rudrateswarar

rudrateswarar

Friday, April 12, 2013

ஐந்தெழுத்தின் மேன்மை- 7

                                   ஓம் நமசிவாய


ஐந்தெழுத்தின் மேன்மை-7


திருமுறை.7 பதிகம் 48 
தலம்  - திருப்பாண்டிக்கொடுமுடி



இத்திருப்பதிகம்   கொடுமுடிக்கோயிலில் உள்ள பெருமானது அழகிய திருமேனியைக் கண்டு வணங்கியபொழுது எழுந்த பேரன்பால் "இவரை" யான்மறவேன் என்னும் கருத்தால் அருளிச் செய்தது   இதன்கண் திருவைந்தெழுத்தை எடுத்தோதி அருளினமையின்   இது  நமச்சிவாயத் திருப்பதிகம் என்னும் திருப்பெயர் பெற்றது .


பதிகப்பலன்

இப்பதிகம் பாராயணம்  செய்வோர்க்கு  துன்பம் ஒருகாலும் இல்லை என்பதாம் 

                                   
                                                     திருச்சிற்றம்பலம்



மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
          பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற
         வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
          யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ்
          சொல்லும்நா நமச்சி வாயவே.


இட்ட னுன்னடி ஏத்து வார்இகழ்ந்
           திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாள்இவை என்ற லாற்கரு
          தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு
          தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாஉனை நான்ம றக்கினுஞ்
           சொல்லும்நா நமச்சி வாயவே.


ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர்
          போகும் நாள்உயர் பாடைமேல்
காவு நாள்இவை என்ற லாற்கரு
          தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
           சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
           சொல்லும்நா நமச்சி வாயவே


எல்லை யில்புகழ் எம்பிரான் எந்தை
          தம்பி ரான்என்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
           காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
          யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாஉனை நான்ம றக்கினுஞ்
           சொல்லும்நா நமச்சி வாயவே.


அஞ்சி னார்க்கர ணாதி என்றடி
          யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்
          நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்
           தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்
           சொல்லும்நா நமச்சி வாயவே.


ஏடு வான்இளந் திங்கள் சூடினை
         என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்ப தரைக்க சைத்த
        அழக னேஅந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்
        சோதி பாண்டிக் கொடுமுடிச்
சேட னேஉனை நான்ம றக்கினுஞ்
         சொல்லும்நா நமச்சி வாயவே.


விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
          தேன்வி னைகளும் விண்டன
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
          நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்

          குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேஉனை நான்ம றக்கினுஞ்
          சொல்லும்நா நமச்சி வாயவே.


செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்
          தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாக
          மமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயில்
         ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேஉனை நான்ம றக்கினுஞ்
         சொல்லும்நா நமச்சி வாயவே.


சார ணன்தந்தை எம்பி ரான்எந்தை
        தம்பி ரான்எம்பொன் மாமணீயென்று
பேரெ ணாயிர கோடி தேவர்
        பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்தொ ழுங்கறை
        யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாஉனை நான்ம றக்கினுஞ்
         சொல்லும்நா நமச்சி வாயவே.


கோணி யபிறை சூடி யைக்கறை
           யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
           பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
           தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
           சொல்லு வார்க்கில்லை துன்பமே.



                              திருச்சிற்றம்பலம்


                            போற்றி ஓம் நமசிவாய 
சிவனடிமைவேலுசாமி 


                           
                                   

No comments:

Post a Comment