும்
ஐந்தெழுத்தை தவிர வேறு சொல்லவில்லை .
அப்படி இருக்க புது மார்க்கம் நோக்கில் நம்நாயன்மார்கள் கருத்தில்
உடன்படாமல் செல்வது சைவத்திற்கு விரோதமானது
பிரமாணம்என்பது சிவஞான போதம் ,சிவஞான சித்தியார் ,உண்மை விளக்கம்
திருவருட்பயன், சிவபிரகாசம் போன்ற ஆகம சாரத் தொகுப்பான சாத்திர
நூல்களில்( byelaw ) சூத்திரங்கள் (formula )வகுத்து கொடுத்துள்ளார்கள் .நாம்
அதன் வழி சென்றால் இறைவனை காணலாம் .கண்ணப்பர் சாத்திரம் படிக்கவில்லை அவருக்கு அருள வில்லையா என கேட்கலாம். அவர் சாத்திரம் மட்டுமல்ல எதுவுமே படிக்காத காடன் மூடன் வேடன் .ஆனால்
நாம் படித்துள்ளோமே. அதை தான் மாணிக்கவாசகர் ஆகமமாகி நின்று
அண்ணிப்பான் தாள் வாழ்க என்று சிவபுராணத்தில் அருளியுள்ளார். ஆகமம் எனும் சாத்திரங்கள் மூலம் அணுகினால் அவர் நெருங்கி வருவார்
ஆகவே பிரமாணம் என்பது நம் ஆசார்ய மூர்த்திகள் காட்டிய வழி .சட்டத்தில்
LAW பாயிண்ட் போலவே, நமக்கு சாத்திரங்களில் கூறியுள்ளது LAW பாயிண்ட்
அதை மீறுவது சமயக்குற்றம் .நெருப்பு சுடும் என்று சொல்லி கொடுத்து தான்
தெரியும் .யாரும் தொட்டு உணர்ந்து அது மெய் என சொல்லவில்லை . பெரியவர்கள் சொன்னார்கள் கேட்டோம் .
அப்பரும் சம்பந்தரும் இந்த ஐந்தெழுத்தை கட்டிகாக்க தானே சமணர்களிடமும் பவுத்தர்களிடமும் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் கல்லை கட்டி கடலில் போட்டபோது சொற்றுணை வேதியன் என்ற நமசிவாயமந்திரம் ப்பதிகம் தானே அப்பரை மீட்டது
7 வயதில் உபநயனம் செய்து காயத்திரி மந்திரம் ஓத வேதியர்கள் முற்பட்டபோது துஞ்சலும் துஞ்சலில்லாத என்ற பஞ்சாக்கர திருப்பதிகம்
பாடி அதன் மேன்மை உணர்த்தினாரே சம்பந்தர் அவர் செயல் வீணா?
மந்திரங்களையே குரு முகமாகத்தான் கற்கவேண்டும் .இல்லையென்றால்
அது பலிக்காது .திருடன் சம்பாதிப்பதும் காசு உழைத்து சம்பாதிப்பதும் காசு
ஆக காசு காசு தான் .வழி எது என்பது தான் பிரதானம்
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
Deleteஇது போல பண்போடு எழுதுங்கள் நன்றாக இருக்கும் .
மெய்கண்டார் வயது ஐந்து அவர் மாணவர் அருள்நந்திசிவம் அவர்களுக்கு
வயது 95. சொல்லுவதும் கேட்பதுவும் பக்குவம் வேண்டும் சித்தத்தை சிவன்பால் வைத்தார்கள் எல்லாருக்கும் அடியேன்
கருத்துக்கு நன்றி
போற்றி ஓம் நமசிவாய
_/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
Deleteவணக்கம்! ஐயா, மதிப்பிற்க்குரிய ஜனனி அவர்களின் கருத்தை வெளியிடாவிட்டாலும் என் ஈமெயிலுக்கு அனுப்பிதரவும்... sivanadimaiarun@gmail.com.
/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
ReplyDeleteதிரு. சிவனடிமை வேலுசாமி அவர்களே! எல்லோர் கருத்துக்களையும் வெளியிடுங்கள். மதிப்பிற்குரிய ஜனனி அவர்களின் கருத்துக்களை நீக்கியது தவறு என நினைக்கிறன். அவர்களின் கருத்தை தயவு செய்து வெளியிடுங்கள். நான் அவர்களின் கருத்துக்களை படிக்க ஆவலாய் இருக்கிறேன்.